உங்கள் தினசரி உணவுப் பழக்கத்தில், கொஞ்சம் கூடுதல் மொறுமொறுப்பு மற்றும் சுவையை சேர்ப்பதற்காக இருக்கின்ற சிறந்த வழிகளில் பருப்புகளும் ஒன்றாகும். அவை, ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டும் அல்லாமல், நோய்களில் இருந்து குணமளிப்பதிலும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவக் கூடிய உயிரி செயல்பாட்டு மூலக்கூறுகளையும், ஏராளமான அளவில் கொண்டிருக்கின்றன. அக்ரூட்டும் அவற்றில் இருந்து வேறுபட்டது அல்ல. நம்மில் பெரும்பாலானோர், நமது மூளை மற்றும் இதயம் இரண்டுக்கும், அக்ரூட் அளிக்கின்ற நன்மைகளைப் பற்றி நன்கு அறிந்து இருப்போம். ஆனால் இந்தப் பருப்புகள், உங்கள் ஆரோக்கியத்துக்காக அளிக்கக் கூடிய நன்மைகள் மேலும் ஏராளமாக உள்ளன.

அவை, உங்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் ஆரோக்கியமான கூடுதல் உணவுகளில் ஒன்றாக அவற்றை ஆக்கக் கூடிய வகையில், நார்ச்சத்து, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் செறிவற்ற கொழுப்புகள் ஆகியவற்றின் நல்ல ஒரு ஆதாரமாக இருக்கின்றன. அதன் பயன்களில், உணவு, மருந்து, சாயம் மற்றும் விளக்கு எண்ணெய் ஆகியவை அடங்கும். அக்ரூட்டை, அது இருக்கிற மாதிரியே அல்லது வறுத்து, ஊறுகாயாக செய்து அல்லது அக்ரூட் வெண்ணை வடிவில் எனப் பல விதத்தில் உண்ணலாம். அக்ரூட்கள், பிரவுனி உணவு செய்முறைகள், கேக்குகள், இனிப்பு பண்டங்கள், ஐஸ் க்ரீம்கள் ஆகியவற்றில், மற்றும் சில குறிப்பிட்ட உணவுகளில் அவற்றை அலங்கரிக்கும் ஒரு பொருளாகக் கூட, மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உணவு மிருதுவாக்கிகளில் பயன்படுத்தப்படும், பாலாடை நிறைந்த அக்ரூட் பால் தயாரித்து உட்கொள்வது, அக்ரூட் உட்கொள்வதற்கு மற்றும் ஒரு வழி ஆகும்.

அக்ரூட் பருப்புகள் கி.மு 700 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இருந்து இருப்பதாக நம்பப்படுகிறது. கி.பி 4 ஆம் நூற்றாண்டில் பண்டைய ரோமானியர்கள், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு அக்ரூட்டை அறிமுகம் செய்தனர். அப்போது இருந்து அது அந்த நாடுகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. இன்றைய நாட்களில் வணிக ரீதியாக விற்பனைக்குக் கிடைக்கின்ற, நாம் பயன்படுத்துகின்ற அக்ரூட், இந்தியா மற்றும் காஸ்பியன் கடலை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்தது ஆகும். ஆங்கிலேய வணிகர்கள் வியாபாரத்துக்காக அதை உலகம் முழுவதும் எடுத்துச் சென்ற பிறகு, அது ஆங்கிலேய அக்ரூட் என்று அழைக்கப்பட்டது. கருப்பு அக்ரூட் என்பது, வட அமெரிக்காவை மட்டுமே சார்ந்த மற்றொரு வகை ஆகும். தற்சமயத்தில் அக்ரூட், சீனா, ஈரான், மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குள் கலிபோர்னியா மற்றும் அரிசோனா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

மற்ற பருப்புகளைப் போல் அல்லாமல் அக்ரூட், உண்மையில் பருப்பு அல்ல, அது அக்ரூட் மரத்தில் இருந்து பெறப்படும் ஒற்றை விதையைக் கொண்ட கனி ஆகும். அக்ரூட் என்று நமக்குத் தெரிந்த அது, உண்மையில் அக்ரூட் பழத்தில் உள்ள விதைகளை இரண்டாகப் பிளந்து, அதிலிருந்து பெறப்படுவது ஆகும்.

