மிளகு அல்லது கலி மிர்ச், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களில் ஒன்று ஆகும். அது, உணவுகளுக்கு, பலராலும் மிகவும் விரும்பப்படுகின்ற ஒரு காரமான நெடி மிகுந்த சுவையை அளிக்கிறது. உலர் மிளகு அல்லது நில மிளகு, ஐரோப்பிய சமையல்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான முன்னணி மசாலாக்களில் ஒன்றாக இருக்கிறது. உணவுக்கு முன்னர் அருந்தும் பானங்களில் இருந்து, முக்கியமாக சாப்பிடும் உணவு மற்றும் சாப்பாட்டுக்குப் பின்னர் சாப்பிடும் பழக்கூழ் வரையில், அது ஒவ்வொரு சமையல் முறையிலும் தனக்கான இடத்தைக் கொண்டிருக்கிறது. மிளகின் காரமான நெடிக்கு, அதிலுள்ள, இரைப்பை மண்டலத்துக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது என அறியப்பட்டு இருக்கும் வேதிப் பொருளான பிப்பெரின் தான் காரணம் என்பதை அறிந்தால் நீங்கள் மேலும் ஆர்வமடைவீர்கள். மிகச்சிறந்த வயிற்றுக்கு நன்மை அளிக்கும் பொருளாக (செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது) இருப்பதைத் தவிர, அது ஒரு திறன்மிக்க உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளாகவும் இருக்கிறது. எனவே, அது உங்கள் உணவுகளை சிறப்பாக செரிமானம் செய்து, கிரகிக்க செய்ய உதவுவது மட்டும் அல்லாமல், கூடவே உடலின் வளர்சிதை மாற்றத்தினால் உருவாக்கப்படும் உயிர்வளியேற்ற நச்சுத்தன்மையைக் கையாளவும் உங்களுக்கு உதவுகிறது. மிளகின் சமையல் சார்ந்த, மற்றும் குணமளிக்கும் நன்மைகளுக்குப் பொருத்தமாக,அது "மாசாலாப் பொருட்களின் அரசன்" என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது.

வியாபார ரீதியில் விற்பனை செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் மிளகு, பைப்பெரசியயி குடும்பத்தை சேர்ந்த பைப்பெர் நிக்ரம் எல் என்ற நீண்ட காலம் வாழும் வெப்ப மண்டல தாவரத்தின் முதிர்ந்த பழங்களின் உலர்ந்த வடிவம் ஆகும். மிளகு முக்கியமாக இந்தியாவின் தென்கிழக்குப் பகுதிகள், கேரள மாநிலம், மற்றும் மைசூரின் சில பகுதிகள், தமிழ் நாடு மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஆர்வமூட்டும் விதமாக, மிளகு பயிரிடப்படும் மொத்த பிராந்தியமும், தற்காலத்தில் கேரளாவுக்கு மட்டும் சொந்தமான மலபார் எனும் பெயரில் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டன. புராதான காலத்தில் இருந்தே மலபார் கடற்கரை மிளகு பயிரிடுதல், மற்றும் அவற்றை இறக்குமதி-ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றுக்காக நன்கு அறியப்பட்டதாகும். இங்கிருந்து மிளகு, இந்தோனேஷியா, மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பின்னர் அது, மிளகு விளைவிக்கின்ற அனைத்து நாடுகளுக்கும் பரவியது.

மிளகு, அதன் தனித்துவமான நறுமண சுவை, மற்றும் குணமளிக்கும் பண்புகளுக்காக, சர்வேத சந்தையில் மிகவும் புகழப்படுகின்ற ஒன்றாகும். பொதுவாக "மிளகு" என்று குறிப்பிடப்படும் கருப்பு நில மிளகு விதை, உலகம் முழுவதும் ஏறத்தாழ அனைத்து சாப்பாட்டு மேஜைகளிலும் காணப்படுகின்ற, உணவகங்களிலும் கூட மேஜையில் உப்புடன் அடிக்கடி காணப்படக் கூடியதாகும்.

மிளகைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

  • அறிவியல் பெயர்: பைப்பெர் நிக்ரம்
  • குடும்பம்: பைப்பெரசியயி
  • பொதுவான பெயர்: மிளகு
  • பொதுவான ஹிந்தி மற்றும் சமஸ்கிருதப் பெயர்கள்: काली मिर्च (கலி மிர்ச்)
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: மிளகு முக்கியமாக தென்னிந்தியாவை சார்ந்தது ஆகும். ரோமானிய சகாப்தத்தின் பொழுது, மிளகு இந்தியத் துறைமுகங்களில் இருந்து செங்கடல் பகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டது, மற்றும் அது கிழக்கத்திய வெப்ப மண்டலப் பகுதிகளை சொந்த பிராந்தியமாகக் கொண்டிருந்தது. மிளகானது, உலகளாவிய மசாலா பொருள் வணிகத்தில் இருக்கின்ற மிகவும் பழமையான பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மிளகுகள் தென்னிந்தியாவில் மற்றும் சீனாவில் பயிரிடப்படுகிறது; மேலும் அது, கிழக்கு மற்றும் மேற்கிந்தியத் தீவுகள், மலாய் பெனின்சுலா, மலாய் ஆர்ச்சிபெலகோ, சியாம், மலபார், வியட்நாம்,பிரேசில், இந்தேனேசியா, மற்றும் பிற பகுதிகளிலும் கூட பயிரிடப்படுகிறது.
  • வேடிக்கையான உண்மைகள்தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா, மிளகை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு அந்த நாடு, சுமார் 671 மில்லியன் டாலர்கள் அளவுக்கு மிளகு இறக்குமதி செய்திருக்கிறது. அது, உலகத்தின் மொத்த மிளகு அளவில் கிட்டத்தட்ட 18% ஆகும்.
    ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் மாசாலாப் பொருட்களின் பயன்பாட்டில் மிளகு 50% பங்கு வகிக்கிறது.மத்திய காலத்தின் போது, எடையின் அடிப்படையில் மிளகுகள், வெள்ளியை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
  1. கருப்பு, வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு மிளகுகள் - Black, white, green, pink and red peppercorns in Tamil
  2. மிளகு ஊட்டச்சத்து விவரங்கள் - Black pepper nutrition facts in Tamil
  3. மிளகின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Black pepper health benefits in Tamil
  4. மிளகை வாங்குதல் மற்றும் சேமித்து வைத்தல் - Buying and storing black pepper in Tamil
  5. மிளகின் பக்க விளைவுகள் - Black pepper side effects in Tamil
  6. முக்கிய குறிப்புகள் - Takeaway in Tamil

மிளகுவிதை எனக் குறிப்பிடப்படும் பழம், காய்ந்த உடன் சுற்றளவில் 5 மில்லிமீட்டர்கள் மட்டும் கொண்டு, நிறத்தில் கறுப்பானதாக இருக்கிறது. இருப்பினும், பல்பெருள் அங்காடிகளில் பல்வேறு வகை மிளகுகள் கிடைக்கின்றன. வெள்ளை மிளகுகள், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு வகை மிளகு கூட இருக்கின்றன! அவற்றின் கருப்பு, வெள்ளை அல்லது பச்சை நிறத்தினைப் பற்றி பொருட்படுத்தாமல், அவை சமையல்களில் பல்வேறு வகையில் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. 

ஆனால் அவற்றுக்கு இடையே உள்ள சரியான வேறுபாடுகள் என்ன? ஒரு பார்வை பார்க்கலாம்.

