மார்பக கட்டி எனப்படுவது மார்பகத்தில் வளரும் அசாதாரண திசு வளர்ச்சி ஆகும் . அவைகள் வட்ட வடிவிலோ அல்லது ஒழுங்கற்ற வடிவத்திலோ ,  வலியுடன் கூடியதாகவோ அல்லது வலி இல்லாமலோ ,  மென்மையாகவோ அல்லது உறுதியாகவோ ,  புண்ணுடன் கூடியதாகவோ அல்லது இல்லாமலோ ,  புற்று நோய் உடையதாகவோ அல்லது புற்றுநோய் இல்லாமலோ தோன்றலாம்  . அதனால்  நீங்கள் மார்பக கட்டிய கண்டரிந்தாலோ அல்லது பரோஷனையில் தெரிய வந்தாலோ  ,  கவலை படாதீர்கள் . ஆனால் அவற்றை ஒரு மருத்துவரின் உதவி இல்லாமல் உறுதி செய்ய முடியாது.

அதனால் உங்கள் மார்பில் எதேனும் கட்டி போல் சந்தேகம் தோன்றினால் நீங்கள் ஒரு மருத்துவ உதவிய நாடுவதை  ஒருபோதும் தள்ளிப்போட கூடாது . மார்பக கட்டியை புறக்கணிப்பது நல்லதல்ல  ,  அது பரவி உங்களுக்கு அசௌகர்யத்தை உண்டாக்கலாம் . அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்  ,  இறுதியில் உங்கள் மார்பகங்களை அகற்ற வேண்டிய நிலமைகூட வரலாம். 

  1. புற்று நோய்யற்ற மார்பக கட்டி - Non cancerous breast lumps in Tamil
  2. புற்று நோய் கட்டிகள் - Cancerous lumps in Tamil
  3. மார்பக கட்டியை வீட்டிலேயே எவ்வாறு பரிசோதனை செய்வது - How to check for breast lumps at home in Tamil
  4. மார்பக கட்டியின் அறிகுறிகள் - Breast lump symptoms in Tamil
  5. மார்பக கட்டிகள் காரனகளும் ஆபத்து காரணிகளும் - Breast lump causes and risk factors in Tamil
  6. மார்பகத்தின் கட்டி கண்டறிதல் - Diagnosis for lump in breast in Tamil
  7. மார்பக கட்டியின் சிகிச்சை - Breast lump treatment in Tamil

புற்றுநோயற்ற கட்டிகள் என்பது மார்பகத்தில் தோன்றும் அசாதாரண வளர்ச்சியாகும் ,  அதில் புற்றுநோய் அணுக்கள் இருக்காது .  இதனால் உயிருக்கு ஆபத்து நிகழாது மற்றும் அவை மார்பகத்தை தாண்டி வளராது

  • ஃபைப்ரோடெனோமா
    இது பெண்களை பாதிக்கும் மிக பொதுவான ஒரு மார்பக கட்டியுன் வகை ஆகும் .  ஃபைப்ரோடெனோமாவில் மார்பகத்தின் ஃபைரசஸ் மற்றும் க்ராண்டுளர் திசுக்கள் இரண்டும் அசாதாரணமாக வளர்ச்சி அடையும் . இவை மென்மையான தகவோ அல்லது திடமாகவோ தோன்றலாம் எளிதில் நகர்ந்திட கூடியவை . இது மார்பகத்தின் மத்த திசுக்களுடன் இணையாமல் இருக்கக்கூடியவை .  .
     
  • சிச்ட்ஸ் (கட்டிகள்)
    நீர்க்கட்டிகள் மென்மையானவை ,  திரவ நிறைந்த பை போன்ற வளர்ச்சி அடைந்த இவை ,  பெரும்பாலும் வட்ட அமைப்பில் உள்ளவை இவைகள் மார்பில் ஒரு சிறிய வலியை உண்டாக்கலாம்  
     
  • ஃபைப்ரோசிச்டிக் நோய்
    மார்பகத்தில் ஏற்படும் ஃபைப்ரோசிச்டிக் நோய் ,  மூன்று வகையான திசு சேதம் உண்டாக்கும் ,  கட்டிகள் உருவாகுவது ஃபைப்ரோஸிஸ் (ஃபைப்ரோஸ் திசுக்களின் அசாதாரண வளர்ச்சி) ,  மார்பக சுரப்பிகளின் திசுக்களின் அசாதாரண வளர்ச்சி   
     
  • அப்செச்செஸ்
    மார்பகத்தில் தொற்று வருவதனால் அப்செச்செஸ் உண்டாகுகிறது . இது சில சமயம் மார்ரபாக தோலின் புண்ணுடன் சம்பந்தப்பட்டு இருக்கும் . அவை வலி மற்றும் அசௌகர்யம் தர கூடியவை . அப்செச்செஸ் பொதுவாக பாலூட்டும் பெண்களை பாதிக்கும் .    
     
