பல் வலி - Toothache in Tamil

Dr Razi AhsanBDS,MDS

February 07, 2019

March 06, 2020

பல் வலி
பல் வலி

சுருக்கம்

உலக அளவில் பல் மருத்துவ நடைமுறை பயிற்சிகளில் பல் வலி பொதுவான ஒரு நிலைமை ஆகும். சில நொதிகளால் ஆரம்பிக்கப்பட்டு மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சிறப்பு உயிரணுக்களில் பரவும் ஒரு விரும்பத்தகாத உணர்ச்சி தான் இந்த பல் வலி. துன்பம், வேதனை போன்ற எல்லா உணர்வுகளும் இதில் தோன்றும். பல் நோய்கள், பல் குழிகள் அல்லது பல் காயங்கள் காரணமாக பல்வலி ஏற்படலாம். பல்வலியின் சிகிச்சை எப்போதும் இரண்டு மடங்காகும், முதலில் நோய் கண்டறிதல், இரண்டாவது அதன் சிகிச்சை. தேவையான பல் செயல்முறைகளுடன் மருந்துகள் எடுத்துக் கொண்டு வாய் சுகாதாரம் பராமரிக்கப்பட்டு வந்தால் 2-3 நாட்களுக்குள் பல் வலி சரியாகி விடும்.மேலும் படிக்க்க.மேலும் படிக்கக

பல் வலி காரணங்கள் என்ன - Causes of Toothache in Tamil

பல் வலிக்கு பல காரணங்கள் உள்ளன. அவை, பற்குழி, காயம், பல் மிளறி அரிப்பு, பற்கள் அரைப்பு, பல் புண், பல் அதிக உணர்திறன், தெறித்த பல், சேதமடைந்த பூச்சு மற்றும் ஈறுகளின் நோய் ஆகும். பல் வலியின் உண்மையான காரணத்தைத் தீர்மானிக்க ஒரு மருத்துவராய் அணுகுவதே உகந்தது, சுய பரிசோதனை செய்வதை தவிர்க்கவும்

  • புல்பல் பல் வலி
    இது புல்பல் திசுக்கள் உமிழ்நீர் அல்லது காற்றுடன் தொடர்பில் வரும்போது உண்டாகும். அத்தகைய ஒரு பல் வலியினால் ஆழ்ந்த கேரியஸ், அரிப்பு, பல் முறிவு அல்லது பற்களின் பிளவு ஏற்படலாம். கடுமையான புல்பல் பல் வலி - இனிப்பான, வெப்பமான மற்றும் குளிர்ச்சியான பதார்த்தங்களினால் தாக்கத்தை ஏற்படுத்தும், சில சமயம் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு துடிக்க வைக்கும் வலியயும் உண்டாக்கும்
  • பற்சார்ந்தவை தூண்டும் பல் வலி
    இத்தகைய பல் வலிக்கு பிதற்றல், இடயுறினால் அழுத்தம், அருகில் உள்ள பல்லுடன் உரசல் ஆகியவை காரணமாக இருக்கலாம். மற்ற காரணங்கள் சரியாக சுத்தம் சேய்தல், பல் குறுக்கீடு, பல் நிரப்பிகள் மற்றும் ஆழமான நிரப்பிகள், பல் மற்றும் தொடர்பு பகுதிக்கு உள்ள இடம் போன்ற பல் சிகிச்சைகள் ஆகும். இது புல்பல் தொற்றின் தோடற்ச்சியாக வரலாம், அருகில் உள்ள பல்லின் வீக்கத்தாலோ, சைனஸ் குழி அல்லது எலும்பு தோற்று பரவுவதனாலும் வரலாம். இந்த பல் வலியினால் அதிகமான பற்கள் பாதிக்கபட்டால் அதற்க்கு காரணம் : வலியால் பல் கடிப்பது, இரவில் கடிப்பது, பல்லை இருக்க கடிப்பது போன்றவை. பின்னல் இருக்கும் பல்லில் இருந்து அதிக அழுத்தத்தின் காரணத்தால் எலும்பு மாற்றங்கள் உண்டாகி டி.எம்.ஜேயின் சீர்கேடாகும். டி.எம்.ஜே என்பது தற்காலிக மண்டலிகல் மூட்டுகள் ஆகும், அவை, கீழ் தாடையை முகத்தோடு இணைக்கும் ஒரே கூட்டுத் தொகுதி ஆகும். டி.எம்.ஜேயின் காயங்களால் பல் வலி ஏற்படலாம்.
  • தெறித்த  பல்
    மிலறி, பல் திசு போன்ற பல்லின் வெவேறு அடுக்குகளில் தெறிப்பு ஏற்பட்டு முறிவு ஏற்படலாம், இதற்க்கு வெவேறு அறிகுறிகள் உள்ளன. டென்டினால் துபே என அழைக்க-ப்படும் இடத்தில் உள்ள திரவியத்தின் அசைவினால் கூட பல் வலி வேறு படும். சாப்பிட போது  மாறுபட்ட அழுத்தத்தினால் இந்த திரவம் அசைய தொடங்குகிறது
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