பச்சை மிளகு என்பது, சிறிது முதிர்ச்சியடையாமல் ஓராண்டுத் தாவர வகையினைப் போன்ற மணத்துடன் இருக்கின்றன. முழுமையாக முதிர்ச்சி அடைகின்ற பொழுது அவை ஒரு பிரகாசமான சிவப்பு நிறத்துக்கு மாறுகின்றன. ஆயினும், வழக்கமாக சிவப்பு மிளகுகளை நாம் காண்பது இல்லை. அவை கருப்பு மிளகினை உருவாக்குவதற்காக உலர வைக்கப்பட்டு விடப்படுகின்றன. வெள்ளை மிளகு என்பது, உண்மையில் கருப்பு மிளகின் வெளிப்புற தோல் எடுக்கப்பட்டவை ஆகும்.

மிளகின் காரமான நெடி, வெள்ளை மிளகில் மிகவும் திடமாகவும், மற்றும் பச்சை மிளகில் பலவீனமாகவும் இருக்கிறது. கருப்பு மற்றும் பச்சை மிளகுகள், வெள்ளை மிளகுகளை விட அதிக நெடி உடையவையாக இருக்கின்றன. 

சிவப்பு மிளகுகள், கருப்பு மிளகின் காரமான நெடி மற்றும் சுவையுடன் கூடவே, ஒரு சர்க்கரை இனிப்பு சுவையையும் கலவையாகக் கொண்டிருக்கின்றன.

வெள்ளை மிளகுகள் சீன சமையல் முறைகளில் மிகவும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்ற வேளையில், பச்சை மிளகுகள் மிகவும் வழக்கமாக, பல்வேறு குழம்புகள் மற்றும் வினிகரில் ஒரு சுவையூட்டும் காரணியாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

இளஞ்சிவப்பு மிளகுகள், மிளகுகளே கிடையாது. மாறாக அவை, ஒரு இனிப்பான மற்றும் காரமான சுவையைப் கொண்டிருக்கும் ஒரு வகை வெப்ப மண்டல பழங்கள் ஆகும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

மிளகு, குறைந்த அளவு செறிவுற்ற கொழுப்புகள், அதே போல் குறைந்த கொழுப்பு மற்றும் சோடியத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் அது வைட்டமின் C, கால்சியம், மெக்னீஷியம் மற்றும் பொட்டாசியத்தின் செறிவான ஆதாரமாகவும் இருக்கிறது, மேலும் உணவுசார் நார்ச்சத்து, வைட்டமின் K, இரும்புச்சத்து, தாமிரம், மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றையும் கூட செறிவாகக் கொண்டிருக்கிறது.

USDA ஊட்டச்சத்து தரவுதளத்தின் படி, 100 கி மிளகு பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றது:

