யோனி என்பது சிறுநீர் வடிகுழாய் திறப்புக்கு கீழே இருக்கும், திறப்பை குறிக்கிறது. அந்த திறப்பில் இருந்துதான் உடலில் இருந்து மாதவிடாய் திரவம் வெளியேறும். அந்த யோனி பகுதியில் ஏற்படும் வலியே யோனி வலி ஆகும்.  கருப்பை நார்த்திசுக்கட்டிகள் (தீங்கான வளர்ச்சிகள்) அல்லது யோனி தொற்று அல்லது அலற்சி போன்ற ஒரு கடுமையான நிலைக்கான அடிப்படை காரணத்தின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். இல்லையெனில் யோனி வலி சில பெண்களுக்கு வழக்கமாக பாலியல் உறவு கொள்ளும் போதும் ஏற்படலாம்.

மாதவிடாய் சுழற்சியின் போது குறிப்பாக இளம் வயது பெண்கள் இடையே, யோனி வலி பெரும்பாலும் தொடர்புடையது. மாதவிடாய் சுழற்சிகளில் ஏற்படும் வலி அல்லது சூதகவலி மாதவிடாய் ஏற்படும் பெண்களில் பாதிக்கும் மேலானவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த வலியானது மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பத்தில் 1 முதல் 2 நாட்களுக்கு நீடிக்கும் என அறியப்படுகிறது. யோனி வலி பெரும்பாலும் பெண்களில் வல்வார் வலியுடன் தொடர்புடையதாக இருக்கிறது. வல்வார் என்பது பெண்குறிமூலம், யோனி மற்றும் லேபியா மினோரா மற்றும் லேபியா மேஜோரா உட்பட முழு பெண் பிறப்பு உறுப்பையும் குறிக்கிறது.

இந்த கட்டுரை யோனி வலியின் சிகிச்சை மற்றும் முன்கணிப்புடன் சேர்த்து அதன்  வகைகள், அறிகுறிகள், காரணங்கள் மற்றும் கண்டறியும் முறைகள் பற்றியும் விவாதிக்கிறது.

 1. யோனி வலியின் வகைகள் - Types of vaginal pain in Tamil
 2. யோனி வலிக்கான அறிகுறிகள் - Symptoms of vaginal pain in Tamil
 3. வால்வர் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் - Vulvar pain causes in Tamil
 4. யோனி வலி தடுப்பு - Prevention of vaginal pain in Tamil
 5. யோனி வலி நோயை கண்டறிதல் - Diagnosis of vaginal pain in Tamil
 6. யோனி வலிக்கான சிகிச்சை - Treatment of vaginal pain in Tamil
 7. முன்கணிப்பு மற்றும் சிக்கல்கள் - Prognosis and complications in Tamil

யோனி அல்லது வால்வரின் வலி பரவலாக அது ஏற்படுவதை பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இந்த வகைகள் மற்றும் அவற்றின் பண்புகள் இந்த பிரிவின் கீழ் விவாதிக்கப்படுகின்றன.

மாதவிடாய் காலங்களில் வால்வரின் வலி - Vulvar pain during periods in Tamil

28 நாட்களுக்கு ஒரு முறை யோனியில் இருந்து மாதவிடாய் இரத்த வெளியேற்றம் ஏற்படும் நிகழ்வு மாதவிடாய் அல்லது பீரியட்ஸ் அல்லது மென்ஸ்ட்ருவேஷன் என்று அறியப்படுகிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சாதாரணமாக கருதப்படலாம். இருப்பினும், கடுமையான வலிக்கு கடுமையான ஒரு அடிப்படை காரணம் இருக்கலாம்.

கருப்பை சுவற்றின் இடையூறில் இருந்து அதிகப்படியான இரத்தம் வெளியேறும் காரணத்தினால், கடுமையான மாதவிடாயுடன் யோனி வலி வழக்கமாக ஏற்படுகிறது. சிறு வயதிலேயே வயதிற்கு வந்த (11 வயதிற்கு முன்பாக) அனுபவம் வாய்ந்த பெண்களும், இன்னும் குழந்தை பெற்று கொள்ளாத பெண்களுமே யோனி வலிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளவர்கள். வழக்கமாக, வலி மிகுந்த மாதவிடாய் கால குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்கள், அவர்களின் பதின் பருவத்தில் மற்றும் இளம் வயதில் இந்த வலியை அனுபவிக்கலாம், ஆனால் அதே வலி 20 வயதுக்கு பிறகு குறைந்துவிடும் என்று அறியபடுகிறது.

