மருத மரப் பட்டை என்றால் என்ன?
மருதம், ஹராட் (டெர்மினாலியா செபூலா) மற்றும் பஹேடா (டெர்மினாலியா பெல்லரிகா) போன்ற டெர்மினாலியாவின் மரபணு மரபுவழி சாகுபடியைச் சேர்ந்த ஒரு பசுமையான மரமாகும். இந்த அலங்கார மரத்தின் மருத்துவ அழகு அதன் உள்ளார்ந்த பட்டையில் உள்ளது, இது இதயத்திற்கான ஒரு டானிக் என்று கருதப்படுகிறது. உண்மையில், இந்த மரத்தை பற்றிய குறிப்புகள் ரிக் வேதாவில் காணப்படுகின்றன. ஆயுர்வேத மருத்துவர்கள் முழுமையான இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக மருத மரப் பட்டை-யை பரிந்துரைக்கின்றனர். மருத்துவ ரீதியாக பேசுகையில், இதய நோய்கள், நெஞ்சு வலி, இதய செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு இதய நோய்களை குணப்படுத்தும் மருத மரத்தின் பட்டையின் நன்மைகள் பற்றி பரவலாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. மருத மரப் பட்டையை வைத்திருப்பது இதயச் சக்ரா (மனித உடலின் ஆற்றல் மையம்) வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் அதன் மருத்துவ குணங்கள் மேற்குப் பகுதியின் மூலிகையான ஹாவ்தோர் உடன் ஒப்பிடப்படுகிறது என்று தெரிந்து கொள்வது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
இந்தியாவை சொந்த இடமாக கொண்ட, மருத மரம் பொதுவாக ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் காணப்படுகிறது, அது 25 முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரலாம். மருத மரப் பட்டை மென்மையாகவும் சாம்பல் நிறமாகவும் இருக்கும், ஆனால் இடை இடையே அதில் சில பச்சை மற்றும் சிவப்பு திட்டுகள் காணப்படும். மருத மரத்தின் இலைகள் நீள்வட்டமாக (கிட்டத்தட்ட செவ்வக) இருக்கும். மேலும் அதன் கிளைகள் மீது ஒன்றிற்கொன்று எதிரெதிராக வளரும். மே முதல் ஜூலை வரை இந்த மரத்தின் வெள்ளை நிற பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும். மருதப் பழம் புதிதாக இருக்கும் போது பச்சை நிறமாக இருக்கும் மற்றும் முதிர்ச்சியடைந்த பின்பு ஒரு மர பழுப்பு நிறமாக மாறும். இந்த பழம் மருத மரத்தை அடையாளம் காண உதவும் அம்சங்களில் ஒன்றாகும்.
உங்களுக்கு தெரியுமா?
டெர்மினாலியா என்பது ஒரு லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும், அதாவது முனை அல்லது முடிவு என்று பொருள். மருத மரத்தின் கிளைகளின் முடிவில் அதன் இலைகள் வளருவதால் மருத மரம் இவ்வாறு குறிக்கப்படலாம். அர்ஜுனன் என்ற பெயருக்கு வெண்மையானது அல்லது பிரகாசமானது என்று பொருள். அதன் வெள்ளை பூக்கள் அல்லது அதன் பளபளப்பான வெள்ளை பட்டை காரணமாக இந்த மரம் இவ்வாறு பெயர் பெற்றது எனவும் நம்பப்படுகிறது.
மருத மரத்தைப் பற்றிய சில அடிப்படை தகவல்கள்.
- தாவரவியல் பெயர்: டெர்மினாலியா அர்ஜுனா
- குடும்பம்: கோம்ப்ரேட்டேசியே
- பொது பெயர்: அர்ஜுன், வெள்ளை மருதா
- சமஸ்கிருத பெயர்: அர்ஜூனா, தவாலா, நாடிசர்ஜா
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: பட்டை
- சொந்த பகுதி மற்றும் புவியியல் பரப்பு: மருத மரமானது இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் சொந்தமானது ஆனால் இது பங்களாதேஷ், நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.
- ஆற்றலியல்: மருத மரப் பட்டை பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றயை குறைக்கிறது அதே சமயம் வாதத்தை அதிகரிக்க செய்கிறது. அதனால் உடலை குளிர்விக்கும் ஒட்டுமொத்த விளைவை இது கொண்டிருக்கிறது.