இந்தியா, உங்களில் பெரும்பாலோனோருக்கு ஏற்கனவே தெரிந்த மாதிரி, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட, மற்றும் நாட்டு மருந்துகள் மற்றும் மாற்று சிகிச்சை முறைகளின் தாயகமாக இருக்கிறது. இந்தக் கட்டுரையில் நாம், வெள்ளை முசிலி அல்லது சேபத் முசிலி என அழைக்கப்படும் ஒரு அரிதான இயற்கை மூலிகை பொருளைப் பற்றி மற்றும் அதன் சிறப்பம்சங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
வெள்ளை முசிலி ஒரு அரிதான இந்திய மூலிகை, அது பொதுவாக உலகத்தில் வேறு எங்கும் காணப்படுவது கிடையாது. ஆனால், அது இந்தியக் காடுகளில் தானாகவே காட்டுத்தனமாக வளர்கிறது. சிறப்பான விஷயம் என்னவென்றால், நவீன தெழில்நுட்ப வளர்ச்சியின் துணையால், ஆராய்ச்சியாளர்கள், வெள்ளை முசிலியின் ஆயுர்வேத நன்மைகளை மேலும் மேலும் கண்டறிந்து கொள்ளத் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்த மூலிகைக்கு, அதன் அதிகமான நன்மைகளின் காரணமாக உலகளாவிய சந்தையில், ஒரு அதிகரித்த தேவை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் மிகவும் முக்கியமாக, ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம்-சார்ந்த பிரச்சினைகளுக்கு அதிக அளவிலான நன்மைகளை அளிப்பதாக இது இருப்பதே காரணமாகும். ஆயுர்வேதத்தில், வெள்ளை முசிலி, ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம் மீதான, அதன் திறன்மிக்க நன்மைகளுக்காகவும் மற்றும் ஒரு மிகச் சிறந்த அடாப்டஜென் (மன அழுத்த-எதிர்ப்பு மூலிகை) ஆக இருப்பதாகவும் அறியப்படுகிறது. பார்க்கப் போனால் இது, ஆயுர்வேத மருத்துவர்களால் மிகவும் பிரபலமாக "வெள்ளை தங்கம்" அல்லது திவ்ய அவுஷதி என அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவர்கள், வெள்ளை முசிலியும் வயாக்ரா போன்றே ஆண்களுக்கு ஏற்படும் பாலுறவு பிரச்சினைகளை மேம்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். மேலும் இது, (வயாகரா போன்ற) வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வணிக ரீதியான வேதியியல் பிற்சேர்க்கைகளில் காணப்படும் பக்க விளைவுகள் எதையும் கொண்டிருக்கவில்லை.
இதனால் வெள்ளை முசிலி, இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதிலும், வயாகரா போன்ற வணிக ரீதியிலான மருந்துகளுக்கு ஒரு இயற்கை மாற்றாக பிரபலம் அடைந்து கொண்டு இருக்கிறது. வரலாற்று ரீதியாக, வெள்ளை முசிலி பல ஆண்டுகளாக இருக்கிறது, வெள்ளை முசிலி பற்றி முதன் முதலில் குறிப்பிடப்பட்டு இருப்பது, "ராஜ் நிகண்டு" என அழைக்கப்படும் ஆயுர்வேத மெட்டீரியா மெடிக்காவில் தான் (குறிப்பிட்ட மூலிகைகளைப் பற்றிய, குறிப்பாக அவற்றின் மருத்துவ குணங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட ஒரு நூல்) எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது.
இது, இந்தியாவில் உள்ள ஒரு பொதுவான காட்டு செடியாக இருந்தாலும், பகுத்தறிவின்றி வெட்டுவதும் வேர்களை அறுத்து எடுப்பதும், தொடர்ந்து இருப்பதற்கு ஒரு மிகவும் கடினமான நிலைக்கு அதைக் கொண்டு செல்கிறது. ஐ.யு.சி.என் (இயற்கையைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய கூட்டமைப்பு), இந்த மூலிகையை, தனது தீவிரமான அபாயத்தில் உள்ளவை பட்டியலில் வைத்திருக்கிறது. அதாவது, இந்த மூலிகை பாதுகாக்கப்படாவிட்டால், விரைவிலேயே அழிக்கப்பட்டு விடும். ஆனால் துரதிர்ஷ்டமாக, இந்த அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது, உலக அளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவை மற்றும் புதிய அறிவியல் முன்னேற்றங்கள், வெள்ளை முசிலியை, ஒரு பணப் பயிராக விவசாய நிலங்களில் வளருமாறு செய்து இருக்கின்றன.
வெள்ளை முசிலியைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்:
- தாவரவியல் பெயர்: குளோரோபைட்டம் போரிவில்லியானம் அல்லது அஸ்பாரகஸ் அட்சென்டென்ட்ஸ்
- குடும்பம்: லிலியாசியாயி
- பொதுப் பெயர்கள்: வெள்ளை முசிலி அல்லது ஸபத் முசிலி, வெண் முசிலி, இந்திய சிலந்திச் செடி
- சமஸ்கிருதப் பெயர்: முசலி
- பயன்படும் பாகங்கள்: வேர்கள் மாற்றம் விதைகள்
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: வெள்ளை முசிலி இந்தியாவைச் சார்ந்தது, அதாவது அது இந்தியாவில் மட்டுமே காணப்படும். இந்தியாவில், குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகியவை வெள்ளை முசிலியின் முக்கிய உற்பத்தியாளர்கள் ஆகும்.
- ஆற்றலியல்: வாதம் மற்றும் பித்தம், ஆகியவற்றைக் குறைக்கிறது மற்றும் கபத்தை அதிகரிக்கிறது.