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
தண்ணீர் 12.46 கி
ஆற்றல் 251 கலோரிகள்
புரதங்கள் 10.39 கி
கொழுப்புகள் 3.26 கி
கார்போஹைட்ரேட்கள் 63.95 கி
நார்ச்சத்துக்கள் 25.3 கி
சர்க்கரைகள் 0.64 கி
தாதுக்கள்  
கால்சியம் 443 மி.கி
இரும்புச்சத்து 9.71 மி.கி
மெக்னீஷியம் 171 மி.கி
பாஸ்பரஸ் 158 மி.கி
பொட்டாசியம் 1329 மி.கி
சோடியம் 20 மி.கி
துத்தநாகம் 1.19 மி.கி
வைட்டமின்கள்  
வைட்டமின் B1 0.108 மி.கி
வைட்டமின் B2 0.18 மி.கி
வைட்டமின் B3 1.143 மி.கி
வைட்டமின் B6 0.291 மி.கி
 வைட்டமின் A 27 கி
வைட்டமின் B9 17 µகி
 வைட்டமின் E 1.04 மி.கி
வைட்டமின் K 163.7 µகி
Fats/Fatty acids  
செறிவுற்றவை 1.392 கி
ஒற்றை செறிவுறாதவை 0.739 கி
பன்மை செறிவுறாதவை 0.998 கி
  • ஆரோக்கியத்துக்கு: மிளகு மிகச் சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு தூண்டி, மற்றும் தாது சார்ந்த நோய் எதிர்ப்பு, மற்றும் செல்களால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு இரண்டுக்கும் உதவுகிறது. மேலும் அது, நோய்த்தொற்றுக்கள் மற்றும் நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்ற வகையில், பல நோய்த்தொற்று நுண்ணுயிர்களுக்கு எதிராக நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டிருக்கிறது. அது ஒரு இயற்கையான் உயிர்வளியேற்றப் பொருளாக செயல்படுவதன் மூலம், பல்வேறு நீடித்த வியாதிகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் செய்கிறது.
  • செரிமானத்துக்கு: மிளகு, உணவு பயணிக்கும் நேரத்தைக் குறைப்பது, மற்றும் வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றில் உதவுவதனால், உணவை நன்கு செரிமானம் செய்ய உதவியாக இருக்கிறது.
  • கொழுப்பு அளவுகளுக்கு: மிளகு எடுத்துக் கொள்வது, உடலில் உள்ள கொழுப்புக்களின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அதனால் அது HDL கொழுப்புக்களை (அல்லது நல்ல கொழுப்புக்களை) அதிகரிக்க  உதவுகின்ற அதே வேளையில், LDL (அல்லது கெட்ட கொழுப்பு) -ஐக் குறைக்கவும் உதவுகிறது.
  • காய்ச்சலைக் குறைப்பதற்கு: மிளகு காய்ச்சல் தணிப்பு, மற்றும் வலி நிவாரண செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அது, மலேரியா காய்ச்சல் நீடிக்கும் கால அளவினைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
  • மூட்டழற்சிக்கு: மிளகு ஒரு அழற்சி எதிர்ப்பு காரணி ஆகும், அது பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதைக் குறைக்கின்ற அதே வேளையில், அவற்றில் உள்ள எலும்பு திசுக்களில் ஏற்படும் சிதைவைத் தடுக்கவும் செய்கிறது.
  • புற்றுநோய் தடுப்புக்கு: மிளகுகள், புற்றுநோய் தன்மை உள்ள செல்களின் வளர்ச்சியால் தோன்றுகின்ற அழற்சி சார்பு சைடோகைன்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதால் அது, புற்றுநோய் தடுப்பில் ஒரு பங்கினைக் கொண்டிருக்கக் கூடும்.

சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்காக மிளகு - Black pepper for better immunity in Tamil

விட்ரோ ஆய்வுகள், மிளகு ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு தூண்டுதல் காரணி (நோய் எதிர்ப்பு அமைப்பைத் தூண்டுகிறது) என்று தெரிவிக்கின்றன. மிளகு, ஒரு மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு மறுவிளைவுக்கு வழிவகுக்கும் வகையில், உடலில் உள்ள மேக்ரோபேஜெஸ் (ஒரு வகை இரத்த வெள்ளை அணு) உற்பத்தியைத் தூண்டுகிறது.

முன் மருத்துவ ஆய்வுகளின் படி, மிளகு தொடர்ந்து உட்கொண்டு வருவது, நோய் எதிர்ப்பு சக்தியின் தாதுக்கள் சார்ந்த, மற்றும் செல்களினால் ஏற்படும் திறனின் மீது ஒரு சாதகமான பாதிப்பினைக் கொண்டிருக்கிறது

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

வயிற்றுக்கான மிளகின் நன்மைகள் - Black pepper benefits for stomach in Tamil

மிளகு பைப்பெரின் எனப்படும் ஒரு முக்கியமான நறுமண மூலக்கூறினைக் கொண்டிருக்கிறது. அந்த பைப்பெரின், செலீனியம், வைட்டமின் B, கெரோட்டின் மற்றும் குர்குமின் போன்ற பல்வேறு வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் செரிமானப்பாதையின் வழியாக உட்புகுதலை அதிகரிக்கிறது.

மிளகு உட்கொள்வது செரிமானப் பாதைக்கு மற்ற பிற ஏராளமான நன்மைகளையும் கொண்டிருக்கிறது.