அக்ரூட் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

  • தாவரவியல் பெயர்: ஜூக்லன்ஸ் ரெஜியா (ஆங்கில அக்ரூட்)
  • குடும்பம்: ஜூக்லாண்டாசியயி.
  • பொதுவான பெயர்கள்: வால்நட், அக்ரூட்
  • பயன்படும் பாகங்கள்: அக்ரூட் கொட்டைக்குள் இருக்கும் பருப்பு பகுதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதன் மேல் தோல் மற்றும் இலைகளும் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளைக் கொண்டிருப்பதாகப் கூறப்படுகிறது.
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஒரு காலத்தில் அக்ரூட்கள், இந்தியா மற்றும் வட அமெரிக்காவின் பகுதிகளை சார்ந்தவையாக இருந்தாலும் கூட, தற்போது அவை வணிக ரீதியிலான விற்பனைக்காக, சீனா, ஈரான், துருக்கி, மெக்ஸிகோ, உக்ரைன், சிலி, மாற்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. சீனா, உலக அளவில் மிகப் பெரிய அக்ரூட் உற்பத்தியாளராக இருக்கிறது. 2016-17 வருடத்தில், உலகத்தின் மொத்த அக்ரூட் உற்பத்தியில், சீனா 50% பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்தியாவில், அக்ரூட்டுகள், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களான ஜம்மு & காஷ்மீர், உத்தராஞ்சல், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய அளவில், ஜம்மு & காஷ்மீர் மாநிலம், மிகப் பெரிய அக்ரூட் உற்பத்தியாளராக விளங்குகிறது.
  • சுவாரசியமான தகவல்: முந்தைய ரோமானிய காலத்தில், அக்ரூட்டுகள் கடவுள்களின் ஒரு உணவாகக் கருதப்பட்டன, மேலும் ஜுபிடர் கடவுளின் பெயர் சூட்டப்பட்டதால், அவற்றின் அறிவியல் பெயர் ஜூக்லான்ஸ் ரெஜியா ஆகும்.
  1. அக்ரூட் ஊட்டச்சத்து விவரங்கள் - Walnuts nutrition facts in Tamil
  2. அக்ரூட்டின் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகள் - Walnuts health benefits in Tamil
  3. அக்ரூட்டுகளின் பக்க விளைவுகள் - Walnuts Side effects in Tamil
  4. முக்கியக் குறிப்புகள் - Takeaway in Tamil

அக்ரூட்டுகள், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் வைட்டமின் இ ஆகியவற்றை செறிவாகக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை பன்மை செறிவற்ற கொழுப்புக்களையும் ஒரு நல்ல அளவில் கொண்டு இருக்கின்றன. அவை, 65% கொழுப்புகள் மற்றும் 15% புரதம் மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை, நார்ச்சத்தையும் செறிவாகக் கொண்டிருக்கின்றன. மற்ற பருப்புகளைப் போலவே அக்ரூட்களின் கலோரிகளும், அவற்றின் உயர் கொழுப்பு உட்பொருளின் மூலமாகக் கிடைக்கின்றன. அது அவற்றை ஒரு ஆற்றல் நிறைந்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவாக ஆக்குகிறது.

கால் பங்கு குவளை அளவு உள்ள அக்ரூட்டுகள், தினசரி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் தாவரம்-சார்ந்த ஒமேகா-3 கொழுப்புகளின் அளவில் 100% க்கும் அதிகமாகவும், அத்துடன் சேர்ந்து அதிக அளவிலான தாமிரம், மெக்னீசியம், மாலிப்டினம், மற்றும் பயோட்டின் ஆகியவற்றையும் வழங்குகிறது.

யு.எஸ்.டி.ஏ தேசிய ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி, 100கி அக்ரூட் பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது:

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
தண்ணீர் 6.28 கி
ஆற்றல் 500 கி.கலோரி
புரதம் 8.28 கி
கொழுப்புகள் 35.71 கி
கார்போஹைட்ரேட்டு 47.59 கி
நார்ச்சத்து 3.6 கி
சர்க்கரைகள் 32.14 கி
தாதுக்கள்  
சுண்ணாம்புச்சத்து 71 மி.கி
இரும்புச்சத்து 1.29 மி.கி
பொட்டாசியம் 232 மி.கி
சோடியம் 446 மி.கி
கொழுப்புகள்/ கொழுப்பு அமிலங்கள்  
செறிவுற்றவை 3.571 கி
ஒற்றை செறிவற்றவை 5.357 கி
பன்மை செறிவற்றவை 25 கி