  • அடேநோமா
    அடேநோமஸ்  ,  மார்பகத்தின் சுரப்பியின் உள்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில் அசாதாரணமாக வளர்ந்து வரும் கட்டிகள் ஆகும் .
     
  • பாபில்லோமா
    பால் குழாய்களின் உள்ளேயும் வெளியேயும் வளரும் சிறிய விரல்களை போல் வடிவம் கொண்ட வளர்ச்சியை  பாபில்லோமா என்று அழைக்க படுகிறது . முளைக்காம்புகளிலிருந்து திரவியம வெளியேற்றத்துடன் தோன்றலாம் . இந்த திரவியத்தில் சிறிதளவு இரத்த கசிவு காணப்படலாம்
     
  • லிபோமா மற்றும் கொழுப்பு திசு அழுகல்
    லிபோம எனப்படுவது மர்பகதினும் கொழுப்பு திசுக்களின் அசாதாரண வளர்ச்சியாகும் . கொழுப்பு நெக்ரோசிஸ் . கொழுப்பு திசு அழுகல்  ,  மார்பகத்தின் கொழுப்பு திசு அழிந்து கரைய ஆரம்பித்துவிட்டால் ஏற்படும் ஒரு நிலமை ஆகும்  
Women Health Supplements
₹719  ₹799  10% OFF
BUY NOW

புற்றுநோய் கட்டிகள் ஆரம்பத்தில் வலி ஏற்படுத்தும் ஆனால் அவை விரைவிலேயே வளரும் . அதற்க்கு  நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் ஏதும் இல்லை . இந்த வளர்ச்சிகளின் அருகிலுள்ள திசுக்களையும் சேர்த்து அழித்துவிடும் . இவைகள் பொதுவாக  கடினமாக மற்றும் அருகிலுள்ள திசுக்களுடன் அல்லது அடிப்படை மார்பு திசுக்களுடனோ இணைக்கப்பட்டு ஒரே இடத்தில் இருக்கும் . சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் ,  சில புற்றுநோய்கள் அணுக்கள் உடைந்து  உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று புற்றுநோய் பரப்புகின்றன . இதன் பெயர் மேடச்டடிஸ் புற்றுநோய் ஆகும்  

 (மேலும் படிக்க : மார்பக புற்று நோயின் அறிகுறிகள்)

சுயமாக மார்பக பரிசோதனை செய்வது உங்கள் மார்பகத்தில் இப்படி உணரனு இருக்கிறது என்று கண்டறிய பயனுள்ளதாக இருக்கிறது  . இதை எல்லா மாதமும் செய்தால் உங்கள் மார்பகத்தில் ஏதேனும் அசாதாரணமாக உள்ளதா என்று கண்டரிய பயனுள்ளதாக இருக்கும்  . எல்லா மாதமும் மாதவிடாய் முடிந்தபின் மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து மார்பக பரிசோதனை செய்யவும் . இந்த கீழே உள்ள முறைகளில் நீங்கள் உங்கள் மார்பத்தை சுயமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்

கீழே படுத்துக்கொண்டு பரிசோதனை  

கீழே படுத்து மார்பகத்தை பரிசோதனை செய்தால் எளிதில் கட்டி உள்ளதா என்று கண்டுபிடித்து விடலாம்  . மல்லாந்து படுத்துக்கொண்டு உங்கள் இடது கையை தலைக்கு பின்னால் வையுங்கள் . வலது கையால் இடது மார்பை பரிசோதனை செய்யுங்கள்  . இதை செய்வதற்கு சிறிய  ,  வட்டவடிவில் சுழற்றி பரிசோதனை செய்யவும் . மார்பகத்தின் கீழிருந்து மேலே செல்லவும் . இதே போல் உங்கள் வலது கையை தலைக்கு பின் வைத்து  உங்கள் வலது மார்பகத்திலும் பரிசோதனை செய்யவும் .