  • அது செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது, மற்றும் வயிற்றில் செரிமான திரவங்களின் சுரப்பை ஊக்குவிக்கிறது
  • அது, குடல்களில் உணவு நன்கு செரிமானம் ஆகின்ற வகையில், கணையம் மற்றும் கல்லீரலில் இருந்து செரிமான நொதிகள் விடுவிக்கப்படுவதைத் தூண்டுகிறது.
  • மேலும் அது, உணவு பயணிக்கும் நேரத்தைக் (செரிமானப் பாதையின் வழியாக உணவு செல்வதற்காக எடுத்துக் கொள்ளும் நேரம்) குறைக்கவும் செய்கிறது.

மிளகு கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது - Black pepper lowers cholesterol levels in Tamil

விவோ ஆய்வுகள், மிளகின் கொழுப்புக் குறைப்பு (கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது) நன்மைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மிளகினைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, குறை-அடர்த்தி மற்றும் மிகவும் குறை-அடர்த்தி கொழுப்பு புரதங்களைக் குறைக்கின்ற அதே வேளையில், உயர்-அடர்த்தி கொழுப்பு புரதங்களின் (நல்ல கொழுப்புகள்) அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கும் மேலாக, மிளகு உடலில் நடைபெறும் கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தில் குறுக்கீடு செய்வதன் மூலம், கணிசமான அளவில் கொழுப்பு அளவுகள் குறைவதற்குக் காரணமாகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

(மேலும் படிக்க: உயர் கொழுப்பு அளவுகள்)

ஒரு காய்ச்சல் தணிப்பானாக மிளகு - Black pepper as an antipyretic in Tamil

இந்தியாவில் உள்ள ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் நாட்டு மருத்துவம் ஆகிய மருத்துவ முறைகளில், காய்ச்சல், நரம்புத்தளர்ச்சி, ஜலதோஷம், தொண்டை நோய்களுடன் இணைந்த வலிகள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க ,மிளகு மற்றும் மிளகு சேர்க்கப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். மிளகு, மலேரியா காய்ச்சல் மறுநிகழ்வு தடுப்பு பொருளாக (காய்ச்சல் மறுபடியும் ஏற்படுவதைத் தடுக்கிறது) பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது வலி நீக்கும் (வலி நிவாரணி), மற்றும் காய்ச்சல் தணிக்கும் (காய்ச்சலைக் குறைக்கிறது) பண்புகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாதிரி விலங்குகளின் மீது நடத்தப்பட்ட சோதனைகள், மிளகின் வலிமையான காய்ச்சல் தணிப்பு விளைவுகளுக்கு பைப்பெரின் காரணமாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றன.

மூட்டழற்சிக்காக மிளகு - Black pepper for arthritis in Tamil

மூட்டழற்சி என்பது, எலும்பு சிதைவு மற்றும் முழங்கால்கள், முழங்கைகள், மற்றும் விரல்களின் மூட்டுகளில் ஏற்படும் ஒரு அழற்சி ஆகியவற்றின் மூலம் குறிப்பிடப்படுகின்ற ஒரு நோய் ஆகும். பெரும்பாலும் அதற்கு, உடலில் ஏற்படும் சிவந்து போதல், வலி, மற்றும் வீக்கம் ஆகிய அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்ற, அழற்சி எதிர்ப்பு மருந்துகளை அளிப்பதன் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மிளகு மிகச் சிறந்த ஒரு அழற்சி எதிர்ப்புக் காரணியாக அறியப்படுகிறது. மிளகு, ஒரு குறிப்பிடத்தக்க அளவில் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கின்ற வகையில், IL -6 மற்றும் PGE2 போன்ற சில அழற்சி மூலக்கூறுகளின் உற்பத்தியில் குறுக்கிடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக, மிளகு, மூட்டழற்சியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எலும்பு திசுக்களின் சிதைவுக்குப் பொறுப்பாகின்ற சில நொதிகளின் (கொலஜீனசீஸ்) செயல்பாட்டினைத் தடை செய்கிறது என்றும் கூடத் தெரிவிக்கப்பட்டது இருக்கிறது. 