சாசுரேட்டேட் 6.279 கிராம் மோனோஅன்சாசுரேட்டேட் 24.426 கிராம் பாலிஅன்சாசுரேட்டேட் 15.558 கிராம்

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

அக்ரூட், உங்கள் ஆரோக்கியத்துக்கும் மற்றும் நல்வாழ்வுக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க அது சரியாக எவ்வாறு உதவுகிறது? அதை நீங்கள் இந்தப் பிரிவில் கண்டறியலாம்:

  • மூளைக்காக: அக்ரூட், அதிக அளவிலான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் பன்மை செறிவுறாக் கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது. அவை, அக்ரூட்டை உங்கள் மூளைக்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த உணவாக மாற்றுகின்றன. டி.எச்.ஏ மற்றும் ஏ.எல்.ஏ. ஆகியவை, மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டினை மேம்படுத்த, அதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க, மற்றும் பகல் இரவு சுழற்சியைப் பராமரிக்க உதவுகின்றன. மேலும் அவை, பார்க்கின்ஸன் நோய் மற்றும் அல்சைமர் நோய் ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன மற்றும் வலிப்பு நோய்கள் மற்றும் கை கால் வலிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன.
  • உடல் எடைக் குறைப்புக்காக: அக்ரூட்டுகள், நார்ச்சத்தின் ஒரு செறிவான ஆதாரம் ஆகும். அவை, ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக, உங்களுக்கு நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கின்றன. மேலும் அவை, உடலின் செரிமானம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்தவும் கூட உதவுகின்றன.
  • இதயத்துக்காக:ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் ஒரு செறிவான ஆதாரமாக இருப்பதால் அக்ரூட்டுகள், உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கக் கூடியவை ஆகும். அவை இரத்த அழுத்த கொழுப்புகளைக் குறைக்க உதவுகின்றன, அதன் மூலம் இதயநாள கோளாறுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.
  • முதுமை-தடுப்பு காரணியாக: அதன் ஆக்சிஜனேற்ற உட்பொருள், அதனை ஒரு முதுமை -எதிர்ப்பு உணவாகவும் ஆக்குகிறது. அது, சருமம் மற்றும் முடியில் ஏற்படும் முதுமைக்கான உடலியல் சார்ந்த அறிகுறிகளைக் குறைக்க உதவுவது மட்டும் அல்லாமல் கூடவே, வயதாவதால் ஏற்படும் நினைவாற்றல் பிரச்சினைகளைத் தவிர்த்து, நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • நீரிழிவுக்காக: மருத்தவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்ட படி அக்ரூட்டுகள், நீரிழிவைத் தடுப்பதில் உதவிகரமாக இருக்கக் கூடும்.
  • புற்றுநோய்க்கு எதிராக: அக்ரூட்டுகளை சாப்பிடுவது, புற்று நோய் ஏற்படும் அபாயத்தை, குறிப்பாக, ப்ரோஸ்டேட் சுரப்பி அல்லது மலக்குடலில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் உதவலாம்.
  • கருத்தரித்தலுக்காக: அக்ரூட்டுகள், விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், ஆண்களின் பாலுறவு செயல்பாட்டினை மேம்படுத்துவதில் உதவக் கூடும்.

மூளை ஆரோக்கியத்துக்காக அக்ரூட்டுகள் - Walnuts for brain health in Tamil

அக்ரூட்டுகள், நமது மூளைக்கான ஒரு சிறப்பான உணவு ஆகும். ஆராய்ச்சி சான்றுகள், அக்ரூட்டுகளை உட்கொள்வது, உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் மற்றும் முதுமை தொடர்பான நரம்பு சிதைவு பிரச்சினை உங்களை நெருங்காமல் காக்கவும் உதவுகிறது என்று தெரிவிக்கின்றன. உங்கள் மூளைக்கு அக்ரூட்டுகள் அளிக்கின்ற, அறிவியல்ரீதியாக நிரூபணமான நன்மைகளைப் பற்றி, நாம் இப்பொழுது ஒரு பார்வை பார்க்கலாம்.

