ட்ரைக்கொமோனியாஸிஸ் என்றால் என்ன?
ட்ரைக்கொமோனியாஸிஸ் என்பது பாலினத்தால் பரவுகின்ற ஒரு நோயாகும், இது முதன்மையாக ஒட்டுண்ணி தொற்று காரணமாக ஏற்படுகிறது. இந்த நோய் ஆண்களை விட பெண்களில் மிகவும் பொதுவானது மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிளும் மிகவும் பொதுவானது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சில தனிநபர்களில், பெரும்பாலும் பெண்களில், நோய் எந்த அறிகுறிகளையும் உருவாக்குவதில்லை. இதனால் நோயறிதலில் தாமதம் ஏற்படலாம். பெண்களில் காணப்படும் ட்ரைக்கொமோனியாஸிஸின் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- பிறப்புறுப்பு மண்டலத்தில் எரிச்சல் அல்லது அரிப்பு.
- பச்சை அல்லது மஞ்சள் நிற நுரையுடன் யோனி வெளியேற்றம்.
- யோனியிலிருந்து துர்நாற்றம்.
- உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் அசௌகரியம்.
- சிறுநீர் கழிக்கும் போது சிரமம்.
- அடிவயிற்று வலி.
ஆண்களில் காணப்படும் ட்ரைக்கொமோனியாஸிஸின் அறிகுறிகள் பின்வருமாறு:
- பிறப்புறுப்பு மண்டலத்தில் எரி்ச்சல் ஏற்படும்.
- சிறுநீர் கழித்தல் விந்து வெளியேற்றத்திற்கு பிறகு அசௌகரியம்.
- ஆண்குறியில் இருந்து அசாதாரண வெளியேற்றம்.
- இந்த அறிகுறிகள் தோன்றி 5 முதல் 28 நாட்களுக்குள் தொற்று ஏற்படலாம்.
சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், இந்த நோய் மனித நோயெதிர்ப்புத் திறன் வைரஸ் (எச்.ஐ.வி) நோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ட்ரைக்கொமோனாஸ் வஜைனாலிஸ் என்னும் ஒட்டுண்ணி காரணமாக ட்ரைக்கொமோனியாஸிஸ் ஏற்படுகிறது. இந்த தொற்று பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது (யோனி, குத அல்லது வாய்வழி பாலியல் தொடர்பு).
பல கூட்டாளிகளுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்பவர்களுக்கு இந்த தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ட்ரைக்கொமோனியாஸிஸை கண்டறியும் பொருட்டு, மருத்துவர் பின்வரும் சோதனைகளை நடத்துவார்:
- இடுப்புக்குழி சோதனை.
- திரவ மாதிரியின் ஆய்வக சோதனை.
- சிறுநீர் சோதனை.
இந்த நோய் உடலில் இருந்து ஒட்டுண்ணியை நீக்குவதில் உதவும் வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உதவியுடன் எளிதாக சிகிச்சையளிக்கப்படுகிறது. எப்படியும் தொற்று ஏற்படும் வாய்ப்புகளை தவிர்க்க இரு கூட்டாளிகளும் (நபர்களுக்கும்) மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்தகைய ஒரு பால்வழிபரவும் நோயைத் தடுக்கும் ஒரே வழி, பாதுகாப்பான பாலினத்தை கடைப்பிடிப்பதோடு பல கூட்டாளிகளிடம் (நபர்களிடம்) உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்தல் ஆகும். ஆணுறைகளின் பயன்பாடு மூலம் நோய் உண்டாவதற்கான அபாயத்தை குறைக்கலாம், ஆனால் அதை முற்றிலும் அகற்றப்படாது.
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் இந்த நிலையைப் பற்றித் தெரிவித்தல் மற்றும் பால்வழிபரவும் நோய்கள் ஏற்பட்ட முந்தைய வரலாறு பற்றி விவாதிப்பதன் மூலம் நோய் உண்டாவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம்.