ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ், பொதுவாக அறியப்பட்ட நெருஞ்சில் உலகம் எங்கும் ஆண்டு முழுவதும் காணப்படும் ஒரு மூலிகை ஆகும். கோக்ஷூரா என்பது ஒரு சமஸ்கிருத பெயர் மற்றும் அதற்கு "பசு மாட்டின் குளம்பு" என்று பொருள். மேய்ந்து கொண்டிருக்கும் மிருகங்களின் குளம்பில் சிக்கிய இந்த பழங்களில் உள்ள சிறிய முட்களின் காரணமாக இந்த பெயர் வந்திருக்க கூடும். நெருஞ்சில் தாவரத்தால் மிகவும் தீவிரமான நிலைமைகளை கூட தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியும் மற்றும் பிற தாவரங்கள் உயிர்வாழ முடியாத வறண்ட காலநிலங்களில் கூட இதனால் வளர இயலும்.
நெருஞ்சில் ஒரு சக்திவாய்ந்த மருத்துவ மூலிகை. இதனால் இது பல்வேறு சிகிச்சை பயன்பாடுகளுக்காக உபயோகிக்கப்படுகிறது. இந்த மூலிகைகளின் பழங்கள் மற்றும் வேர்கள் இந்திய ஆயுர்வேதத்திலும் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெருஞ்சில் பழங்கள் டையூரிடிக் (சிறுநீரிறக்கிகள்), பாலுணர்வு தூண்டல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இந்த மூலிகைகளின் வேர்கள் ஆஸ்துமா, இருமல், இரத்த சோகை, மற்றும் உள் உறுப்புக்களின் அழற்சி ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த தாவரத்தின் சாம்பல் முடக்கு வாத சிகிச்சைக்காக பயன்படுத்தப்படலாம்.
இந்திய மருத்துவத்தைன் தந்தை சரகா, இந்த மூலிகையை ஒரு பாலுணர்வை தூண்டும் மருந்தாக அங்கீகாரம் செய்தார், இந்த மூலிகை பாலியல் ஆசையை உண்டாக்குகிறது. மேலும் சிறு நீர் வெளியேறுவதை அதிகரிக்கிறது, இதனால் சிறுநீர் மூலம் நச்சுகள் மற்றும் கழிவு பொருட்களை வெளியேற்ற இந்த மூலிகை உதவுகிறது.
நெருஞ்சில் பற்றிய சில அடிப்படை தகவல்கள்:
-
தாவரவியல் பெயர்: ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ்
-
குடும்பம்: ஸிகோஃபில்லாசீஸ்
-
பொது பெயர்: கோக்ரு, கோக்ஷுரா, சோடகோக்ரு
-
பயன்படுத்தப்படும் பகுதிகள்: வேர் மற்றும் பழங்கள் மருந்தில் பயன்படுத்தப்படுகின்றன.
-
சொந்தமான பகுதி மற்றும் புவியியல் பரப்பு: இந்த மருத்துவ மூலிகை இந்தியாவில் உருவானது. இது இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதிக அளவில் பரவலாக காணப்படுகிறது, ஆனால் ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பகுதிகளிலும் காணப்படுகிறது.