மிளகின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் - Black pepper antimicrobial properties in Tamil

மிளகு நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து ஒரு கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. கிருமிநாசினிகள், நுண்ணுயிரிகளின் செல் சுவர்கள் மற்றும் சவ்வினை சிதைத்தலின் வழியாக, செல் மூலக்கூறுகளின் அமைப்பு மற்றும் செயல்பாட்டினை மாற்றுவதன் மூலமாக, நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிளகின் இந்தப் பண்புகளை நிரூபிக்க பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வு, பசுமையான மிளகில் இருக்கின்ற பெனோலிக் மூலக்கூறுகள், சல்மோனெல்லா டைப்பிமுரியம், பாசில்லஸ், எஸ்செரிச்சியா கோலி, மற்றும் ஸ்டாப்பிகோக்கஸ் அவுரஸ் போன்ற நோய்த்தொற்று நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது என வெளிப்படுத்தியது. இந்த முடிவானது, மிளகு சில நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது, மற்றும் உணவு கெட்டுப் போதல், மற்றும் உணவில் தொன்றும் நுண்ணுயிர்களைத் தடுக்கக் கூடியது என்று காட்டுகிறது.

மிளகு புற்றுநோயைத் தடுக்கிறது - Black pepper prevents cancer in Tamil

மிளகு, மற்ற கட்டிகள்-எதிர்ப்பு மசாலாக்கள், மற்றும் உணவு ஆதாரங்களின் உயிர் இருப்புத்தன்மையை அதிகரிக்கிறது. அதன் மூலம் அது, அவற்றின் புற்றுநோய்க்கு எதிரான திறன் மற்றும் வலிமையைத் தீவிரமாக அதிகரிக்கிறது.

மேலும் மிளகு நேரடியாகவும் புற்றுநோயின் வளர்ச்சிக்கு எதிராகப் போராடுகிறது. அதன் முதன்மையான தாவரம்சார் வேதிப்பொருளாக இருக்கின்ற பைப்பெரின், புற்று நோய் வளர்ந்த செல்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற சில அழற்சி சார்பு சைட்டோகைன்களைத் தடை செய்கிறது. இந்த சைட்டோகைன் தடையானது, புற்றுநோய் செல்களுக்கு இடையேயான தொடர்பைத் தடங்கல் செய்து, அவை போன்ற செல்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைக் குறைக்கிறது.

மிளகு, தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை சிறுநீருடன் கலந்து வெளியேற்ற உதவுகின்ற, உடலில் உள்ள குறிப்பிட்ட நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிப்பதன் மூலமாக வேதி கார்சினோஜெனிசிஸ்களை (புற்றுநோயை உண்டாகும் வேதிப்பொருட்கள்) கட்டுப்படுத்துகிறது.

பைப்பெரினின் உயிர்வளியேற்ற எதிர்ப்பு பண்புகள், செறிவுறாத அமைடுகளோடு தொடர்புடையதாகவும், மற்றும் கார்சினோஜெனிசிஸைத் தடை செய்கின்ற ஒரு பங்கினையும் வகிக்கிறது.

ஒரு இயற்கையான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளாக மிளகு - Black pepper as a natural antioxidant in Tamil