  • அவை, மூளையின் செல் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டினைப் பராமரிக்க மிகவும் முக்கியமானவையான பன்மை செறிவுறா கொழுப்பு அமிலங்கள், டி.எச்.ஏ. மற்றும் ஏ.எல்.ஏ. ஆகியவற்றை செறிவாகக் கொண்டிருக்கிறது .கூடவே அவை, மூளையில் ஏற்படுகின்ற ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைத்து, அதன் மூலம் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
  • அக்ரூட்டுகளில் இருக்கின்ற பாலிபெனோல்கள், உங்கள் நினைவாற்றல் செயல்பாட்டினை வலிமையாக வைத்திருக்க உதவுகின்றன.
  • மெலடோனின் என்பது, அக்ரூட்டுகளில் காணப்படும் மற்றும் ஒரு மூலக்கூறு ஆகும். அவை, பகல் இரவு சுழற்சியைப் பராமரிக்க முக்கியமானவை ஆகும். அதாவது, அக்ரூட்டுகளை உண்பது, ஒரு நல்ல இரவு உறக்கத்தை நீங்கள் பெற, உதவக் கூடியது ஆகும்.
  • பார்க்கின்ஸன் மற்றும் அல்சைமர் நோய்கள், உலகம் முழுக்க மிகவும் வழக்கமான நரம்பு சிதைவு குறைபாடுகள் ஆகும். ஆராய்ச்சியின் அடிப்படையில், அக்ரூட்டுகளைத் தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், இந்த நரம்பு சிதைவு நோய்கள் ஏற்படாமல் தடுக்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உங்கள் உணவுப் பழக்கத்தில் அக்ரூட்டுகளை சேர்த்துக் கொள்வது, அழற்சி, உள்மூலக்கூறு சேதாரம் மற்றும் அதனால் ஏற்படும் முதுமை தொடர்பான மூளை கோளாறுகள் ஆகியவற்றில் இருந்து உங்கள் மூளையைப் பாதுகாக்கக் கூடியது ஆகும்.
  • விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், அக்ரூட்டுகளை உட்கொள்வது, உடலின் சில சமிஞ்கை பாதைகளை மறித்து, கை கால் வலிப்பு மற்றும் வலிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கக் கூடும் என்று சுட்டிக் காட்டுகின்றன.

உடல் எடைக் குறைப்புக்காக அக்ரூட்டுகள் - Walnuts for weight loss in Tamil

அக்ரூட்டுகள், அதிக அளவில் கொழுப்புச்சத்தை கொண்டவையாக இருந்தாலும், அவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொண்டால், அவை உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவக் கூடியவை ஆகும். ஒரு கை நிறைய அக்ரூட்டுகள் (ஏறத்தாழ 12 முதல் 14 வரை), நீண்ட நேரத்துக்கு, உங்களை வயிறு நிரம்பி இருப்பது போன்று உணரச் செய்ய போதுமானவை ஆகும். இது, உங்கள் பசியைக் கட்டுப்படுத்த சிறப்பாக உதவுகின்ற புரதம் மற்றும் நார்ச்சத்து உட்பொருட்கள் அதிக அளவில் இருப்பதன் காரணமாக நடைபெறுகிறது. ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில், உடல் பருமன் உள்ள 10 நபர்கள், 48 கி அக்ரூட்டுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பானத்தை அருந்தினர். தொடர்ந்து 5 நாட்களுக்கு, தினமும் ஒரு முறை அந்த பானத்தை அருந்திய பிறகு, அவர்களின் பசியுணர்வு, அதே அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளைக் கொண்ட மற்ற பானங்களைக் குடித்த நபர்களின் பசியுணர்வோடு ஒப்பிடும் பொழுது, மிகவும் குறைந்து காணப்பட்டது.

மேலும் அவை, உங்கள் உடலின் அதிகப்படியான எடையில் பங்கெடுத்து கொண்டிருக்கும் ஒரு காரணியாக இருக்கக் கூடிய கெட்ட கொழுப்புகளின் அளவை, உங்கள் உடலில் இருந்து உண்மையிலேயே குறைக்கின்ற பன்மை செறிவுறா கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன.

ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் களஞ்சியமாக இருப்பதால் அவை, உள்மூலக்கூறு சேதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன. அதன் மூலம், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்தி, விரைவாக உடல் எடையைக் கரைக்க உங்களுக்கு உதவுகின்றன.

