நெல்லிக்காய், இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு வீட்டு உபயோகப் பெயர் மற்றும் பழமை வாய்ந்த ஆயுர்வேத நிவாரணிகளில் ஒன்று ஆகும். இந்த பளபளக்கும் பச்சைக் காய்களை அறிந்து இருக்காத ஒரு நபர் இந்த நாட்டில் இருக்க முடியாது, கூடவே அது இந்திய அருநெல்லிக்காய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது மற்றும் உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் மூலிகை சார்ந்த மருத்துவத்தைப் பின்பற்றுபவராகவோ அல்லது வீட்டு நிவாரணிகளை மிகவும் விரும்புபவராகவோ இருக்கும் பட்சத்தில், இதன், நோயைக் குணமாக்குதல் போன்ற நன்மை தரும் பண்புகளில் குறைந்தபட்சம் ஒன்றின் மூலமாக, கண்டிப்பாக ஏற்கனவே நீங்கள் பயன் அடைந்து இருந்திருப்பீர்கள். இது போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஊட்டமளிக்கும் நன்மைகள், கைக்கு எட்டிய தூரத்தில் கையில் கிடைக்கின்ற பொழுது, அதனைத் தவிர்ப்பது மிகவும் கடினமானது ஆகும். ஆயுர்வேத மருத்துவர்கள், இது ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கான வளம் மிக்க ஆதாரம் எனக் கூறுகின்றனர். உள்ளபடியே பார்த்தால், "அம்மா" மற்றும் "ஆதரவு அளிக்க" எனப் பொருள்படும் அமலாகி என்ற அதன் பெயர், அதன் குணமளிக்கும் தன்மை மற்றும் ஊட்டச்சத்து தன்மைகளைக் குறிக்கிறது.
இரண்டு முக்கிய ஆயுர்வேத நூல்களான சரக சம்ஹிதா மற்றும் சுஸ்ருத சம்ஹிதா, இதனை ஒரு புத்துணர்ச்சியளிக்கும் மூலிகை எனக் குறிப்பிடுகின்றன. இது மட்டும் இல்லை, இந்தப் பழம் இந்தியாவின் புராணங்களில் ஒரு பிரத்யேகமான இடத்தைக் கொண்டிருக்கிறது. அவற்றில் இது பகவான் விஷ்ணுவின் கண்ணீர் துளிகள் என அழைக்கப்படுகிறது. மேலும் சைவ சமயத்தில் ருத்ராட்சத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக, வைணவ மார்க்கத்தில் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அதனால் நெல்லி மரமும் மற்றும் பழமும் இந்தியாவில் வணங்கப்படுகின்றன. பெரும்பாலான மார்க்கங்கள் மற்றும் காரணங்கள் மூட நம்பிக்கைகளாக இருக்கின்றன, ஆனால், நெல்லிக்காயின் நன்மைகள் மற்றும் நல்ல பண்புகளைப் பார்க்கும் பொழுது, நான் மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
நெல்லிக்காயைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்:
- தாவரவியல் பெயர்: பைலாந்தஸ் எம்பிலிக்கா அல்லது எம்பிலிக்கா ஆஃபீனாலிஸிஸ்
- குடும்பம்: பைலாந்தஸ்சியயி; இஃபோரோபியாசியே
- பொது பெயர்கள்: இந்திய அருநெல்லிக்காய், நெல்லிக்காய்
- சமஸ்கிருதப் பெயர்கள்: தாத்ரி, அமலாகா, அமலாக்கி
- பயன்படும் பாகங்கள்: பழம் ( புதியது மற்றும் உலர்ந்தது இரண்டும்), விதைகள், பட்டை, இலைகள், பூக்கள்.
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: நெல்லிக்காய் இந்தியாவுக்கு சொந்தமான ஒன்று, ஆனால் சீனா மற்றும் மலேசியாவிலும் இது வளர்க்கப்படுகிறது.
- ஆற்றலியல்: நெல்லிக்காய், கபம், பித்தம், வாதம் எனக் கூறப்படும் உடலில் உள்ள மூன்று தோஷங்கள் அனைத்தையும் சமன் செய்வதாக நம்பப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவர்கள், அதை உட்கொள்ளும் போது வயிற்றில் ஒரு இலேசான உணர்வையும் மற்றும் உடலில் வறண்ட விளைவையும் கொடுக்கிற அது, ஒரு உறுதியான குளிர்ச்சியூட்டும் செயல்பாட்டினைக் கொண்டிருக்கிறது எனக் கூறுகின்றனர்.