அமர்ந்து பரிசோதனை

மல்லாந்து படுத்து சுயமாக சோதனை செய்த பின் ,  எழுந்து அமர்ந்து உங்கள் கக்கத்தை சோதனை செய்து பாருங்கள் . ஏனென்றால் மார்பகத்தின் திசுக்கள் கக்கம் வரை போக வாய்ப்புண்டு . அதேபோல் வட்டமான சுழற்ச்சி செய்து கக்கத்தில் ஏதேனும் கட்டியோ அல்லது அசாரதன வளர்ச்சி உண்டா என்று ஆராய்ந்து பாருங்கள் . மார்பக காம்புகளை மெதுவாக  அழுத்தி ஏதேனும் திரவியம் வெளிவருகிறதா என்று ஆராய்ந்து பார்க்கவும் .

எழுந்து நின்று

இந்த பரிசோதனையை இரண்டு விதமாக செய்யலாம் ,  ஒன்று- உங்கள் கையை இடுப்பில் வைத்து ,  மறு கையை தலைக்கு மேல் உயர்த்தவும் . இப்போது உங்கள் மார்பகத்தை கண்ணாடியில் பார்த்து கீழே கொடுக்கபட்டுள்ள விஷயங்களை சோதனை செய்யவும்:

  • இரு மார்பகங்களின் வெளிகொடுகளின் அளவுகள் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்க வேண்டும்
  • இரண்டு மார்பகங்களின் தோல் ஒரே போல் சாதாரணமாக இருக்கிறதா என்றும் அங்கே உள்ள தோல் உடலின் மற்ற பாகத்தில் உள்ளது போல் தோன்றுகிறதா என்று ஆய்வு செய்யுங்கள்  
  • உங்கள் உடலில் ஏதேனும் சுருக்கமோ அல்லது ஆரஞ்சு பழ தோல் போல உள்ளதா என்று ஆராய்ந்து பாருங்கள் . ஏதேனும் தோன்றினால் ஒரு மருத்துவரை அணுகுங்கள் .
  • இரண்டு மார்பகங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் .
  • இரண்டு காம்புகளும் ஒரே உயர அளவில் இருக்க வேண்டும்
  • காம்புகளில் உள்புறம் சுருங்குவதுபோல் ஏதேனும் அறிகுறி உண்டா என்று பார்க்கவும்
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Prajnas Fertility Booster by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors for lakhs of male and female infertility problems with good results.
Fertility Booster
₹894  ₹999  10% OFF
BUY NOW

நீங்கள் கீழே கொடுக்கபட்டுள்ள உன்றோ அல்லது அதற்க்கு மேற்பட்ட அறிகுறிகளை அனுபவிக்கலாம்:

  • மற்றொன்டை ஒப்பிடுகையில் திடீரென்று ஒரு மார்பகத்தின் அதிக வளர்ச்சி  
  • ஆரஞ்சு பழ தோல் போன்ற அமைப்பு மார்பக காம்பை சுற்றி உள்ள தோலில் மற்றும் மாரபாக பகுதியில் தென்படலாம்
  • ஒன்று அல்லது இரண்டு காம்புகளின் சுற்றியுள்ள பகுதியில் ஒரு அசாதாரண மாற்றம்
  • மார்பக காம்பிலிருந்து வெளிவரும் திரவியம்  தண்ணீர் போன்றோ  ,  வெளீர் மஞ்சள் நிறத்திலோ ,  பச்சையாகவோ ,  பழுப்பு அல்லது சிவப்பு நிறத்திலோ தோன்றும் . பெரும்பாலும் சிவப்பு நிற வெளியேற்றம் இரத்தமாக இருக்கும் அதனால் மருத்துவரை உடனே அணுகுவது அவசியம்.
  • ஒன்றோ அல்லது இரண்டு மார்பிலும் குழியோ அல்லது பள்ளம் தோன்றுதல்
  • ஒன்றோ அல்லது இரண்டு மார்பும் கனமானது போல ஒரு உணர்வு
  • எடை இழப்பு மற்றும் பசி இழப்பு
  • மார்பகத்தில் பெரிய வட்டமான கட்டி அல்லது மென்மையான உழுங்கற்ற உருவமுள்ள கட்டி தோன்றுதல்

காரணங்கள்

மார்பகங்களில் கட்டி உருவாவதன் காரணங்கள் ::

  • தொற்றுநோய்
     இரத்த ஓட்டத்தில் ஏற்கனவே இருந்த தொற்றிநாலோ அல்லது மார்பக காம்புகளில் வழியா சென்று மார்பக திசுக்களில் நோய் தொற்று ஏற்படுத்துவதனால் மார்பக கட்டி உண்டாக்கிறது . அக்குளில் தொற்று உண்டானால் அதன் காரணமாக உங்கள் மார்பகங்களில் தொற்று ஏற்படலாம் .
     
