சமீபத்திய வருடங்களில், ஆப்பிள் சிடர் வினிகர் மிகவும் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது மற்றும் ஒரு ஊட்டச்சத்து காதாநாயகனாகக் கருதப்படுகிறது. அது, பல்வேறு வீட்டு உபயோகங்கள் மற்றும் சமையல் விஷயங்களுக்குப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகை கடைகளில், பல்வேறு வகையான வினிகர்கள் கிடைக்கின்றன, ஆனால் அவற்றுள் மிகவும் பிரபலமானதாக ஆப்பிள் சிடர் வினிகர் இருக்கிறது. அது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கிறது மற்றும் அதிகமான ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் (ஏ.சி.வி எனவும் அழைக்கப்படுகிறது), ஆப்பிள் சிடரை நொதிக்க செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிற ஒரு வகை வினிகர் ஆகும். ஆப்பிள்கள், அவற்றிலிருந்து சாற்றினை எடுப்பதற்காகப் பிழியப்படுகின்றன. இந்த ஆப்பிள் சாற்றில், பழச் சர்க்கரைகளை ஆல்கஹாலாக மாற்றுகின்ற ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இந்த செயல்முறை நொதிக்க வைத்தல் என அழைக்கப்படுகிறது. பின்னர் ஆல்கஹாலில் பாக்டீரியா சேர்க்கப்படுகிறது. அது ஆல்கஹாலை அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. அசிட்டிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம் இரண்டும் சேர்ந்து வினிகருக்கு, அதன் புளிப்பு சுவையையும் மற்றும் தனித்துமான வாடையையும் தருகின்றன. அது, வெளிர் நிறத்தில் இருந்து நடுத்தரமான மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தைக் கொண்டிருக்கிறது. அது, சட்னிகள், ஊறுகாய்கள், பழக்கூட்டு அலங்கரிப்புகள், உணவு பதப்படுத்திகள், இன்ன பிறவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
சந்தையில் கிடைக்கின்ற பெரும்பாலான ஆப்பிள் சிடர் வினிகர்கள், அவற்றுக்கு ஒரு தெளிவான தோற்றத்தை அளிக்கவும், மற்றும் அனைத்து பாக்டீரியாக்களையும் அழிக்கவும், அது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும், வடிகட்டப்பட்டு மற்றும் பதப்படுத்தப்படுகின்றன. ஆனால், உண்மையான ஆப்பிள் சிடர் வினிகர், அது கிடையாது. மதர் முறை வினிகரே உண்மையான ஒன்றாகும். சுத்திகரிக்கப்படாத வினிகர் அல்லது மதர் முறை (வினிகர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உண்மையான பாக்டீரியா முறை) வினிகரில், மதர் முறை, அந்த வினிகரில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாக்டீரியாவை உருவாக்கி இருப்பதை நீங்கள் உண்மையிலேயே காண முடியும். நீங்கள் அதை, வினிகர் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் ஜாடியின் அடியில் காண முடியும் மற்றும் அது ஒரு கருமையான தோற்றத்தைக் கொண்டிருக்கும். இது தான் இயற்கையான, பதப்படுத்தப்படாத ஆப்பிள் சிடர் வினிகர் ஆகும். அது அதிகமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் சிடர் வினிகர், உலகம் முழுவதும் உள்ள உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட நபர்களிடையே மகத்தான பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. அது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது மற்றும் எடைக் குறைப்புக்கு உதவுவது உட்பட, பல்வேறு ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
ஆர்யன்கள் என்று அழைக்கப்பட்ட ஒரு புராதான பழங்குடி நாடோடி இனத்தை சேர்ந்த மக்கள், ஆப்பிளில் இருந்து ஒரு புளிப்பான ஒயின் தயாரித்தனர். அது, இந்த சிடரின் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. ஆர்யன்களிடம் இருந்து இந்த சிடர் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களுக்கு சென்றது. ஜப்பானிய சாமுராய் வீரர்கள், அதிகரித்த வலிமை, மற்றும் தாக்குப் பிடிக்கும் திறனுக்காக, ஆப்பிள் சிடர் வினிகரை அருந்தியதாக நம்பப்படுகிறது.