கருப்பை புறணிப்பகுதியில் இரத்தம் வெளியேற்றபடுவதை கருப்பை சுருக்கங்கள் உடன் தொடர்புபடுத்தும்போது, யோனி அல்லது வால்வரின் வலியை முதன்மை அல்லது இரண்டாம் நிலை என வகைபடுத்தலாம். இந்த சுருக்கங்கள் காரணமாக மட்டுமே ஏற்படுகிற வலி முதன்மை வலி என்றும், மற்றும் கூடுதல் காரணிகள் சம்பந்தப்பட்ட போது இரண்டாம் நிலை என்றும் இது முக்கியமாக கருதப்படுகிறது. இரண்டாம்நிலை எனக் குறிப்பிடபடும்போது, இது கவலைக்குரிய ஒரு விஷயம் ஆகும். மேலும் அது கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் அல்லது பவளமொட்டுக்கள் போன்ற பெனின் ன் வளர்ச்சியால் ஏற்படக்கூடும். கருத்தடை நோக்கத்திற்காக (பிறப்பு கட்டுப்பாடு) கருப்பையில் உட்புற கருவிகளை பொருத்துவது, பெரும்பாலும் மாதவிடாய் காலத்தில் வால்வர் வலி ஏற்படுவதுடன் தொடர்புடையது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Madhurodh Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for diabetes with good results.
Sugar Tablet
₹899  ₹999  10% OFF
BUY NOW

பாலியல் உறவு கொள்ளும்போது ஏற்படும் யோனி வலி - Vaginal pain during sexual intercourse in Tamil

சில பெண்களுக்கு பாலியல் உடலுறவுச் செயற்பாட்டின் போது அல்லது அதற்கு பின் யோனி வலி ஏற்படக்கூடும், இது டிஸ்பேருனியா என அழைக்கப்படுகிறது. இந்த வலி யோனி, பெண்குறிமூலம் அல்லது லேபியாவில் ஏற்படலாம், மேலும் அந்த வலி வகை மற்றும் தீவிரத்தில் மாறுபடலாம். இது பொதுவாக யோனி வறட்சியுடன் தொடர்புடையது (கூர்மையான துளைப்பது போன்ற வலி ஏற்படுகிறது) அல்லது ஆணுறைகள் அல்லது ஸ்பெர்மிசைட்களின் பிசின் ஒவ்வாமையின் எதிர் விளைவாக இருக்கலாம். கடந்த காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தின் வரலாறு அல்லது பாலியல் உடலுறவு பற்றிய பயம் இந்த வலியை மோசமாக்கும் வாய்ப்பு உள்ளது. வால்வரின் வலி பொதுவாக வயதான பெண்களில் யோனி சுவர்கள் தடித்து போவதால் அல்லது வலுவிழந்து போவதால் ஏற்படுகிறது என அறியப்படுகிறது. யோனி அலற்சி அல்லது நோய்த்தொற்று, குறிப்பாக ஒரு ஈஸ்ட் தொற்று அல்லது சில பாலியல் ரீதியாக பரவ கூடிய நோய்கள் (stds) போன்றவற்றின் காரணமாக உடலுறவின்போது யோனி வலி மிகக் கடுமையான இருக்கலாம்.

(மேலும் வாசிக்க: யோனி ஈஸ்ட் தொற்றுக்கான வீட்டு வைத்தியம்)

மாதவிடாயுடன் தொடர்புடைய வலியைப் பொறுத்தவரை, இந்த வகை வால்வர் வலியை முதன்மை மற்றும் இரண்டாம் வகைகளாகப் பிரிக்கபடுகிறது. அதில் முதன்மை வகை வலி பெண்ணின் பாலியல் வாழ்நாள் முழுவதிலும் நீடிக்கும், இரண்டாம் நிலை வலி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தொடங்குகிறது.