  • அழற்சி
    மார்பக திசுக்களின் வீக்கம் ,  வலி அல்லது அசௌகரியம் ஏற்படுத்தும் .
     
  • பறஅதிர்ச்சி
    திடீரென்ற மார்பகத்தில் ஏற்படும் அடி அல்லது காயத்தினால் ,  கட்டி உருவாகி  ,  மார்பக தோற்று மற்றும் வீக்கம் உண்டாகுகிறது .
     
  • கதிர்வீச்சு
    நீங்கள் ஏதேனும் புற்று நோய்க்கான  சிகிச்சை எடுத்திருந்தால் ,  உங்கள் மார்பக செல்கள் கதிர்வீச்சினால் சேதமடைந்த பின்னர் அசாதாரண வளர்ச்சி ஏற்படலாம் .
     
  • புற்று நோய் உண்டாக்கும் வைரஸ்கள்
    சில வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மார்பக செல்களை மாற்றி அமைத்து அவற்றின் அசாதாரண வளர்ச்சிக்கு காரணமாகலாம் . இவற்றில் மனித பாப்பிலோமாவைரஸ் (hpv) ,  எப்ஸ்டீன்-பார் வைரஸ் மற்றும் போயீன் லுகேமியா வைரஸ் ,  ஆகியவை அடங்கும்

ஆபத்தின் காரணிகள்
சில குறிப்பிட்ட காரணிகளால் உங்களுக்கு மார்பக கட்டி மற்றும் மார்பக புற்றுநோய் பாதிக்க வாய்ப்புக்கள் அதிகரிகின்றன . அவைகள்

  • பாலினம்
    "ஆண்கள் மற்றும் பெண்களின் மார்பக புற்றுநோய் நிகழ்வு விகிதங்களின் ஒரு சர்வதேச ஒப்பீடு" கூறுகையில்; ஆண்களை ஒப்பிடுகையில் ,  பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிக அளவு சுரப்பதன் காரணமாக மார்பக கட்டிகள் வளரும் அதிக வாய்ப்புள்ளது .
     
  • உடல் பருமன்
    அதிக எடையுடன் இருப்பதனால் மார்பக கட்டிகள் உண்டாகும் வாய்ப்பை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் இதய நோய்களைப் பெறுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது  . ( மேலும் படிக்க: உடல் பருமன் சிக்கல்கள் )  .
     
  • வயது
    56 வயதிற்கு அதிக வயதான பெண்கள் ,  இளம் வயதினருடன் ஒப்பிடுகையில் புற்றுநோயும்  ,  புற்றுநோயற்ற கட்டிகளாலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ,  " தீங்கிலாக் மார்பக கட்டி நோய் கலப்புமரபுத் தன்மை: அதன் திசுத்துயரியல் ,  வயது ,  மற்றும் இனத்துடன் உள்ள தொடர்பு ) என்ற ஆய்வு கூறுகிறது . மார்பகங்களில் செக்ஸ் ஹார்மோன்களின் பாதிப்பு மெனோபாஸ் (மாதவிடாய் சுழற்சிகள் நிறுத்தப்படுதல்) இற்கு பிறகு குறைக்கப்படுவதால் இது நிகழ்கிறது . மேலும் ,  மார்பக திசுக்கள் இந்த வயதிற்கு பின் வளர்ச்சி விகிதம் குறைந்து ஒருமுடக்க நிலையில் செல்கிறது  
     
  • குடும்ப வரலாற்றில் மார்பக கட்டிகள் அல்லது புற்றுநோய்
    உங்கள் தந்தை அல்லது தாய்வழி அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் எவரும் மார்பக கட்டி அல்லது புற்றுநோயைக் கொண்டிருப்பின்,  நீங்கள் இத்தகைய நோய்களால் பாதிக்கப்படலாம்  இந்த கட்டிகள் பரம்பரையாக வரகூடியது  
     