(மேலும் படிக்க: உடல் பருமன் சிகிச்சை)

குடல் ஆரோக்கியத்துக்காக அக்ரூட்டுகள் - Walnuts for gut health in Tamil

அக்ரூட்டுகள், நார்ச்சத்துக்களின் ஒரு சிறந்த ஆதாரம் ஆகும். இதற்கு அர்த்தம் அவை, உங்கள் குடல் அமைப்புக்கு பொருத்தமான உணவு என்பதாகும். சொல்லப் போனால், நார்ச்சத்து நிறைந்த உணவு, உங்கள் குடல் ஆரோக்கியத்துக்கு அற்புதத்தை நிகழ்த்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை உங்கள் உணவுக்கு திரட்சியைக் கொடுத்து, உங்கள் பசியுணர்வுக்கு கடிவாளம் போடுகிற அதே வேளையில், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகின்றன.

இது மட்டும் அல்லாமல் அவை, உங்கள் குடல் பகுதியின் நுண்ணுயிர் தொகுதியை மேம்படுத்தவும் செய்கிறது. 194 ஆரோக்கியமான வயது வந்த பெரியவர்கள், தினசரி 43 கிராம்கள் அக்ரூட்டுகள் எடுத்துக் கொண்டனர். எட்டு வாரங்களுக்குப் பிறகு, தினசரி 43 கிராம்கள் அக்ரூட்டுகள் உட்கொள்வது, ஆரோக்கியமான ப்ரோபையோட்டிக் நுண்ணயிரியின் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது. இந்த நுண்ணுயிரி, உடலில் செரிமானத்திற்கு உதவி செய்கிறது மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்ற செயல்பாட்டினை மேம்படுத்துகிறது.

மற்றொரு ஆய்வு அவை, எண்ணெய்ப்பசை -உற்பத்தி செய்யும் நுண்ணியிரியை அதிகரித்து, அதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து ஊட்டமளிக்கின்றன என்பதை வெளிப்படுத்தியது.   

நீரிழிவுக்காக அக்ரூட்டுகள் - Walnuts for diabetes in Tamil

ஆய்வு சான்று, அக்ரூட்டுகளை உட்கொள்வதற்கும், நீரிழிவு ஏற்படும் அபாயம் குறைவதற்கும் உள்ள தொடர்பை சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அக்ரூட், இரத்தத்தில் சர்க்கரை மிகை, அல்லது நீரிழிவுக்குக் காரணமான அனைத்து அபாய காரணிகளுக்கும் எதிராக செயல்படுகிறது.

உடல் பருமனைக் கொண்ட நபர்கள், நீரழிவு அல்லது உயர் இரத்த சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். ஆய்வுகளின் அடிப்படையில் பருப்புகள், உணவுசார் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவற்றை அதிக அளவில் கொண்டு இருக்கின்றன. மருத்துவரீதியான ஆய்வுகள், மிதமான அளவில் அக்ரூட்டுகளை உட்கொள்வது, உங்கள் பி.எம்.ஐ -யுடன் கூடவே, உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவுகளைப் பராமரிக்கவும் உதவுகிறது என்று தெரிவிக்கின்றன. இந்தக் காரணிகள் இணைந்து, உணவுப் பழக்கத்தை மேம்படுத்தி, நீரிழிவு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.

இவற்றிற்கும் மேலாக அக்ரூட்டுகள், தாதுக்கள், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், மற்றும் பைட்டோடெரோல்களை செறிவாகக் கொண்டிருக்கின்றன. இவை, அவற்றின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாடு மற்றும் உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளை நீக்கும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம், நீரிழிவு ஏற்படாமல் தடுக்க அல்லது ஏற்படுவதைத் தாமதப்படுத்த உதவக் கூடியவை ஆகும். 

நீரிழிவு/வளர்சிதை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் படி, தொடர்ச்சியாக அக்ரூட் எடுத்துக் கொள்ளும் நீரிழிவுக்கு முந்திய நிலையில் உள்ள நபர்களுக்கு, அக்ரூட் எடுத்துக் கொள்ளாத நபர்களோடு ஒப்பிடும் பொழுது, நீரிழிவாக மாறும் அபாயம் மிகவும் குறைவாக இருக்கிறது.

அக்ரூட்டின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் - Walnuts antioxidant properties in Tamil

அக்ரூட்டுகள், மற்ற வழக்கமான பருப்புகளோடு ஒப்பிடும் பொழுது, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் செறிவான ஆதாரமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உணவு மற்றும் செயல்பாடு நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், அக்ரூட்டுகள், உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளக் கூடிய, சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு உணவு என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு அர்த்தம், அக்ரூட்டுகள் எந்த ஒரு ஆக்சிஜனேற்ற சேதத்தை எதிர்த்துப் போராடவும் மற்றும் நோய்களை உங்களை விட்டு தூரத்தில் தள்ளி வைக்கவும் உதவுகின்றன என்பதாகும்.

