பசியற்ற உளநோய் (அனோரெக்ஸியா நெர்வோசா) என்றால் என்ன?
பசியற்ற உளநோய் என்பது உண்ணுதல் கோளாறு அதே போல இது ஒரு விதமான மனநோய் ஆகும், அதாவது உடல் எடையை இழக்க ஆசைப்படும் ஒருவரின் இடைப் பொருத்தமற்ற குறைந்த உடல் எடைக்கு இட்டுச்செல்கிறது. நோயாளி ஒரு ஆரோக்கியமான உடலில் குறைபாடு உள்ளதாக தவறாகக் கருதிக்கொண்டு எடையை இழப்பதற்காக கடுமையாக உழைப்பதாகவும் அறியப்படுகிறது. பொதுவாக இளமை பருவத்திலே பசியற்ற உளநோய் தொடங்குகிறது என்றாலும், அது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மத்தியிலும் காணப்படுகிறது.
பசியற்ற உளநோயின் முக்கிய காரணங்கள் என்ன?
- உண்ணும் பழக்கத்தில் அறிகுறிகள்:
- மெலிந்த உடல்வாகுடன் இருந்தாலும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு பழக்கத்தை பின்பற்றுவது.
- பகுத்தறிவற்ற காரணங்களுடன் உணவுகளைத் தவிர்ப்பது.
- உணவு மற்றும் கொழுப்பு சத்துக்களை உண்ணும் போது விடாப்பிடியான எண்ணத்தால் குறைவாக உட்கொள்வது.
- பெரும்பாலும் உணவை உண்பதுபோல் பாசாங்கு செய்வது அல்லது உணவு சாப்பிடுவது பற்றி அடிக்கடி பொய் சொல்வது.
- தோற்றம் மற்றும் உடல் வடிவத்தில் அறிகுறிகள்:
- திடீர், கடுமையான எடை இழப்பு.
- அதிக எடை கொண்டதாக ஒரு மாயத்தோற்றம்.
- துன்பப்படுபவராகத் தெரியக்கூடாதென்று தோற்றத்தில் தீவிரமாக கூடுதல் கவனம் செலுத்துவது.
- உடல் மற்றும் தோற்றத்தை தொடர்ந்து சுய-விமர்சனம் செய்வது.
- எடைக் குறைத்தலினால் ஏற்படும் அறிகுறிகள்
- அதீத- உடற்பயிற்சி.
- சாப்பிட்ட பிறகு கட்டாயப்படுத்தி வாந்தி எடுப்பது.
- எடை இழக்கும் பொருட்டு மாத்திரைகள் உட்கொள்வது (எ.கா. மலமிளக்கி).
- கவனிக்கவேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்: மன அழுத்தம், பதட்டம், உடையக்கூடிய எலும்புகள் மற்றும் நகங்கள், கடுமையான முடி இழப்பு, அடிக்கடி மயக்கம் அடைதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பசியற்ற உளநோய்க்கு ஒரு தனிப்பட்ட காரணம் இல்லை, ஆனால் இது பல காரணிகளாலான கோளாறு.
- பொதுவாக பங்களிக்கும் காரணிகள்:
- பூரணம், துன்புறுத்தல் மற்றும் போட்டியிடும் குடும்ப பண்புகள்.
- குடும்ப மோதல்கள்.
- கல்வி அழுத்தங்கள்.
- குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உணவு உண்ணுதல் கோளாறின் வரலாறு.
- வீழ்ப்படிவு காரணிகள்:
- தவறான குழந்தை பருவம்.
- பருவமடைதல் அல்லது இளமை பருவத்தின் ஆரம்ப காலம்.
பசியற்ற உளநோய் எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
- நோய் கண்டறிவதற்கான வரன்முறைகள்:
- ஒரு குறிப்பிட்ட வயது மற்றும் உயரத்திற்கு தேவையான குறைந்தபட்ச எடை அல்லது அதற்கு மேல் உடல் எடையை பராமரிப்பதில்லை.
- குறைந்த எடையை கொண்டிருந்தாலும் தீவிரமாக எடை அதிகரித்துவிடுமோ என்ற நம்பத்தகாத பயம்.
- உடல் எடை மற்றும் வடிவம் தொடர்பாக ஒரு தவறான கருத்து.
- ஆரம்பக்கால மாதவிடாய் ஏற்படக்கூடிய பெண்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருத்தல்.
- சிகிச்சை முறைகள்:
- மருத்துவமனையின் சேர்க்கை என்பது எடையை அதிகரிக்க மீண்டும் உண்பித்தலில் ஈடுபடுத்த எடுத்துக் கொள்ளப்படும் நடவடிக்கையின் ஆரம்ப தலையீடாகும். இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இது முக்கியமாக செய்யப்படுகிறது.
- இரண்டாவது அணுகுமுறையில் உணவு நிபுணர்களின் ஆலோசனையோடு உளவியல் ஆலோசனையம் வழங்கப்படுகிறது. இங்கு, குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் உணவு உண்பித்தலுக்கு பொறுப்பேற்கிறார்கள். இந்த முறையில் முடிவுகள் மிகவும் மெதுவாக இருக்கும், ஆனால் எடை அதிகரிப்பு சரியாக நிர்வகிக்கப்படுவதில் வாய்ப்பு அதிகம்.
- அனோரெக்சியாவுக்கான உளவியல் சிகிச்சை என்பது நீண்ட-கால சிகிச்சை, அதில் சிக்கலான சிகிச்சை முறைகள், அறிவாற்றல் மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சையுடன் கூடிய புலனுணர்வு மறுசீரமைப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த சிகிச்சை மற்றும் அத்தோடு ஆதரவு சிகிச்சை ஆகியவை உள்ளடங்கியது. ஆதரவு சிகிச்சை என்பது ஆரோக்கியமான உறவை பராமரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது, இதையொட்டி பசியற்ற உளநோய்க்கு வழிவகுக்கும் காரணிகளை பரிசோதித்து மற்றும் அதற்கான தீர்வும் வழங்கப்படுகிறது.