பல் வலி தடுத்தல் - Prevention of Toothache in Tamil

பல் கரீஸ், புல்பல் நோய்கள், பல்லை சுற்றிய வலி இவை அனைத்தையும் குறைத்தால் பல் வலியை தடுத்துவிடலாம். பல் வலியை தடுக்க கீழ் உள்ளவை சில சுய உதவி யுத்திகள் ஆகும் 

  • தினசரி உணவில் உட்கொள்ளும் சுக்ரோஸ் (சர்க்கரை) தரத்தை குறைக்கவும்
  • உணவு மற்றும் சிற்றுண்டிகளுக்கு இடையில் உண்பதை குறைக்கவும்
  • தினசரி  இரண்டு முறை பல் துலக்கவும்
  • குளோரேக்டைடைன் போன்ற ஒரு பாக்டீரியாசிடால் வாய் கழுகியை பயன்படுத்தவும்.
  • மேற்பூச்சு ஃப்ளோரைடு பற்பசை மற்றும் ஜெல்களை பயன்படுத்துதவும்.
  • நார்ச்சத்து உணவு சாப்பிடவும் .
  • உணவு ஒழுங்காக மென்று விழுங்கவும்.
  • சர்க்கரை அற்ற ச்சீவிங் கம் பயன்படுத்தவும்.
  • மென்மையான பல் மேற்பரப்பு பராமரிக்கவும்
  • அனைத்து குழிகளேயும் நிரப்ப வேண்டும்.

பல் வலி சிகிச்சை - Treatment of Toothache in Tamil

பல் வலியின் சிகிச்சை நோய் அறிதலை பொறுத்தது. பல் வலியின் காரணத்தை கண்டுபிடித்து விட்டால் ஒரு மருத்துவர் கீழ் கண்ட செயல் முறைகளை தொடருவார்

  • சீழை வடிப்பது : பல் மருத்துவர் சீழ் மற்றும் கசிவுகளை வடித்து விடுவார்
  • நேரடி கூழ் தொப்பி இடுதல்: பொதுவாக இதம் தரும் கரைசல் அல்லது கால்சியத்தை தடவி புத்துணர்வூட்டபடும். இதற்க்கு அய்யோடோபோம் கால்சியம் போன்ற பசை பயன்படுத்தப்படுகிறது
  • வேர் கால்வாய் சிகிச்சை: இது ஒரு பொதுவான செயல்முறை. வேர் கால்வாய் சிகிச்சை அல்லது ஆர்.சீ.டி எனபடுவது பாதிக்கப்பட்ட அல்லது தோற்று பாகத்தை பற்குழியிலிருந்து அகற்றி விட்டு குட்டா பெர்சா கும்புகளை வைப்பதாகும். இது மருத்துவர்களால் அதிகம் தேர்ந்தெடு-க்கப்பட்டு செய்யப்படும் ஒரு பழமை வாய்ந்த சிகிச்சையாகும்
  • பல் பிரித்தெடுத்தல்: சிகிச்சையில் பற்கள் அகற்றப்படுவது கடைசி தேர்வாகும். பல் டாக்டர்களின்படி, பற்களை காப்பாற்ற அனைத்து செயல்முறைகளும் தோல்வியடையும் வரை ஒருபோதும் பற்களை நீக்க கூடாது. மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதன் முக்கியத்துவத்தை கொண்டுள்ளன, இதனால் வாய் சுகாதாரம் மேம்படுத்த வேண்டும். பல் அல்லது பற்கள் அகற்றப்பட வேண்டும் என்றால் கவலை வேண்டாம், அதனை அகற்றுவது நவீன பல் மருத்துவ முறைகள் எளிதானது மற்றும் வலியற்றது.
  • மருந்துகள்: பல்வலி தொடர்ந்து இருந்தால், வலி நிவாரணிகள் ஆகிய வழங்கப்படும். டிக்ளோபெனாக்சோடியம்(டிவொன்), இப்யூபுரூஃபன், குடுக்கபடுகின்றன. சில சந்தர்ப்பங்களில், அமோக்சிசினைன் மற்றும் ஆகுமெடின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • அறுவைசிகிச்சை: சில சந்தர்ப்பங்களில் கிங்கிவேக்டோமி மற்றும் கிங்கிவோப்லாச்ட்டி, மடிப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஒட்டு பதிப்பு தேவைப்படலாம்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Toothaches
  2. healthdirect Australia. Toothache and swelling. Australian government: Department of Health
  3. Tara Renton. Dental (Odontogenic) Pain. Rev Pain. 2011 Mar; 5(1): 2–7. PMID: 26527224
  4. Nidirect [Internet]. Government of Northern Ireland; Toothache
  5. Perth Children's Hospital, Government of Western Australia, Department of Health [Internet] Dental - Toothache

பல் வலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for பல் வலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.