(மேலும் படிக்க: ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் செறிவான உணவுகள்)

ஆண்களின் கரு உண்டாக்கும் திறனுக்காக அக்ரூட்டுகள் - Walnuts for male fertility in Tamil

உங்கள் தினசரி உணவில் அக்ரூட்டுகளை சேர்த்துக் கொள்வது, விந்து மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உங்களுக்கு உதவக் கூடியது ஆகும். அதன் மூலம், ஆரோக்கியமான ஆண்களுக்கு கரு உண்டாகும் திறனை அதிகரிக்கிறது.

117 ஆரோக்கியமான ஆண்களை உள்ளடக்கிய ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து 75 கிராம் அளவுக்கு அக்ரூட்டுகளை எடுத்துத் கொள்வது, 3 மாதங்களுக்குள் விந்தணு வடிவம், நகரும் தன்மை மற்றும் ஆற்றலை அதிகரிப்பதில் திறன்மிக்கதாக இருப்பது கண்டறியப்பட்டது.

அடுத்தகட்ட ஆய்வுகள் இந்த விளைவு, அக்ரூட்டுகளில் இருக்கின்ற, இந்த ஆண்களின் பாலுறவு பிரச்சினைகள் ஏற்படக் காரணமான முக்கிய காரணியான ஆக்சிஜனேற்ற சேதாரத்தைக் குறைக்கின்ற, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் காரணமாக ஏற்படுகின்றன என்று சுட்டிக் காட்டுகின்றன.

இரத்த அழுத்தத்துக்காக அக்ரூட்டுகள் - Walnuts for blood pressure in Tamil

இன்றைய நாட்களில், நவீன வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களினால் ஏற்படும், உயர் இரத்த அழுத்தம் என்பது மிகவும் பொதுவான ஒரு பிரச்சினையாக மாறிக் கொண்டு வருகிறது. அது, உங்களின் தினசரி வாழ்க்கையை பாதிப்பது மட்டும் அல்ல, உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அக்ரூட்டுகள், உங்கள் உணவுப் பழக்கத்தின் ஒரு ஆரோக்கியமான பகுதியை ஏற்படுத்த, ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஒரு ஆதாரமாக இருக்கின்றன. அவை, உங்களை குறைவாக சாப்பிட வைப்பதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை அளவுக்கு அதிகமாக உண்ணாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.

ஊட்டச்சத்துக்கான அமெரிக்க கல்லூரியின் நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் படி, உங்கள் உணவுப் பழக்கத்தில் அக்ரூட்டுகளை சேர்த்துக் கொள்வது, மன அழுத்தத்தை சமாளிக்க உங்களுக்கு உதவுக் கூடும். இந்தப் பருப்புகள், நீங்கள் ஓய்வில் இருக்கும் பொழுதும், அதே போன்று மன அழுத்தத்தில் இருக்கும் பொழுதும் உங்கள் இரத்த அழுத்தத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற, பன்மை செறிவற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, நீங்க உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தால், உங்கள் தினசரி உணவில் ஒரு கை நிறைய அக்ரூட்டுகளை சேர்த்துக் கொள்வது, நல்ல ஆரோக்கியத்துக்காக எடுத்து வைக்கப்படும் சரியான அடியாக இருக்கலாம்.

அக்ரூட்டுகளின் முதுமைக்கு எதிரான நன்மைகள் - Walnuts anti-ageing benefits in Tamil