  • முந்தைய மார்பக ஆய்வகங்கள்
    முந்தைய மார்பக ஆய்வகங்கள் ஏதேனும் செய்திருந்தால்  ,  அந்த மார்பக கட்டியுடன் சம்பதப்பட்ட மார்பக ஆய்வின் வடுவிலிருந்து வரலாம்
     
  • ஹார்மோன் மாற்று சிகிச்சை                                          .
    "பெண்கள் தீங்கிலாக் மார்பக கட்டி நோய்" பற்றிய ஒரு ஆய்வு கூறுகையில் மாதவிடாய் பின்னர் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெறும் பெண்கள் மார்பக கட்டிகள் வளரும் அதிக ஆபத்தில் உள்ளன ,  குறிப்பாக மாதவிடாய்க்கு பிறகு விரைவிலேயே அதை தொடங்குபவர்களுக்கு.
     
  • மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்
    "மார்பக புற்றுநோய்க்கான ஒரு காரணியாக புகை பிடிப்பதை பற்றிய சமீபத்திய நுண்ணறிவு" படி ,  அதிகமாக புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பெண்களுக்கும் மார்பக நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் அபாயம் மிதமாக எடுத்துகொள்பவரை விட அதிகரிக்கும்
     
  • மரபணு மாற்றம்
    brca1 அல்லது brca2 மரபணுக்கள் ,  மார்பக மற்றும் கருப்பையிலுள்ள கட்டிகளை அடக்குவதற்க்கு உதவுகின்ற  புரதங்களை உருவாக்குகின்றன . அவை டி . என் . ஏவை சரிசெய்வதற்கு உதவுகின்றன ,  எனவே மரபணு மூலப்பொருளை ஓறே போல் பராமரிக்கின்றன . இந்த மரபணுக்களில் ஏதேனும் மாற்றம் வந்தால் பெண்களுக்கு மார்பக மற்றும் கருபப்பை புற்றுநோய் ஆபத்தை உண்டாகுகிறது

மார்பக கட்டிகள் கண்டறிதளில் மூன்று நிலைகள் உள்ளன . அவைகளை  "மூன்று கட்ட ஆய்வு" என்று அழைக்கப்படுகிறது . இந்த நிலைகள் மருத்துவ பரிசோதனை ,  உருவரைவு மற்றும் பயொப்சி ஆகும்  .

மருத்துவ பரிசோதனைகள்
இந்த முதல் நிலையில் ,  ஒரு தேர்ச்சியான மருத்துவர் ,  உங்களிடம் கட்டி தோன்றிய காலம் மற்றும் அதன் அறிகுறிகளை பற்றி பேசி தெரிந்து கொள்வார் . இதை தவிர மருத்துவர் உங்கள் மாதவிடாய் சுழற்சி ,  மாதவிடாய் நிற்றல் ,  குழந்தைகள் எண்ணிக்கை ,  உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருந்ததா என்று கேட்டு அறிந்து கொள்வார் . அதன் பிறகு விலாவரியாக உங்கள் மார்பகத்தை பரிசோதனை செய்து ,  அந்த கட்டியின் தன்மை அளவு மற்றும் அந்த கட்டியின் பரப்பளவை கண்டறிவார் . உங்கள் மருத்துவர் ஒரு ஆணாக இருந்தால்  ,  ஒரு பெண் உதவியாளரோ அல்லது செவிலியரை உங்கள் பரிசோதனையின் பொது அழைத்துகொள்வார் .

உருவரைவு
மருத்துவமனையில் உடல் சோதனை செய்த பிறகு ,  உங்கள் மருத்துவர் உங்களை கீழே கொடுக்கப்பட்ட ஏதேனும் மருத்துவ பரிசோதனை எடுக்க பரிந்துரைக்கலாம்::

