ஐவிரலி, குர்குர்பிட்டாசியயி குடும்பத்தை சேர்ந்த ஒரு மூலிகைத்தன்மை கொண்ட தாவரம் ஆகும். அது, ஒரு மெல்லிய மற்றும் பரவுகின்ற தண்டினைக் கொண்ட, வருடாந்திர மூலிகை (ஒவ்வொரு வருடமும் மறுநடவு செய்யப்பட வேண்டியது) ஆகும். இந்தத் தாவரத்தின் மெல்லிய இலைகள், ஒரு புறத்தில் சொரசொரப்பாகவும், மற்றொரு புறம் வழவழப்பான மேற்பரப்பையும் கொண்டிருக்கின்றன. ஐவிரலியைக் அடையாளம் காணும் அம்சமாக, அதன் மஞ்சள் வண்ண பூக்கள், மற்றும் இந்திய தெய்வம் சிவனின் அடையாளமான சிவலிங்கத்தைப் போன்ற உருண்டை வடிவ விதைகளும் இருக்கின்றன. சொல்லப் போனால், இந்தத் தாவரம் ஷிவலிங்கி என அழைக்கப்பட காரணமே, அதன் விதைகளின் தனித்துவமான அமைப்பியலே (தோற்றம்) ஆகும்.
புராதான காலத்தில் இருந்து, ஐவிரலி ஒரு பாலுணர்வுத் தூண்டியாக, மற்றும் கருத்தரிக்கும் தன்மையை அதிகரிக்கும் ஒரு மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐவிரலி விதைகள், ஒரு குழந்தையைக் கருத்தரிக்க, அல்லது கருக்கலைவு ஏற்படுவதைத் தவிர்க்க, பல்வேறுபட்ட பழங்குடியினப் பெண்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த சில தசாப்தங்களாக, நவீன மருத்துவத்தின் வருகை காரணமாக ஐவிரக் கொவ்வை போன்ற மருத்துவ குணம் மிக்க தாவரங்கள், ஒரு முக்கியமான நிவாரணியாக தங்கள் அடையாளத்தை இழந்து விட்டன. ஆனால், அது ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவத்தில் முக்கியமான மலட்டுத்தன்மை எதிர்ப்பு மூலிகைகளில் ஒன்றாக இன்னமும் நீடிக்கிறது.
ஐவிரக் கொவ்வை விதைகளைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்
- தாவரவியல் பெயர்: பிரியோனியா லாசினியோஸா லின்.
- குடும்பம்: குர்குர்பிட்டாசியயி
- பொதுவான பெயர்கள்: ஐவிரக் கொவ்வை, கர்குமரா
- சமஸ்கிருதப் பெயர்: லிங்கினி, அம்ருதா, பாஹுபத்ரா, சித்ரபாலா
- பயன்படும் பாகங்கள்: இலைகள், பழங்கள், விதைகள்
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஐவிரலி தாவரம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படக் கூடியது ஆகும். மேலும் அது மொரிசியஸ், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மலாய் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
- ஆற்றலியல்: வெப்பமூட்டுதல். உடலில் பித்த தோஷத்தை அதிகரிக்கிறது.