கர்ப்ப காலத்தில் யோனிக்கழிவு வெளியேற்றம் என்றால் என்ன?
கர்ப்பகாலத்தின் போது, வெள்ளையாகவோ அல்லது பால் போன்றோ, மெலிதான, மிதமான-வாடையுடன் வஜினாவிலிருந்து வெளியேறும் லிகோர்கோயா என அழைக்கப்படும் வெளியேற்றம் காணப்படுகிறது. இந்த வெளியேற்றத்தின் அளவு, அடுக்குநிகழ்வு மற்றும் நிலைத்தன்மை மாறுப்படக்கூடியது என்றாலும், சாதாரணமாகவேக் கருதப்படுகின்றது. அதிகரித்த யோனி வெளியேற்றம் என்பது கர்ப்பக்காலத்தின் ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருப்பதோடு கர்ப்பக்காலம் முழுவதும் தொடர்ந்து ஏற்படக்கூடியது. பிரசவக்காலத்தை நெருங்கிவிட்டதின் அடையாளமாக கர்ப்பத்தின் கடைசி வாரங்களில் கெட்டியான கோழை வெளியாற்றத்தின் வரிகள் காணப்படுகிறது.
சில நேரங்களில், யோனியிலிருந்து அசாதாரண வெளியேற்றம் ஏற்படலாம், இது வேறுபட்ட அறிகுறிகளுடன் வித்தியாசமான நிறத்தையும் துர்நாற்றத்தையும் கொண்டிருக்கும். இவ்வாறு வெளியேற்றம் ஏற்படும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து தக்க சிகிச்சை செய்தல் அவசியம்.
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சாதாரண வெளியேற்றத்திற்கான அறிகுறிகள் பின்வருமாறு:
- மெலிதான அல்லது கெட்டியான கோழை வெளியேற்றம்.
- வெள்ளை அல்லது பால் போன்ற நிறம் கொண்ட வெளியேற்றம்.
- மிதமான வாடை.
- கர்ப்பக்காலத்தின் முடிவில் பிரசவத்தின் அறிகுறியாக ஏற்படும் இரத்தத்தின் கோடுகள்.
நோய்த்தொற்றுடைய அல்லது அசாதாரண வெளியேற்றதிற்கான அறிகுறிகள் பின்வருமாறு:
- மஞ்சள், பச்சை அல்லது சாம்பல் நிறமாக உருவெடுக்கும் நிறமாற்றம்.
- வலுவாகவும் அருவருக்கத்தக்கவும்(ஃபவுல்) ஏற்படும் துர்நாற்றம்.
- சிவந்திருத்தல் அல்லது அரிப்புத்தன்மை ஏற்படுதல்.
- கருவாயில் உண்டாகும் வீக்கம்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
சாதாரண யோனி வெளியேற்றத்தின் முக்கிய காரணங்களுள் அடங்குபவை:
- ஹார்மோனல் அளவுகளிலும், கருப்பை வாயிலும் உண்டாகும் மாற்றங்கள் (பிரசவிக்கும் போது குழந்தை செல்வதற்காக ஏற்படும் மாற்றம்).
- நோய்த்தொற்றை தடுக்க உதவும் உடல்நிலை மாற்றங்கள்.
- குழந்தையின் தலை கருப்பை வாயில் ஏற்படுத்தும் அழுத்தம் (கர்ப்பக்காலத்தின் இறுதிக்கட்டத்தில்).
அசாதாரண வெளியேற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- நோய்த்தொற்றுகள், பொதுவாக ஈஸ்ட் தொற்றுகள்.
- பாலியல் தொடர்பு மூலம் பரிமாற்றமாகும் நோய் (எஸ் டி டி).
- கர்ப்பக்காலத்தை சார்ந்து ஏற்படும் சிக்கல்கள், அதாவது பிளசென்டா ப்ரேவியா அல்லது நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்றவையாகும்.
- தக்கவைக்கப்பட்ட வெளிப் பொருட்கள் (டேம்பன், ஆணுறை) அல்லது அழற்சி (கிருமிநாசினிகள், நாற்றமகற்றிகள் அல்லது லூப்ரிகண்டுகள் ஆகியவைகளின் பயன்பாடுகளின் காரணமாகவும் ஏற்படும்).
- செர்விக்கல் எக்டோபி அல்லது பாலிப்ஸ்.
- கட்டிகள்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர் பாலியல் செயல்பாடு மற்றும் மருத்துவ வரலாறு போன்றவைகளின் முழுமையான வரலாற்றை எடுத்துக்கொள்வதோடு, மேலும் பிளப்பான், அடிவயிற்றில் அழுத்துசோதனை மற்றும் இருகைசார் சோதனை ஆகிய சோதனைகளின் மூலம் வஜினா மற்றும் கருப்பை வாயை முழு பரிசோதனை செய்யக்கூடும். மேலும் அறிவுறுத்தப்படும் கூடுதல் சோதனைகள் பின்வருமாறு:
- யோனி சுரப்புகளின் pH ஐ சோதனை செய்தல்.
- உயர் வஜினல் ஸ்வாப் (ஹெச் வி எஸ்).
- கிளமிடியா, கோனாரீயா மற்றும் டிரிகோமோனிசஸ் ஆகியவற்றிற்கான மூன்று NAAT பரிசோதனை (நியூக்ளிக் அமிலம் பெருக்கம் சோதனை).
- க்ளெமிடியா ஸ்கிரீனிங்.
- எஸ்.டி.டி களுக்கான ஸ்கிரீனிங்.
யோனி வெளியேற்றதிற்கான பராமரிப்பு தடுப்பானாக மட்டுமின்றி சிகிச்சை நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது அவை பின்வருமாறு:
- சௌகரியமான, தளர்வான பருத்தி உள்ளாடைகளை உபயோகிப்பதோடு ஜெனிடல் பகுதியை உலர்ந்ததாக வைப்பதன் மூலம் நோய்த்தொற்றை தவிர்க்க முயற்சி செய்யலாம்.
- வஜினல் ஆரோக்கியத்தை முன்னேற்ற உங்கள் உணவுப்பழக்கத்தில் தயிர் மற்றும் பிற நொதிக்கவைக்கப்பட்ட உணவை சேர்த்துக்கொள்வது நன்று.
- தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க, வஜினல் கிரீம்ஸ் அல்லது சப்போசிட்டரிகள் பரிந்துரைக்கப்படுகின்றன, அவை பின்வருமாறு:
- ஃப்ளுகோனசோல்.
- கிளாட்ரிமஸோல்.
- மெட்ரோனிடசோல்.
- கிளிண்டமிசைன் 2% கிரீம்.
- இட்ராகனசோல்.