  • மாமொக்ராபி
    இந்த செயல்முறையில் சிறிய அளவில் எக்ஸ்-ரே பயன்படுத்தப்பட்டு ஒரு மார்பக திசுவின் உள்ளுள்ள மற்றும் வெளிப்புற தோற்றம்  படமேடுக்கப்படுகிறது . இது மறைந்திருக்கும் புற்றுநோய் வளர்ச்சிகள் மற்றும் கட்டிகளை கண்டறிய உதவுகிறது . இந்த செயல்முறை 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் அறிகுறிகளே இல்லாத கட்டிகள் மற்றும் அறியபடாத கட்டிகளை கண்டறிய உதவுகிறது .
  • அல்ட்ராசவுன்ட்
    இது பொதுவாக 30 வயதிற்கு கீழே உள்ள பெண்களுக்கு செய்யபடுகிறது . இந்த செயல்முறையில் ஒலி கதிர்களை மார்பகத்தில் செலுத்தி அதன் உருவரைவை கணினியில் படம் பிடிபடுகிறது
     
  • எம்ஆர்ஐ (மக்னெடிக் ரேசொனன்சே இமேஜிங்)
    எம்ஆர்ஐ மார்பக புற்றுநோயைக் கண்டறிவதில் மிகவும் உணர்திறன் கொண்டது . இது ஊடுருவால் மூலமாகவோ மற்றும் ஆக்கிரமிப்பு மார்பக கட்டிகள் இரண்டு வகைகளை கண்டறிய உதவும்  .

பயொப்சி
இது மூன்றாவது கட்டமாகும் . குறிப்பாக நோயின் தன்மை மற்றும் சிகிச்சையை முடிவெடுக்க இது உதவும் . இதில் உங்கள் மார்பகத்திலிருந்து ஒரு திசுவை எடுத்து அதை ஆய்வு செய்து அதன் பிறழ்வு கண்டறியபடுகிறது . ஒரு நுண் ஊசி ,  உள்ளக ஊசி அல்லது உட்செலுத்தலைப் பயன்படுத்தி ஒரு பயாப்ஸி செய்யப்படலாம் .

  • பைன் நீட்லே அச்பிரதியன் ச்ய்டோலோகி (FNAC)
    இதில் ஒரு நுண் ஊசி செலுத்தி ,  பாதிக்கப்பட இடத்தில் அணுக்கள் மற்றும் திரவங்களை உருஞ்சபட்டு ஒரு நுண்ணோக்கி (மைக்ரோஸ்கோப்) இல் ஆராய படுகிறது (உயிரணுக்களைப் அறிய பெரிய லென்ஸ்கள் கொண்ட ஒரு தொலைநோக்கி போன்ற இயந்திரம்) . )
     
  • கரே நீடல் பயொப்சி
    இந்த செயல்முறை நுண் ஊசி பயொப்சி போன்றதேதான் . இதில் ஒரே மாற்றம் அந்த ஊசியை விட இதில் பயன்படுத்தப்படும் ஊசி சற்று பெரியதாக இருக்கும்
     
  • எக்சிஷனால் பயொப்சி
    இந்த செயல்முறையில் ,  ஒரு சிறிய அளவு பாதிக்கப்பட்ட திசுவை உங்கள் மார்பகத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கத்தியினால் கத்தரிக்கபடுகிறது . இந்த திசுவை அய்வுகூடதிற்கு அனுப்பி ,  ஒரு நிபுனாரால் ஆய்வு செய்யப்பட்டு  ,  மார்பிலிருக்கும் கட்டியின் வகையை கண்டறியபடுகிறது 

நோய்திசு பரவலை கண்டறிய உருவரைவு
புற்றுநோய் உடலின் வேறேதேனும் பாகத்தில் பரவி இருந்தாலோ அல்லது நோய்திசு பரவி இருந்தாலோ இந்த சோதனைகள் நடத்த படுகின்றன . மார்பின் ஒரு எக்ஸ்-ரே வால் நுரையீரளில் பரவி உள்ளதா என்று கண்டறியலாம்  . கல்லீரல் மற்றும் வயிற்று பகுதியின் ct ஸ்கேன் அந்த பகுதியில் நோய்திசு பரவி உள்ளதா என்று கண்டறிய உதவும் .  

