புளித்த ஏப்பம் என்றால் என்ன?
வயிற்றில் உணவு பாதையில் அதிகப்படியான வாயு குமிழிகள் இருப்பதால் ஏற்படும் கந்தக ஏப்பம், புளித்த ஏப்பம் ஆகும்.வேகமாக சாப்பிடுதல், புகை பிடித்தல், சுவைக்கும் சவ்வு மிட்டாய்கள் சாப்பிடுதல் காரணமாக அதிக வாயு உட்கொள்வதால் இந்த வாயு குமிழிகள் உருவாகின்றன. வாயுவை உண்டாக்கும் சில வாயு நிறைந்த உணவு பொருட்களினாலும் இந்த வாயு குமிழிகள் ஏற்படும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த புளித்த ஏப்பம் ரிஃப்ளக்ஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் பொதுவாக காணப்படுகிறது. எனவே நெஞ்செரிச்சல், பருமன், வாயு வெளியேறுவது போன்ற உணர்வு, வயிற்றுப் பொருமல், குமட்டல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுதல் போன்றவை இதனுடன் தொடர்புடைய அறிகுறிகளாகும். இந்நோயின் அறிகுறிகள் இரவில் மற்றும் உணவிற்கு பின்னர் மோசமடைவதால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் முட்டுக்கொடுத்து தூங்கும் நிலைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஹைட்ரஜன் சல்பைட் என்னும் வேதிபொருளின் வாயு உற்பத்தி காரணமாக இந்த புளிப்புப் ஏப்பம் ஏற்படுகின்றன. செரிமான அமைப்பு மற்றும் வாய்வழி குழியில் உள்ள பாக்டீரியா மூலம் உட்கொள்ளும் உணவில் ஏற்படும் முறிவு காரணமாக இந்த வாயு உற்பத்தியாகிறது. ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வேதிப்பொருளை வெளியிடும் காய்கறி பொருட்களான ப்ரோக்கோலி மற்றும் ஆல்கஹால் மற்றும் அதிக புரத சத்து நிறைந்தவையாகும். அடிக்கடி மற்றும் நாள்பட்ட புளிப்புப் ஏப்பம் ஏற்பட பிற பொதுவான காரணங்கள், செரிமான நோய் போன்ற நோய்களான காஸ்ட்ரோ-ஓசோபாகல் ரிஃப்ளக்ஸ் நோய் (ஜி.இ.ஆர்.டி) மற்றும் எரிச்சல் குடல் நோய்க்குறி ஆகும். வயிற்றில் இருந்து வெளிவரும் இந்த வாயு அடிக்கடி வாயு குமிழிகளாக வெளிவருகின்றன. உணவு நஞ்சாக்குதல், குறிப்பிட்ட மருந்துகள், மன அழுத்தம் மற்றும் கர்ப்பம் போன்றவை இந்த புளித்த ஏப்பம் ஏற்படுவதற்கான மற்ற அறிகுறிகளாகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயாளியின் முழுமையான மருத்துவ அறிக்கை மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் இந்த புளித்த ஏப்பத்திற்கான நோயறிதல் மேற்கொள்ளப்படுகிறது, ஜி.இ.ஆர்.டி. நோயை வெளியேற்ற எண்டோஸ்கோபி சிகிச்சை முறை மேற்கொள்ளப்படலாம்.
உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் தேவையற்ற மற்றும் எரிச்சலூட்டும் புளிப்புப் ஏப்பங்களை அகற்ற முடியும். சில வீட்டு வைத்தியம் புளிப்புப் ஏப்ப பிரச்சனையை குறைக்க உதவும். பச்சை தேயிலை தேநீர் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவும் சிறந்த காரணிகளில் ஒன்றாகும். இதில் சிறந்த ஆன்டி பாக்டீரியா பண்புகள் உள்ளன. ஆப்பிள் சைடர் வினிகர் குடல் நாளத்தை ஆரோக்கியமான சமநிலையில் பராமரிக்க உதவும் மற்றொரு மூலப்பொருளாகும். இது குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்களின் அதிகரித்த வளர்ச்சியினை சோதிக்க உதவுகிறது. ப்ரோக்கோலி, முளை கட்டிய பயிர்கள் மற்றும் பூண்டு போன்ற வாயுவினை தூண்டக்கூடிய உணவு பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டும். புகை பிடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். பால் சார்ந்த உணவு பொருட்கள் தவிர்க்கப்படவேண்டும். காற்று நிரம்பிய குளிர்பானங்கள் இந்த புளித்த ஏப்பம் ஏற்படுவதற்கான முக்கிய பங்களிக்கிறது, அதனால் இது தவிர்க்கப்பட வேண்டும்இதே போல் மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட தீர்வுகள் பலன் அளிக்கவில்லை எனில் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும், அவர் இந்த வாயு உற்பத்தியை குறைக்க அமில எதிர்ப்பி மருந்துகளை பரிந்துரைப்பார். செரிமான கோளாறு பிரச்சினைகளை தொடர்ந்து ஏதேனும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறதா என்று கண்டறிய மருத்துவர் சில சோதனைகளை நடத்தலாம்.