முதுமை அடைவதில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால், மெதுவாக மற்றும் ஒரு ஆரோக்கியமான முறையில் முதுமை அடைவதில் உதவக் கூடிய, சில ஆரோக்கியமான பழக்கங்களை எப்போதும் நாம் பின்பற்ற முடியும். நமது தினசரி உணவில் அக்ரூட்டுகளை சேர்த்துக் கொள்வது, நமது உடலியல் திறனைப் பராமரிக்கவும் மற்றும் நேர்த்தியாக முதுமை அடையவும் உதவக் கூடியது ஆகும். நாம் முதுமை அடையும் பொழுது, நமக்கு ஆற்றல் குறைவான, ஆனால் ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு தேவைப்படுகிறது. ஒரு ஆய்வின் படி, முதியவர்கள் ஒரு நாளைக்கு 43 கி அக்ரூட்டுகள் எடுத்துக் கொள்வது, அதிக அளவில் தாவரம் சார்ந்த புரதச்சத்து உள்ளே எடுத்துக் கொள்ளப்படுவது, மொத்த கார்போஹைட்ரேட்டு, மிருக புரதச்சத்து, மற்றும் சோடியம் குறைவாக எடுத்துக் கொள்ளப்படுவது ஆகிய விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது. மேலும், நமக்கு வயதாகும் பொழுது, ஊட்டச்சத்துக்களை நமது உடல் கிரகிப்பது குறைகிறது. ஆனால், அக்ரூட்டுகளை எடுத்துக் கொள்வது, ஊட்டச்சத்துக்களை கிரகிப்பதில் சாதகமான மாற்றங்களுக்குக் காரணமாகிறது, முதுமைப் பருவத்திலும், உங்கள் ஆரோக்கியத்தை மறுபடியும் அடைய உதவுகிறது.   

அக்ரூட்டுகள், பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கின்றன - Walnuts prevent colon and breast cancer in Tamil

நீண்ட காலமாகப் புற்றுநோய், மரபுவழி மரபணு மாற்றத்தின் ஒரு விளைவாக ஏற்படுகிறது என நம்பப்பட்டது. ஆனால், 1981 ஆம் ஆண்டில், புற்றுநோய், வாழ்க்கைமுறை மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளாலும் கூட ஏற்படக் கூடியது என டால் மற்றும் பெட்ரோ அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள் ஏற்படுவதில் மற்றும் தடுப்பதில், உணவுப் பழக்கம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

ஓர் ஆராய்ச்சியின் அடிப்படையில் அக்ரூட்டுகள், ஒமேகா 3-கொழுப்பு அமிலங்கள், β-சிட்டோஸ்டெரோல், டோக்கோபெரால்கள், மற்றும் பெடுன்குலாஜின் என அழைக்கப்படும் குறிப்பிட்ட உயிரிவேதிப் பொருட்கள் நிறைந்தவையாக இருப்பதால், அவை திடமான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக அக்ரூட்டுகளை உட்கொண்டு வருவதால், நோய் எதிர்ப்பு அமைப்பு வலிமையடைகிறது, இறுதியில் அது புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது.

அடுத்தகட்ட ஆய்வுகள், அக்ரூட்டுகளைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, குடல் அமைப்பில் உள்ள நுண்ணுயிரிகளிடையே ஒரு சாதகமான மாற்றங்களுக்குக் காரணமாவதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது என சுட்டிக் காட்டுகின்றன. அக்ரூட்டுகள் முதியவர்களுக்கு, ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய்க்குக் காரணமான உயிரிபொருளான டோக்கோபெரால் அளவுகளை சமன்படுத்துவதன் மூலம், ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

  • அக்ரூட்டுகள் சில நபர்களுக்கு ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அந்த விளைவுகளின் கடுமை நபருக்கு நபர் வேறுபடலாம். நாக்கு மற்றும் வாயில் அரிப்பு, படை, தொண்டையில் வீக்கம், ஆஸ்துமா தாக்குதல் மற்றும் பிறழ்வு அதிர்ச்சி ஆகியவை, அக்ரூட் ஒவ்வாமையின் பொதுவான அறிகுறிகளில் சிலவாகும்.

  • அளவுக்கு அதிகமாக அக்ரூட்டுகளை உட்கொள்வது, சில நபர்களுக்கு, குறிப்பாக மற்ற பருப்பு வகைகளுக்கு ஒவ்வாமையைக் கொண்டவர்களாக இருக்கும் நபர்களுக்கு, உடல் அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படக் காரணமாகக் கூடும்.

  • அக்ரூட்டுகள், உணவுசார் நார்ச்சத்துக்கான மிகச் சிறந்த ஒரு ஆதாரமாக அறியப்படுகின்றன. இருந்தாலும், அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது இந்த நார்ச்சத்துக்கள், வயிற்றுப் போக்கு மற்றும் பிற வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாகக் கூடும்.

  • அக்ரூட்டுகளில் காணப்படும் ஹிஸ்டமைன் போன்ற ஒவ்வாமை கூறுகள், ஆரோக்கிய பிரச்சினைகளை, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு, மேலும் மோசமடைய செய்யக் கூடும். இது, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற எதிர்விளைவுகளுக்குக் காரணமாகலாம்.