டிஸ்பாருனியா கூட  என்டோமெட்ரியோசிஸின் ஒரு பொதுவான அறிகுறியாகும். அதாவது, என்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையை தவிர வேறு பகுதிகளிலும் என்டோமெட்ரியல் திசு (கருப்பை சுவற்றில் படரும் திசு) வளரும் ஒரு நிலை ஆகும். இது உடலுறவு மற்றும் மாதவிடாய் காலத்தில் வால்வாவில் தீவிர வலியைக் கொண்டிருப்பதுடன், கருவுறுதல் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம். இந்த நிலைமை பெரும்பாலும் பெண்களில் கண்டுபிடிக்க படாமலேயே இருக்கிறது, ஆனால் இது அக்கறை கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஆகும். என்டோமெட்ரியோசிஸ் பிற காரணங்களுடன் சேர்த்து பின்வரும் பகுதியில் விவாதிக்கப்படும்.

(மேலும் வாசிக்க: கருவுறாமைக்கான சிகிச்சை)

கர்ப்ப காலத்தில் யோனி வலி - Vaginal pain during pregnancy in Tamil

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு கடினமான கட்டம் ஆகும், அங்கு அவளுடைய உடல்நலம் ஹார்மோன்களின் மாற்றத்தின் காரணமாக ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பாதிக்கப்படுகிறது. யோனி அல்லது வால்வர் வலி என்பது கவலைக்குரிய ஒரு விஷயம், இது அதிகப்படியான பெல்விக் அழுத்தத்தின் பக்க விளைவாக கருதப்படுகிறது. எனினும், லேசான யோனி வலி கர்ப்ப காலத்தில் சாதாரணமாக கருதப்படலாம்.

அந்த கட்டத்தில் அதிகப்படியான கருப்பை சுருக்கங்கள் காரணமாக கர்ப்பத்தின் பிற்பகுதிகளில் யோனி வலி மிகவும் பொதுவானது மற்றும் கடுமையானது என்று அறியப்படுகிறது. குழந்தையின் இயக்கங்களை எளிதாக்குவதற்கு, கர்ப்பத்தின் போது பெல்விக் தசைநார்களை தளர்த்துவதற்கான ரிலக்சின் (ஹார்மோன்) வெளியேற்றப்படுகிறது.

ஆனால், குழந்தையின் அதிகப்படியான இயக்கங்கள் இந்த தசைகளை பலவீனப்படுத்தி மற்றும் நீட்சி அடைய செய்து பெல்விக் அழுத்தத்தை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தின் முடிவில் ஏற்படும் கருப்பை வாய் திறப்பு காரணமாக இது இருக்கலாம். இது பிரசவத்திற்கு உதவ கூடிய ஒரு உடலியல் (இயல்பான செயல்பாட்டு தொடர்பான) செயல்பாடு ஆகும். அரிதாக, இது நோய்த்தொற்று அல்லது இடம் மாறிய (எக்டோபிக்) கர்ப்பம் அல்லது கர்ப்பகால ட்ரோபோபலிஸ்டிக் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்த நிலைமைகள் பின்வரும் பத்திகளில் விவாதிக்கப்படும்.

(மேலும் வாசிக்க: கர்பம் தரிப்பது எப்படி)

மாதவிடாய் காலங்களில் வால்வர் வலி

 • தீவிரமான, இறுகப்பற்றும் யோனி வலி
 • தொடர்ந்து வலி ஏற்படலாம் அல்லது எப்போதாவது பிடிப்புகள் போல உணரப்படலாம்
 • முதுகு அல்லது காலில் வலி ஏற்படுவ்வது போல தோன்றும், அடி வயிற்று வலி
 • இந்த வலி மாதவிடாய் காலத்தின் ஆரம்பத்தில் தொடங்குகிறது
 • மாதவிடாய் ஆரம்பித்த 24 மணிநேரத்திற்கு அல்லது மாதவிடாயின் முதல் நாளில் இது மிகவும் கடுமையானதாக இருக்கும்
 • மாதவிடாய் இரத்தத்தில் உறைந்த ரத்த கட்டிகள் இருத்தல்
 •  குமட்டல், வாந்தி, உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற மற்ற அறிகுறிகள். மேலும் பிற செரிமான பிரச்சினைகள் அடிக்கடி அனுபவிக்கப்படுகின்றன.

