வேம்பு 4000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிற ஒரு மருத்துவ மூலிகை. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு வழிகளில் பயனுள்ளது. உண்மையில், வேம்பு அரிஷ்டா என்னும் சமஸ்கிருத பெயரைப் பயன்படுத்தி பிரபலமாக அழைக்கப்படுகிறது. அதாவது அதற்கு "நோய்களுக்கு நிவாரணம் அளிப்பவர்" என்று பொருள்.
வேப்ப மரம் வழக்கமாக கொத்து கொத்தாக இலைகளை கொண்டிருக்கும் மற்றும் 75 அடி வரை உயரமாக வளரக் கூடியது. இது பொதுவாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளரும். இருப்பினும், இது தெற்கு ஈரான் தீவுகளில் கூட வளர்ந்து வருகிறது. இது பசுமை நிறைந்த பச்சை நிறமானது, இந்த மரங்கள் எளிதாக இந்தியாவில் சாலையோரங்களில் வளர்ந்து இருப்பதை காணலாம்.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, வளரும் நாடுகளில் சுமார் 80% மக்கள் பொதுவாக பாரம்பரிய மருந்துகள் மற்றும் தாவரங்கள் மற்றும் தாவர பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். வேம்பு அது போன்ற ஒரு மரமாகும். தோல் நோய்த்தொற்றுகள், செப்டிக் புண்கள், தொற்று ஏற்பட்ட தீக்காயங்கள் மற்றும் மனித உடலை பாதிக்கும் சில பூஞ்சை தொற்று போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த மரம் பயன்படுத்தப்படுவதாக அறியப்படுகிறது. சோப்புகள், லோஷன் மற்றும் ஷாம்பு ஆகிய பல பொருட்கள் வேப்ப எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. வேப்ப இலைகள் கொசுக்களில் இருந்து காப்பாற்றுவதற்கும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெதுவெதுப்பான தண்ணீரில் வேப்ப இலைகளை சேர்த்து பிறகு குளியல் எடுத்துக் கொள்வது அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேதங்களில் வேம்பு "சர்வ ரோக நிவாரணி" என்று குறிப்பிடப்படுகிறது, அதாவது "அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்" என்று பொருள்.
வேம்பு ஒரு இந்திய அற்புதம் மட்டும் அல்ல என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆப்பிரிக்காவிலும் இது நன்கு அறியப்பட்டிருக்கிறது, அங்கு இது "மஹோர்பனி" என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஆபிரிக்க நம்பிக்கைகளின்படி, வேம்பு நாற்பது பெரிய மற்றும் சிறிய நோய்களைப் பற்றி குணப்படுத்த முடியும்.
ஒரு மருத்துவ அற்புதம் என்பதை தவிர, வேம்பு சமயலில் கூட உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வேகவைத்து அல்லது வறுத்து கறிகளில் மற்றும் உணவு பதார்தங்களில் சமயல் பொருளாக பயன்படுத்தப்படலாம். மியான்மரில், வேப்ப இலைகள் சாலட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இலைகளை உறைய வைத்திருக்கும் அவை இரண்டு மாதங்களுக்கு புதியது போலவே இருக்கும் என்பது இதன் சிறப்பு அம்சம். இந்த மூலிகையின் கசப்பான சுவையை மறைத்து ஒரு சுவையான பதார்த்தம் செய்ய சிறந்த வழி என்ன?
வேம்வு பற்றிய சில அடிப்படை தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: ஆசாதிராச்டா இன்டிகா
- குடும்பம்: மேலியாசீஸ்
- சமஸ்கிருத பெயர்: நிம்பா அல்லது அரிஷ்டா
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: விதைகள், இலைகள், பழங்கள், பூக்கள், எண்ணெய், வேர்கள் மற்றும் பட்டை போன்ற வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தலாம்.
- உள்ளூர் பகுதி மற்றும் புவியியல் பரப்பு: வேம்பு மரம் முக்கியமாக இந்திய துணைக் கண்டத்தில் பயிரிடப்படுகிறது - இந்தியா, நேபாளம், மாலைதீவுகள், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்.
- பயன்கள்: வேப்ப மரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தொழுநோய், கண் கோளாறுகள், குடல் புழுக்கள், வயிற்றுப்போக்கு, தோல் புண்கள் மற்றும் இரத்த நாளங்கள், காய்ச்சல், நீரிழிவு மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கையாளுவதற்கு வேப்ப இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. வேப்ப எண்ணெய் ஒரு பயனுள்ள கருத்தடை சாதனம் ஆகும்.
- சுவாரசியமான உண்மை: யார் ஒருவர் தனது வாழ்நாளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேப்ப மரங்களை பயிரிடுகிறாறோ, அவர் சொர்கத்திற்குச் செல்வார்கள் என நம்பப்படுகிறது.