சுருக்கம்
எடிமா என்று அழைக்கப்படும் வீக்கம் உடலின் திசுக்களில் அதிகப்படியான திரவம் சேர்வதால் ஏற்படுவதாகும். இதனால் வீங்கிய திசுவின் மீதுள்ள தோலை சூடாக, மென்மையாக மற்றும் விரிவடைய செய்கிறது. எடிமா வழக்கமாக கைகள் மற்றும் கால்களில் (பெரிபெரல் எடிமா) ஏற்படுகிறது. இருப்பினும், அது உடலின் பிற பாகங்களிலும் ஏற்படலாம். கண்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கம் பாபில் எடிமா மற்றும் மஸ்குலர் எடிமா-வாலும், வயிற்றில் அஸ்ஸிட்ஸ், உடல் முழுவதும் அனாசர்க்கா தோல் மற்றும் சளி சுரப்பிகள்(பொதுவாக தொண்டை, முகம், உதடுகள் மற்றும் நாக்கு) ஆஞ்சியோஎடிமா-வாலும் நுரையீரல் பல்மோனரி எடிமா-வாலும் மற்றும் மூளை செரிப்ரல் எடிமா-வாலும் பாதிக்கப்படுகிறது. கைகள் மற்றும் கால்களில் ஏற்படக்கூடிய பெரிபெரல் எடிமா, பொதுவாக இரத்த ஓட்டத்தில் குறைபாடு(சிரைக் குறைபாடு), இதய செயலிழப்பு, சிறுநீரக பிரச்சினைகள், இரத்த சீரம் புரதங்கள், கல்லீரல் நோய், நுரையீரல் சீர் குலைவுகள் மற்றும் குறைபாடு நிணநீர் அமைப்பில் குறைபாடு(லிம்பெடிமா) போன்றவற்றால் ஏற்படுகிறது.
வீக்கம் அது எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை பொறுத்து உடலின் ஒரு பகுதி அல்லது இரு பகுதியிலும் ஏற்படுகிறது. கர்ப்பகாலத்தில், மாதவிடாய் சுழற்சி காலங்களில், மேலும் நீண்ட கால வாய்வழி கருத்தடை மாத்திரைகள் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்படுத்தும் பரவலாக பெண்களுக்கு வீக்கம் ஏற்பட காரணமாகிறது. இந்த வீக்கம் நீண்டகால ரத்தசோகை மற்றும் தைராய்டு சுரப்பிகளில் உண்டாகும் குறைபாடு ஆகியவை உள்ளவர்களுக்கு வழக்கமாக ஏற்படுகிறது. மன அழுத்தக் கட்டுப்பாடு, கால்சியம் சேனல் பிளாக்கர்கள் (உயர் இரத்த அழுத்தத்திற்கு) மற்றும் ஸ்டெராய்டுகள் போன்ற சில மருந்துகள், பெரிபெரல் எடிமாஉண்டாக காரணமாக இருக்கிறது. அடிப்படை காரணத்தை பொறுத்து, வீக்கம் சிறிது காலமே நீடிக்கும் அல்லது காலப்போக்கில் நாள்பட்ட வீக்கமாக தொடர்ந்து நீடிக்கும். வீக்கத்திற்கான அடிப்படை காரணத்திற்கு சிகிச்சை அளிப்பதே வீக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகளில் முதல் படியாகும். காலுறைகள் பயன்படுத்துதல், உடல் எடையை குறைத்தல், படுத்திருக்கும்போது காலை உயர்த்தியே வைத்திருத்தல் மற்றும் உப்பு கட்டுப்பாட்டுடன் உணவு உண்ணும் வழக்கம் போன்ற பிற நடவடிக்கைகளாகும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.