உணவுப் பொருட்களில் இருக்கின்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் காரணிகளாக முக்கியமான பாத்திரங்களை வகிக்கிறது. அவை, உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளின் தகுந்த செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான செயல்களான, உடலில் உள்ள உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளை அழித்தல், மற்றும் உயிர்வளியேற்ற நச்சுத்தன்மையைக் குறைத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. மிளகு, திறன்மிக்க உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்களின் ஒரு களஞ்சியம் ஆகும். மிளகு, இந்த முக்கியமான மூலக்கூறுகளின் அளவுகள் மற்றும் திறனைத் தக்க வைத்துக் கொள்கிறது, மற்றும் அதிகரிக்கிறது. அது பல்வேறு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்களைக் கொண்டிருக்கிறது, மற்றும் உயிர்வளியேற்ற நச்சுத்தன்மைத் தடுக்கின்ற, மற்றும் போக்குகின்ற முன்னோடியான மசாலாப் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும், மிளகில் உள்ள பெரும்பாலான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் உடலில் உள்ள சில இயற்கையான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்களின் செயல்பாட்டினை மறைமுகமாக மேம்படுத்துகின்றன.

(மேலும் படிக்க: உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் நிறைந்த உணவுகள்)

மிளகு, வருடம் முழுவதும் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றது. மிளகுப் பொடி கலப்படம் செய்யப்பட்டதாக இருக்கக் கூடும் என்பதால், அதற்குப் பதிலாக முழு மிளகுகளை வாங்குவது அறிவுறுத்தப்படுகிறது. மிளகு முழுமையாக, கனமாக, வட்டமாக மற்றும் கச்சிதமாக இருக்கின்றது.

மிளகு, அறை வெப்பநிலையிலேயே பல வருடங்களுக்கு எளிதாக சேமிக்கப்படக் கூடியது ஆகும். மேலும், தேவைப்படுகின்ற பொழுது தேவைக்கு ஏற்றவாறு அதனைக் கையினால் அரைத்துக் கொள்ள முடியும். மிளகை குளிரூட்டும் சாதனத்தில் கூட ஒரு மாதம் வரை வைத்திருக்க முடியும். அரைக்கப்பட்ட மிளகுப் பொடியானது, ஒரு காற்றுப்புகாத   ஜாடியில் வைத்து குளிரூட்டும் சாதனத்தில் வைக்கப்பட வேண்டும்.

  • இரைப்பை சார்ந்த பிரச்சினைகள்
    மிளகை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, வயிறு அசௌகரியத்துக்கு வழிவகுக்கக் கூடும். ஒரு ஆய்வில், கருப்பு மற்றும் சிவப்பு மிளகினை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் ஆராயப்பட்டன. அதில், அது பேரியாட்டல் சுரப்பு, பெப்சின் சுரப்பு ஆகியவற்றில் ஒரு கணிசமான அதிகரிப்பு மற்றும் பொட்டாசியம் இழப்புக்குக் காரணமாகிறது என்று கண்டறியப்பட்டது. இவை பல்வேறு இரைப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. நீங்கள் ஒரு அதிகபட்ச உணர்திறன் வயிற்றைக் கொண்டிருக்கும் பட்சத்தில், மிளகிடம் இருந்து விலகி இருப்பது அறிவுறுத்தப்படுகிறது.
  • ஒவ்வாமை எதிர்விளைவுகள்
    மிளகினை அதிகமாக எடுத்துக் கொள்வது, கர்ப்பிணிப் பெண்களுக்கு உயர் உணர்திறன், அல்லது ஒவ்வாமை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. நீங்கள் மிகவும் உணர்திறன் கொண்ட ஒரு நபர் என்றால், உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு மிளகினைத் தவிர்ப்பது மிகவும் பயனுள்ள தேர்வாகும்.
  • சுவாசம் சார்ந்த பிரச்சினைகள்
    மிளகை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, சுவாச மண்டலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது. மிளகுகள் மூச்சு விடுதல் பிரச்சினைகளோடு தொடர்புடையவையாக இருக்கின்றன, மற்றும் அதிகபடியான பயன்பாடு, பெரும்பாலான நேரங்களில் தொண்டையில் தொந்தரவு, ஆஸ்துமா மற்றும் பிற வகை சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கக் கூடியது ஆகும். 17 மாத வயதுள்ள ஒரு பையனின் மருத்துவ பரிசோதனையில், கருப்பு மற்றும் சிவப்பு மிளகு உள்ள ஒரு உணவினை சாப்பிட்ட உடனே, அவனுக்கு அரிப்புத்தடிப்பு, விழி வெண்படல அழற்சி, முக வீக்கம், மற்றும் கடுமையான இருமல் ஏற்பட்டிருப்பது கண்டறிப்பட்டது.
  • பாலுட்டும் காலத்தின் பொழுது தவிர்க்கவும்
    மிளகானது, கர்ப்பிணிப் பெண்களால், மற்றும் மிகவும் குறிப்பாக நீங்கள் பாலூட்டும் காலங்களின் பொழுது தவிர்க்கப்பட வேண்டியது என்று அறிவுறுத்தப்படுகிறது. கருப்பு மிளகினை உட்கொள்வது, உங்கள் மார்பகப் பாலுக்கு அந்த காரமான சுவையைக் கொணர்ந்து, பாலின் சுவையை மாற்றக் கூடும். அதன் விளைவாக குழந்தைக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.
  • சரும வறட்சிக்கு வழிவகுக்கிறது
    அதிகப்படியான அளவில் மிளகு எடுத்துக் கொள்வது, ஒரு வறண்ட மற்றும் செதில் செதிலான சருமத்துக்குக் காரணமாகக் கூடும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் வறண்ட சருமத்தைக் கொண்டிருந்தால், மிளகு அல்லது மிளகு உணவுகளை அதிகமான அளவில் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். அது, அரிப்பு, சொறசொறப்பு மற்றும் சருமத்தின் உணர்திறனை அதிகரிக்குமாறு பிரச்சினையை மேலும் மோசமடைய வைக்கக் கூடும்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹719  ₹799  10% OFF
BUY NOW

