உடலை அசைப்பதில் இடர்ப்பாடு என்றால் என்ன?
உடலை அசைப்பதில் இடர்ப்பாடு என்பது தானாக நிகழ்கிற உடலின் தசை அசைவுகளாகும். இது மனச்சோர்வு, மனச்சிதைவு நோய் மற்றும் பிற மன நோய்களைக் குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் உளப்பிணியெதிர் மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படும் அரிதான நோயாகும். இந்த நோயால் முகம், மேல் மூட்டு தசைகள் மற்றும் சில நேரங்களில் கீழ் மூட்டு தசைகளும் பாதிப்படைகின்றன. இந்நோயால் ஒருமுறை பாதிக்கப்பட்டுவிட்டால், அது நிரந்திரமாக இருக்கலாம், ஆனால் மிதமான வீரியம் கொண்ட உளப்பிணியெதிர் மருந்துகளுக்கு மாறுவதன் மூலம் அதன் தீவிரத்தை குறைக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
உடலை அசைப்பதில் இடர்ப்பாடு, பாதிக்கப்பட்ட தசைகளில் அதிரும் அசைவுகளுடன் கூடிய விறைப்பை விளைவிக்கும். மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- நாக்கு வாயின் மேல் பகுதியில் ஒட்டிக்கொள்வது.
- கண்களை விரைவாக இமைத்தல்.
- உதட்டை சப்புதல் அல்லது சுருக்குதல்.
- முகச்சுளித்தல்.
- நாக்கை துருத்துதல்.
- கன்னத்தில் அதைப்பு.
- பியானோ வாசிப்பது போன்ற விரல் அசைவுகள்.
- பாதங்களை மெதுவாக தட்டுதல்.
- விரல்களை சுழற்றுதல்.
- இரு பக்கங்களுக்கும் சாய்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நரம்பு செல்களிடையே தொடர்பு பரிமாற்றத்திற்காக நமது மூளையில் டோபமைன் என்னும் நரம்பணுக்கடத்திகள் வெளிப்படுத்தப்படுகின்றன. செல்களில் டோபமைன் அளவு குறையும் போது, அது கைகளில் அதிரும் அசைவுகளை விளைவிக்கிறது. பொதுவாக, மனச்சிதைவு நோய், உளப்பிணிகள், இருமுனை சீர்குலைவுகள் மற்றும் இது போன்ற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள் மூளையில் டோபமைனின் அளவைக் குறைக்கலாம். இத்தகைய உளப்பிணியெதிர் மருந்துகளை 3 மாதங்களுக்கு மேலாக உட்கொள்ளுவதால் டோபமைன் உணர்திறன் அதிகரித்து உடலை அசைப்பதில் இடர்ப்பாடு நோயை உண்டாக்குகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடலை அசைப்பதில் இடர்ப்பாடு நோயின் அறிகுறிகள் படிப்படியாக அல்லது சில நேரங்களில் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திய பிறகும் தொடங்கலாம். அதனால் இந்த நோயை கண்டறிவது சற்று கடினமானது. உளப்பிணியெதிர் மருந்துகளை உட்கொள்ளும் போதே முறைப்பட்ட நுண்ணாய்வு மற்றும் உடல் பரிசோதனைகள் மூலம் அறிகுறிகளை முன்னரே கண்டறியலாம். வைட்டமின் பி12 அளவு, ஹோமோசிஸ்டைன் அளவை மதிப்பீடுதல் போன்ற சில இரத்த பரிசோதனைகளோடு கூடிய சிடி ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) ஸ்கேன் மூலம், அதிரும் அசைவுகளை ஏற்படுத்தும் பிற நோய்களை கண்டறிய முடியும்.
பொதுவாக, உடல் அசைவை இடர்படுத்தும் நோயின் அறிகுறிகள் உண்டாகியிருந்தால், தானாக நிகழ்கிற அசைவுகள் பழைய நிலைக்கு திரும்பச்செய்வது மற்றும் நிறுத்துவது கடினம். இருப்பினும், முன்னரே கண்டறியப்பட்டு, உளப்பிணியெதிர் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துதல் அல்லது அம்மருந்துகளின் அளவை குறைத்தல், இந்நோய் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கலாம். இரண்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (ஃப்.டி.ஏ) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளான வால்பெனசைன் மற்றும் டெயியூட்ராபரபென்சைன் மூளையில் டோபமைன் அளவை பராமரிக்கவும் அசைவுகளை குறைக்கவும் உதவும். மோசமான தருணங்களில், ஆழமான மூளை தூண்டுதல் (டி.பி.எஸ்) செய்து அசைவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.