Ashokarishta
₹359  ₹400  10% OFF
BUY NOW

மருந்துகள்

உங்கள் மார்பக கட்டியின் அடிப்படை காரணத்தை அறிந்து கொண்டு உங்கள் மருத்துவர்  ,  அந்த நிலைமையை சரி செய்ய அதற்கேற்ற மருந்துகளை பரிந்துரை செய்வார்

  • அண்டிபயொடிக்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள்     உங்கள் மார்பக கட்டியின் அடிப்படை காரணம் ஒரு நோய்தொற்று அல்லது அழற்சியாக (வீக்கம்) இருந்தால் உங்கள் மருத்துவர் இந்த மருந்தை பருந்துரை செய்வார்
     
  • கீமொதேரபி
    கீமோதெரபி எனப்படுவது ஒரு விரிவான வார்த்தை ஆகும் ,  இதன் அர்த்தம் மருந்துகளை பயன்படுத்தி ஒரு நோயை அல்லது குறைபாட்டை சரி செய்வது என்பதாகும் . இருப்பினும் இந்த வார்த்தை பொதுவாக புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தபடுகிறது  . உங்களுக்கு ஏதேனும் புற்றுநோய் இருந்தால் இந்த மருந்துகள் அதை கரைக்கவோ அறுவை சிகிச்சையின் முன்பு அதன் அளவை  குறைக்கவோ பயன்படுத்தபடுகிறது .

ரேடியோதெரபி

ரேடியோதெரபி அனுக்கதிர்களை பயன்படுத்தி கட்டிகளினின் திசுக்களை அழிக்கும் ,  இது அறுவை சிகிச்சைக்கு முன் கட்டிகளின் அளவை குறைக்கவோ அல்லது அதை அகற்றவோ பயன்படுத்தபடுகிறது    .

அறுவை சிகிச்சை

மேல்கூறிய எந்த முறையும் உங்கள் கட்டிய அகற்ற பயனளிக்காதபோது  ,  நீங்கள் கட்டிகளை மார்பகத்திலிருந்து முற்றிலுமாக அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டி இருக்கும் . தீவிரமான நிலைமையில் மார்பை முற்றிலுமாக அகற்றி விடுவார்கள் .

  • லம்பெக்டோமி
    இந்த செயல் முறையில் ,  அறுவை சிகிச்சை நிபுணர் ,  மார்பிலிருக்கும் கட்டிய அகற்றி அது மேலும் வளர்ந்து மீதமுள்ள மார்பக திச்சுக்களை சேதம் செய்வதை தவிர்ப்பார் .
     
  • மாஸ்க்டேக்டோமி
    மற்ற எந்த வழியும் பயனளிக்காத பொது மாஸ்க்டேக்டோமி எனப்படும் இந்த செயல்முறையில் ,  உங்களது மார்பின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாக அகற்றபடுகிறது . சில சமயம் கட்டிகள் உங்கள் கக்கதிலோ அல்லது அதன் கீழ் உள்ள தசைகளிலும் பரவலாம் . அத்தகைய சூழ்நிலையில் அந்த சில திசுக்களும் மார்புடன் அகற்றப்படும் .  

மேற்கோள்கள்

  1. Toomey A, Le JK. Abscess, Breast. [Updated 2019 Jan 11]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Breast self-exam
  3. Colin B Seymour, Carmel Mothersill. Breast cancer causes and treatment: where are we going wrong? Breast Cancer (Dove Med Press). 2013; 5: 111–119. PMID: 24648764
  4. Diana Ly, David Forman, Jacques Ferlay, Louise A. Brinton, Michael B. Cook. An International Comparison of Male and Female Breast Cancer Incidence Rates. Int J Cancer. 2013 Apr 15; 132(8): 1918–1926. PMID: 22987302
  5. Shannon Kispert, Jane McHowat. Recent insights into cigarette smoking as a lifestyle risk factor for breast cancer. Breast Cancer (Dove Med Press). 2017; 9: 127–132. PMID: 28331363
  6. Jingfang Cheng, Shijing Qiu, Usha Raju, Sandra R. Wolman, Maria J. Worsham. Benign Breast Disease Heterogeneity: Association with histopathology, age, and ethnicity. Breast Cancer Res Treat. 2008 Sep; 111(2): 289–296. PMID: 17917807
  7. Shannon Kispert, Jane McHowat. Recent insights into cigarette smoking as a lifestyle risk factor for breast cancer. Breast Cancer (Dove Med Press). 2017; 9: 127–132. PMID: 28331363
  8. Santen RJ. Benign Breast Disease in Women. [Updated 2018 May 25]. In: Feingold KR, Anawalt B, Boyce A, et al., editors. Endotext [Internet]. South Dartmouth (MA): MDText.com, Inc.; 2000-.
  9. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; BRCA Mutations: Cancer Risk and Genetic Testing
Read on app