மாதவிடாய் காலங்களுக்கு முன் வால்வர் வலி

மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்திற்கு முன்னர் ஏற்படும் வால்வரின் வலிக்கு ப்ரீமென்சுரல் நோய்க்குறி காரணமாக இருக்கலாம். இது பின்வரும் அறிகுறிகளுடன் சேர்ந்து ஏற்படுகிறது:

உடலுறவின் போது யோனி வலி

 • பெரும்பாலும் ஆண் உறுப்பு யோனியினுள் நுழையும் போது கூர்மையான யோனி வலி ஏற்படுகிறது, இந்த வலி வெகு நேரம் நீடிக்கும்
 • இது உடலுறவு முடிவடைந்த பின்னரும் கூட நீடிக்கும்
 • இந்த வலி பாலியல் உடலுறவு கொண்டிருக்கும் முழு காலத்திலும் அனுபவிக்கப்படலாம் அல்லது அது குறிப்பிட்ட வகையான தூண்டுதல்களின் காரணமாக தோன்றலாம்
 • கருப்பை வாயில் ஆழமான வலி
 • ஆழமான மற்றும் தீவிர வலி, யோனியின் உள் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும்
 • தசை பிடிப்பு(மேலும் வாசிக்க: தசை பிடிப்புகளுக்கான சிகிச்சை)
 • வயிற்று வலி
 • பெல்விக் கோளாறுகள்
 • பெல்விக் தசைகளில் இறுக்கம்
 • யோனி வறட்சி

கர்ப்ப காலத்தில் யோனி வலி

 • ஆழமான மற்றும் கூர்மையான யோனி வலி
 • எரியும் உணர்வுகள்
 • அரிப்புமுதுகு வலி மற்றும் ஒரு தொற்றுடன் தொடர்புடையது என்றால் யோனி வெளியேற்றம்
 • எக்டோபிக் கர்ப்பத்துடன் தொடர்புடைய போது வலுவான வலி மற்றும் வலி மிகுந்த மார்பகங்கள்
 • கர்ப்ப காலத்தில் இருப்பது போன்ற குமட்டல், வாந்தி மற்றும் சோர்வு  போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்படுதல்

என்டோமெட்ரியோசிஸ் காரணமாக யோனி வலி

 • மாதவிடாய் காலத்தில் அல்லது பாலியல் உடலுறவின் போது அல்லது அதற்குப் பிறகு கடுமையான வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் ஏற்படுதல்
 • இது முதுகு அல்லது கால்களுக்கும் பரவலாம் (மேலும் வாசிக்க: கால் வலிக்கான சிகிச்சை)
 • குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான தசைப்பிடிப்பு
 • சிறுநீர் கழிக்கும் போது வலித்தல் (சிறுநீர்)
 • மலம் கழிப்பதில் சிரமம் (வெளியேற்றம்)
 • கர்ப்பமாவதில் இடையூறுகள் (கருவுறுதல் பிரச்சினைகள்)

ஃபைப்ராய்டுகள் காரணமாக யோனி வலி

 • கடுமையான மாதவிடாய் (அதிகப்படியான இரத்த போக்கு)
 • நீடித்த மாதவிடாய் சுழற்சி
 • உடலுறவு கொள்ளும் போது வலி
 • பெல்விக் வலி (இடுப்பு பகுதியில் வலி)
 • கீழ்முதுகு வலி
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • ஒரு உறுதியான வெகுஜனத்தின் தோற்றம் (மேலும் வாசிக்க: புற்றுநோய்க்கான அறிகுறிகள்)

 பெல்விக் அழற்சி நோய் காரணமாக யோனி வலி

பெல்விக் அழற்சி நோய் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது பாலியல் ரீதியாக பரவும் தொற்று காரணமாக ஏற்படுகிறது.
(மேலும் வாசிக்க: எய்ட்ஸ் அறிகுறிகள்)

இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு:

 • யோனி வலி, குறிப்பாக உடலுறவின் போது
 • நீண்ட கால இடுப்பு வலி
 • மெல்லிய, வெண்மையான யோனி திரவ வெளியேற்றம்
 • யோனியில் எரிதல், சிவத்தல் மற்றும் வீக்கம் 
 • வயிற்று வலி
 • காய்ச்சல்
 • ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்
 • சிறுநீர் கழிவுக்கும் போது வலி

அடினோமையோஸிஸ் காரணமாக யோனி வலி

அடினோமையோஸிஸ் என்பது கருப்பையின் வெளிப்புற சுவருக்கு எண்டோமெட்ரியல் திசு நகருவதால் ஏற்படும் ஒரு நிலை. இது பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:

 • உடலுறவின் போது லேசான யோனி வலி
 • அதிகபடியான மற்றும் வலி மிகுந்த மாதவிடாய் இரத்தப்போக்கு
 • எகடோபிக் கர்ப்பத்தின் காரணமாக யோனி வலி
 • இடுப்பு வலி
 • அசாதாரண யோனி இரத்தப்போக்கு
 • அடிவயிற்றில் கடுமையான, கூர்மையான மற்றும் திடீர் வலி
 • தோள்பட்டை பகுதியில் வலி
 • சோர்வு அல்லது மயக்க உணர்வு

கர்ப்பகால ட்ரோபோபலிஸ்டிக் நோய் காரணமாக யோனி வலி

இந்த நிலையில், அசாதாரண ட்ரோபோபோகாஸ்ட் செல்கள் கருப்பை உள்ளே வளரும், இது பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்:

 • இடுப்பு வலி அல்லது இடுப்பு அழுத்தம்
 • ஒரு பெரிய அளவிலான கருப்பை
 • கர்ப்பத்திற்கு பிறகும் தொடரும் அசாதாரண யோனி இரத்தப்போக்கு
 • சோர்வு மற்றும் மூச்சு திணறல்
 • அதிக இரத்த அழுத்தம்

இப்போது யோனி வலி என்பது ஒரு நோயாக இருப்பதைக் காட்டிலும் ஒரு பரந்த அறிகுறியாகும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 • கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு
 • டிஸ்மெனோர்ஹியாவின் குடும்ப வரலாறு
 • யோனி வறட்சி
 • ஸ்பெர்மிசைட்கள், ஆணுறை பசைகளுக்கு ஒவ்வாமை
 • ஆடைகளுக்கான ஒவ்வாமை
 • சிறு வயதிலேயே பூப்படைதல்
 • ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
 • புகைபிடித்தல்
 • மாதவிடாய் நோய்குறி
 • யோனி பகுதியில் அல்லது வால்வர் வெஸ்டிகுலிடிஸ் அழற்சி
 • அடினோமையோசிஸ்
 • என்டோமெட்ரியோசிஸ் (இடமகல் கருப்பை அகப்படலம்)
 • இடம் மாறிய கர்ப்பம்
 • குடல் கோளாறு நோய் தாக்கம்
 • தாமதமாக கர்ப்பம் தரித்தல்
 • உடலுறவின் போது உளவியல் வலி
 • பூஞ்சை தொற்று
 • உடலுறவு மூலம் பரவும் நோய்கள்
 • யோனி ஈஸ்ட் தொற்று
 • சிறுநீர் பாதை நோய் தொற்று (uti)
 • கருத்தடை நோக்கத்திற்காக கருத்தடை கருவிகளைப் பயன்படுத்துதல்
 • பாலியல் துஷ்பிரயோகம்
 • மாதவிடாய் நின்ற பெண்களில் அட்ரோபிக் வஜினிடிஸ்
 • லிச்சென் பிளானஸ் தொற்று
 • சில மருந்துகளின் பக்க விளைவுகள்
Karela Jamun Juice
₹494  ₹549  10% OFF
BUY NOW

பல காரணிகளின் காரணமாக யோனி வலி ஏற்படுகிறது என்பதால், அதன் தடுப்பு மல்டிபோல்ட் ஆகும். உங்களுக்கு ஒரு குடும்ப வரலாறு இருந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் யோனி வலி தவிர்க்க முடியாதது. எனினும், மாதவிடாய் தொந்தரவு  பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (pcos) போன்ற அடிப்படை கோளாறு தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் உங்களுக்கு சிகிச்சை பெறலாம். ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் எடை பராமரிப்பு pcod இன் மேலாண்மைக்கு உதவும். ஆயினும், சிறந்த ஆலோசனைகள் பெற உங்கள் மகளிர் மருத்துவ ஆலோசகரை நீங்கள் அணுக வேண்டும்.

உடல் உறவு கொள்ளும்போது ஏற்படும் வயிற்று வலியை ஒரு மசகு எண்ணெயை பயன்படுத்துவதால் தடுக்கலாம், இது யோனி வறட்சியை எதிர்க்க உதவும். உடல் உறவின் போது ஆழமான ஊடுருவலை தவிர்ப்பது உதவலாம். பிசின்-இலவச ஆணுறைகளை உபயோகிப்பது ஒவ்வாமை வலிமையைத் தவிர்க்க உதவும். பாலுறவின் போது ஆணுறை பயன்படுத்தப்படுவது மேலும் sti ஐ தவிர்க்கவும், மேலும் யோனி வலியை தவிர்க்கவும் உதவும். வால்வர் தொற்றை தவிர்க்க கூடிய மற்ற வழிகள்:

 • நெருக்கமான பகுதியில் சரியான சுகாதாரத்தை பராமரித்தல்
 • சூடான, ஈரமான சூழலில் பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படலாம் என்ற காரணத்திற்காக இறுக்கமான செயற்கை ஆடைகளைத் தவிர்த்தல் (இது ஆடை ஒவ்வாமைகளை தவிர்க்க உதவும்)
 • Uti ஐ தடுக்க போதுமான தண்ணீர் குடித்தல்
 • சுத்தப்படுத்திகள் மற்றும் பிற வாசனையுள்ள பொருட்களை யோனியில் பயன்படுத்துவதை தவிர்த்தல்
 • நல்ல பாக்டீரியாவையும் சேர்த்து கழுவும் என்பதால் அடிக்கடி யோனியை கழுவுவதை தவிர்த்தல்
 • ஒவ்வொரு நாளும் உள்ளாடைகளை மாற்றுதல்

கருப்பை கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, யோனி வலியைத் தடுக்க உதவும்.

கர்ப்பகாலத்தின் போது, புகைபிடிப்பதை தவிர்ப்பதன் மூலம் யோனி வலி ஏற்படாமல் பாதுகாக்கலாம், ஏனெனில் அது இடம் மாறியகருவுறுதல் அபாயத்தை அதிகரிக்கிறது. பொது உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை கவனித்துக்கொள்வது யோனி நோய்த்தாக்கங்களைத் தவிர்ப்பதில் முக்கியமானது ஆகும்.

(மேலும் வாசிக்க: யோனி இரத்தப்போக்குக்கான சிகிச்சை)

உங்கள் மருத்துவர் உங்கள் அறிகுறிகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் அடிப்படையில், மேலே விவாதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒரு ஆய்வு செய்ய வேண்டும். நோயறிதலின் பல்வேறு முறைகள்:

 • மருத்துவ வரலாறு: இது யோனி நோய்த்தொற்று அல்லது pcod போன்ற பிரச்சனைகளின் ஒரு அடிப்படை காரணமா என்பதை அறிய உதவும்.
 • குடும்ப வரலாறு: டிஸ்மெனோரியாவின் குடும்ப வரலாறு இருப்பதைத் தீர்மானிக்க
 • மருந்து வரலாறு: அன்டிஹிஸ்டமமைன் போன்ற சில குறிப்பிட்ட மருந்துகள் பெண்களுக்கு குறிப்பாக உடலுறவின் போது வால்வர் வலியை ஏற்படுத்தலாம்
 • உடல் பரிசோதனை: இது யோனி பகுதியில் தொற்று அல்லது வீக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிய உதவும்
 • சிறுநீர்ப்பை: சிறுநீரில் இரத்தம், புரதம், முதலியன இருப்பதைக் கண்டறிய
 • இடுப்பு பகுதியில் அல்ட்ராசவுண்ட்: வலியை உண்டாக்கும் அடிப்படை கோளாறுகளை கண்டறியவும், உறுதி செய்யவும்

(மேலும் வாசிக்க: கருத்தரிப்பு பரிசோதனை)

 • மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் லேசான யோனி வலியை வயிற்று மசாஜ் மற்றும் சூடான ஒத்தடங்களால் நிர்வகிக்கலாம், மேலும் அதனுடன் அழற்சி மற்றும் வலி நிவாரணி மருந்துகளை உபயோகிக்க, உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பதட்டம் மற்றும் மனநிலையை ஊசலாட்ம் போன்ற ப்ரீமென்சுரல் நோய்குறிகளை தவிர்க்க, போதுமான ஓய்வு மற்றும் தியானம் எடுத்துகொள்ள வேண்டும். கவலை எதிர்ப்பு மருந்துகள் கூட உதவலாம்.
 • ஈஸ்ட் அல்லது பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் யோனி வலியைப் பொறுத்தவரையில், பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் சுட்டிக்காட்டபடுகின்றன. ஸ்டீராய்டு கிரீம்கள் மற்றும் பிற மேற்பூச்சு முகவர்கள், மற்ற யோனி நோய்த்தொற்றுகள் அல்லது வீக்கத்தின் மேலாண்மைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
 • சிறுநீர் பாதை நோய்த்தொற்று காரணமாக ஏற்படும்  யோனி வலி சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்துவதை உள்ளடக்கியது.
 • ஒரு சூடான குளியல் மற்றும் வலி நிவாரணிகளின் பயன்பாடு உடலுறவுக்குப் பிறகு வலியைத் தீர்ப்பதில் உதவும்.
 • அட்ரபிக் வஜினிடிசை நிர்வகிப்பதற்கு, வாய்வழி அல்லது யோனி வழி எஸ்ட்ரோஜன் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
 • உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் யோனி வலிக்கு நோய்க்காரணி தெரியவில்லை என்றால் அதை கண்டறிய மற்றும் குணப்படுத்த உளவியல் உதவி பெற பரிந்துரைக்கப்படுகிறது.
 • கர்ப்பகாலத்தில் யோனி வலி சிகிச்சையானது இடுப்பு மசாஜ் மற்றும் சூடான ஒத்தடங்களுடன் கூடிய கால்கள் மற்றும் இடுப்பு பகுதியை உயர்த்தும் உடற்பயிற்சியையும் உள்ளடக்கியது. உதவி பெல்ட்களை கூட அணியலாம், ஆனால் மகளிர் மருத்துவ ஆலோசகரிடம் பரிந்துரை பெற வேண்டும். மேற்பூச்சு சார்ந்த மயக்க மருந்துகள் பேறுகாலத்திற்கு பிந்தைய (பிரசவத்திற்கு பிறகு) யோனி வலியை நிர்வகிக்க உதவும்
 • இதை தவிர, மருந்து சிகிச்சை அல்லது நார்த்திசுக்கட்டிகளின் விஷயத்தில் அறுவை சிகிச்சை நீக்கம் போன்ற குறிப்பிட்ட சிகிச்சை நடவடிக்கைகள் தேவைப்படலாம். எந்த அறியப்பட்ட / தெரியாத காரணத்தினாலும் நீங்கள் கடுமையான யோனி வலியை அனுபவித்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

யோனி வலி பெரும்பாலும் கடுமையான காரணங்களுடன் தொடர்பு இல்லாதது மற்றும் பெரும்பாலும் சுயமாக கட்டுப்பட கூடியது. அரிதாக, இது யோனி ஃபைபிராய்டுகள் அல்லது எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது, இது கருமுட்டை உண்டாதல் மற்றும் கருத்தரித்தல் ஆகியவற்றில் பெண்களில் சிரமத்தை ஏற்படுத்தும். ஒரு எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட்டால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

யோனி வலி காரணமாக இறப்பு ஆபத்து மிகவும் குறைவாக உள்ளது, மற்றும் அது ஒட்டுமொத்த நல்ல முன்கணிப்பை கொண்டுள்ளது. இருப்பினும், பெண்களின் பாலியல் வாழ்க்கை தரம் வலி நீடிக்கும் வரை பாதிக்கப்படக்கூடும்.

மேற்கோள்கள்

 1. American College of Obstetricians and Gynecologists [Internet] Washington, DC; Dysmenorrhea: Painful Periods
 2. American Pregnancy Association. [Internet]; Stages Of Childbirth: Stage I.
 3. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Period pain: Overview. 2008 Feb 22 [Updated 2016 Jul 1].
 4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Menstruation - pain (dysmenorrhoea)
 5. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Diary: Premenstrual syndrome (PMS). 2017 Jun 14.
 6. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Endometriosis: Overview. 2008 Feb 25 [Updated 2017 Oct 19].
 7. UCLA Health. What are Fibroids. California, United States [Internet]
 8. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Pelvic inflammatory disease.
 9. National Center for Advancing and Translational Sciences. Adenomyosis. Genetic and Rare Diseases Information Center
 10. Government of Western Australia. Ectopic pregnancy. Department of Health
 11. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Ectopic pregnancy
 12. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Gestational Trophoblastic Disease Treatment
 13. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Vaginal infections.
 14. F. A. Taran, E. A. Stewart, S. Brucker. Adenomyosis: Epidemiology, Risk Factors, Clinical Phenotype and Surgical and Interventional Alternatives to Hysterectomy. Geburtshilfe Frauenheilkd. 2013 Sep; 73(9): 924–931. PMID: 24771944
 15. Quality-assessed Reviews [Internet]. York (UK): Centre for Reviews and Dissemination (UK); 1995-. Dyspareunia and quality of sex life after surgical excision of endometriosis: a systematic review.
Read on app