சுருக்கம்
வாய் துர்நாற்றம் என்பது, மூச்சு விடும் பொழுது வாயிலிருந்து வெளிப்படும் ஒரு விரும்பத்தகாத வாடை, என வகைப்படுத்தப்படுகிறது. மருத்துவத் துறை சொற்களில், வாய் துர்நாற்றம் என்பது ஹாலிட்டோஸிஸ் அல்லது வாயின் மோசமான வாடை எனக் கூறப்படுகிறது. அதன் ஆதாரமான இடம் எதுவாயினும்(வாய் அல்லது உடல்), உடலில் இருந்து வெளிப்படும் விரும்பத்தக்கதாக வாடையும் ஹாலிட்டோஸிஸ் என அறியப்படுகிறது. ஆனால், வாயில் மோசமான வாடை என்பது, குறிப்பாக வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தைக் குறிக்கிறது. வாய் துர்நாற்றம், உலகளவில் அதிகளவு மக்களைப் பாதிக்கிறதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இது, அவ்வப்போது புறக்கணிக்கப்படுகிறது மற்றும் வாய் துர்நாற்றத்தினால் பாதிக்கப்படும் நபர்கள், குறிப்பிடத்தக்க உளவியல் மற்றும் சமுதாய ரீதியான தடைகளை சந்திக்கிறார்கள். வழக்கமாக நமது ஈறுகள் மற்றும் நாக்கில் ஒரு பூச்சை உருவாக்கும் ஈறு பிரச்சினை போன்ற நுண்ணுயிர் செயல்பாடு, வாய் துர்நாற்றத்தின் மிகவும் வழக்கமான காரணமாகும். நல்ல செய்தி என்னவென்றால், ஒரு நல்ல வாய் சுகாதாரம் மற்றும் ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட மருந்துகள், வழக்கமாக, வாய் துர்நாற்றத்திலிருந்து முழுமையாக மீண்டு வர உதவுகின்றன என்பதாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
நாள்பட்ட வாய் துர்நாற்றம், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 25% பேரைப் பாதிக்கின்ற ஒரு தீவிரமான பிரச்சினையாகும். வாய் துர்நாற்றத்தினால், ஆண்களும், பெண்களும் சம விகித அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆண்களை விடப் பெண்கள், விரைவாக உதவி மற்றும் சிகிச்சையை நாடுகிறார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மருத்துவர்கள், வாய் துர்நாற்றம், பலநேரம், குறைந்த அளவு மருத்துவத் தலையீடுகள் மூலமே குணப்படுத்தக் கூடியது என்கிறார்கள். இருந்தாலும், விரும்பத்தகாத வாடை மற்றும் வாய் துர்நாற்றம், குறிப்பிட்ட பின்னால் மறைந்திருக்கும் மருத்துவ பிரச்சினைகளின் காரணமாகவும் கூட ஏற்படக் கூடும். அதனால், அதைப் புறக்கணிக்காமல், உங்களுக்கு 15 நாட்களுக்கு மேல் வாய் துர்நாற்றம் நீடித்தால், ஒரு மருத்துவரை, குறிப்பாக, ஒரு பல் மருத்துவரை அல்லது இ.என்.டி நிபுணரை, தயவுசெய்து கலந்தாலோசியுங்கள்.