பேசில் அல்லது துளசி "மூலிகைகளின் ராணி" அல்லது "வாழ்க்கைகான அமுதம்" என்று அழைக்கப்படுகிறது. அதன் மருத்துவ, சமையல் மற்றும் ஆன்மீக பண்புகள் காரணமாக மற்ற மூலிகைகள் மத்தியில் ஒரு ஒப்பற்ற நிலையில் உள்ளது துளசி. துளசியில் மூன்று வெவ்வேறு வகைகள் உள்ளன. பச்சை இலைகள் கொண்டிருக்கும் ராம துளசி, ஊதா இலைகள் கொண்ட கிருஷ்ணா துளசி மற்றும் லேசான பச்சை நிற இலைகள் கொண்ட அதிகப்படியாக காணப்படும் வன துளசி ஆகியவை துளசியின் மூன்று வகைகள் ஆகும்.
வேத காலத்தில் இருந்து இந்தியாவில் துளசி தாவரங்கள் வளர்ந்து வருகின்றன, மேலும் இவை இந்துக்களால் புனிதமானவையாக கருதப்படுகின்றன. அவை பொதுவாக கோயில்களுக்கு நடுவே வளர்க்கப்படுகிறது, மேலும் பெரும்பாலான இந்திய வீடுகளில் காணப்படுகின்றன. துளசி தாவரங்களின் அளவு மற்றும் நிறம் புவியியல் பரப்பு, மழை பொழிவு மற்றும் தாவரத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும்.
இது சமையலில் இருந்து மருந்துகள் வரை ஒரு பரவலான பயன்பாடுகளை கொண்டுள்ளன. சாலட்கள் மற்றும் சாஸ்கள் உடன் உண்ணும் போது துளசி அவற்றின் நாசியை துழைக்கும் வாசனை மற்றும் கசப்பான சுவையினால் நாக்கின் சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்க கூடியது ஆகும். புராதன காலங்களில், துளசி தூய்மைக்கு அடையாளமாக கருதப்பட்டது. துளசி செடிக்கு அருகே சென்று அதன் வாசனையை நுகர்வது கூட நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
அதன் ஆன்மீகத் தன்மையின் காரணமாக, இது புனித துளசி என்றும் அழைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில், துளசி உடல் ஆரோக்கிய நலன்களை பரந்த அளவில் வழங்குவதாக அறியப்படுகிறது. துளசி நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மூட்டுவலி எதிர்ப்பு, கீமோ-தடுப்பு, ஹெபடோபுரோடக்டிவ் (கல்லீரைப் பாதுகாக்கிறது), நீரிழிவு எதிர்ப்பு , மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
துளசி பற்றிய சில அடிப்படை தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: ஒசிமம் சன்க்டம்
- குடும்பம்: லமியாசீஸ்
- பொது பெயர்: तुलसी துளசி
- சமஸ்கிருத பெயர்: துளசி
- மற்ற பெயர்கள்: புனித துளசி, ராம துளசி, ஷியாம் துளசி
- தோற்றம் மற்றும் புவியியல் பரப்பு: துளசி இந்தியாவிற்கு சொந்தமானது இருப்பினும் மத்திய ஆபிரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை வெப்ப மண்டலப் பகுதிகளில் இது காணப்படுகிறது.
- சுவாரசியமான தகவல்: சுற்றுச்சூழல் வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க தாஜ் மஹாலை சுற்றி ஒரு மில்லியன் துளசி செடிகளை விதைத்தனர்.