  • அக்ரூட்டுகள், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தானதாக இருக்கக் கூடியவை ஆகும். அவை, மூச்சு விடுதலில் பிரச்சினைகள், நாக்கு மற்றும் தொண்டையில் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

அக்ரூட்டுகள், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, மற்றும் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன. அக்ரூட்டுகள், நார்ச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அமிலங்கள், மற்றும் பிற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை செறிவாகக் கொண்டிருக்கின்றன. தினசரி அடிப்படையில் ஒரு மிதமான அளவில் அக்ரூட்டுகளை உட்கொள்வது, நிச்சயமாக அற்புதங்களை நிகழ்த்தும். இருந்தாலும், சில நபர்களுக்கு அக்ரூட்டுகள் ஒவ்வாமையை உண்டாக்கலாம். நீங்கள் மற்ற பருப்புகளுக்கு ஒவ்வாமையைக் கொண்டவர் என்றால், அக்ரூட்டுகளை உட்கொள்ளும் முன்னர், ஒரு ஒவ்வாமை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லதாகும்.


Medicines / Products that contain Walnut

மேற்கோள்கள்

  1. Shibu M. Poulose Marshall G. Miller Barbara Shukitt-Hale. Role of Walnuts in Maintaining Brain Health with Age . The Journal of Nutrition, Volume 144, Issue 4, April 2014, Pages 561S–566S
  2. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 12156, Nuts, walnuts, glazed. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  3. Bi D et al. Phytochemistry, Bioactivity and Potential Impact on Health of Juglans: the Original Plant of Walnut. Nat Prod Commun. 2016 Jun;11(6):869-80. PMID: 27534138
  4. Sujatha Rajaram et al. The Walnuts and Healthy Aging Study (WAHA): Protocol for a Nutritional Intervention Trial with Walnuts on Brain Aging. Front Aging Neurosci. 2016; 8: 333. PMID: 28119602
  5. Yin TP et al. Tannins and Antioxidant Activities of the Walnut (Juglans regia) Pellicle. Nat Prod Commun. 2015 Dec;10(12):2141-4. PMID: 26882685
  6. W. Elaine Hardman. Walnuts Have Potential for Cancer Prevention and Treatment in Mice. J Nutr. 2014 Apr; 144(4): 555S–560S. PMID: 24500939
  7. Bamberger C et al. A Walnut-Enriched Diet Affects Gut Microbiome in Healthy Caucasian Subjects: A Randomized, Controlled Trial. Nutrients. 2018 Feb 22;10(2). pii: E244. doi: 10.3390/nu10020244. PMID: 29470389
  8. Hu ED et al. High fiber dietary and sodium butyrate attenuate experimental autoimmune hepatitis through regulation of immune regulatory cells and intestinal barrier. Cell Immunol. 2018 Jun;328:24-32. PMID: 29627063
  9. Jackson CL, Hu FB. Long-term associations of nut consumption with body weight and obesity. Am J Clin Nutr. 2014 Jul;100 Suppl 1:408S-11S. PMID: 24898229
  10. Kim Y, Keogh JB, Clifton PM. Benefits of Nut Consumption on Insulin Resistance and Cardiovascular Risk Factors: Multiple Potential Mechanisms of Actions. Nutrients. 2017 Nov 22;9(11). pii: E1271. doi: 10.3390/nu9111271. PMID: 29165404
  11. Robbins WA et al. Walnuts improve semen quality in men consuming a Western-style diet: randomized control dietary intervention trial. Biol Reprod. 2012 Oct 25;87(4):101. PMID: 22895856
  12. Bitok E et al. Favourable nutrient intake and displacement with long-term walnut supplementation among elderly: results of a randomised trial. Br J Nutr. 2017 Aug;118(3):201-209. PMID: 28831957
  13. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Avoiding Asthma Triggers
  14. An Pan et al. [Walnut Consumption Is Associated with Lower Risk of Type 2 Diabetes in Women. J Nutr. 2013 Apr; 143(4): 512–518. PMID: 23427333
  15. Nakanishi M et al. Effects of Walnut Consumption on Colon Carcinogenesis and Microbial Community Structure. Cancer Prev Res (Phila). 2016 Aug;9(8):692-703. PMID: 27215566
Read on app