அனைத்து உணவுகளிலும் சிறிதளவு மிளகினை சேர்ப்பது கற்பனைக்குரியது தான். ஒரு காலத்தில் அது பணமாகப் பயன்படுத்தப்பட்டது, மற்றும் கடவுளுக்கு படைக்கப்படும் பொருளாக இருந்தது. அது வருடம் முழுவதும் கிடைக்கின்ற மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களில் ஒன்றாக ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மிளகின் முக்கிய முதன்மையான மூலக்கூறான பைப்பெரின், குறிப்பிடத்தக்க அளவில் அகண்ட அலைவரிசையில் குணமளிக்கும் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு இயற்கை மூலக்கூறு ஆகும். மேலும் அது, ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிரியல் மூலக்கூறுகளின் உயிரி இருப்புத்தன்மையை அதிகரிப்பதாகவும் கூட அறியப்படுகிறது. மிளகை ஒரு மசாலாப் பொருளாக மட்டும் இல்லாமல் அதற்கும் மேம்பட்டதாக ஆக்குகின்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மிளகில் உள்ளன. அடுத்தமுறை உங்கள் அலமாரியில் இருந்து மிளகைத் தூக்கி எறியும் முன்னர், தயவுசெய்து ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். அந்த எளிமையான மசாலாப் பொருள் நீங்கள் நினைப்பதை விட மிகவும் அதிகமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது.


Medicines / Products that contain Black Pepper

மேற்கோள்கள்

  1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 02030, Spices, pepper, black. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  2. Derosa G, Maffioli P, Sahebkar A. Piperine and Its Role in Chronic Diseases. Adv Exp Med Biol. 2016;928:173-184. PMID: 27671817
  3. Butt MS, et al. Black pepper and health claims: a comprehensive treatise. Crit Rev Food Sci Nutr. 2013.
  4. Lan Zou et al. Antibacterial mechanism and activities of black pepper chloroform extract. J Food Sci Technol. 2015 Dec; 52(12): 8196–8203. PMID: 26604394
  5. Myers BM, et al. Effect of red pepper and black pepper on the stomach. Am J Gastroenterol. 1987.
  6. Gimenez L, et al. Severe pepper allergy in a young child. WMJ. 2011.
Read on app