வழுக்கை என்றால் என்ன?
பால்ட்னஸ் என்பது அலோபேசியாவின் மற்றோரு பெயராகும், அதாவது உச்சந்தலையிலிருந்து முடியுதிர்தல் என்று அர்த்தம். சில மயிர் கற்றைகளை இழப்பதென்பது பொதுவானதே மேலும் பெரும்பான்மையானவர்களுக்கு முடி மீண்டும் வளர்ந்துவிடுவதால் அது பொருட்டாக இருக்காது, ஆனால் வயது அதிகரிக்கும்போது முடி வளர்வது என்பது அரிதாகிவிடுகிறது.
பருவமடைந்த பின், முடியுதிர்தலின் அமைப்பு (பாட்டன்ட் முடியுதிர்தல்) இருபாலினரிடமும் காணப்படுகிறது. 35 வயதில் தொடங்கி, மூன்றில்-இரண்டு ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுகிறது, 40 சதவிகிதத்தினருக்கு கவனிக்கக்கூடிய முடியிழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில், 0.7% சதவிகித மக்கட்தொகை முடியிழப்பை சந்திக்க நேரிடுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் மற்றும் குறியீடுகள் யாவை?
வழுக்கைக்கான காரணங்களை வைத்து பார்க்கையில் இது பலவடிவங்களில் தோன்றலாம். இது திடீர் அல்லது மெதுவான முடியிழப்பை ஏற்படுத்துவதோடு மேலும் உங்கள் உச்சந்தலை அல்லது முழு உடலிலும் பாதிப்பு ஏற்படலாம். இது நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ கூட இருக்கலாம்.
முக்கிய அறிகுறிகளும் குறியீடுகளும் பின்வருமாறு:
- சன்னமடைந்து கொண்டே போவது (ப்ரோக்ரெஸ்ஸிவ் தின்னிங்).
- உங்கள் தலையின் மேல் இருக்கும் முடிகள் மெதுவாக வலுவிழக்கும்.
- வட்டமாகவோ அல்லது புள்ளிகளின் இணைப்புகளாக இருப்பது.
- திடீர் முடியிழப்பு.
- முழு முடியிழப்பு.
- செதில் இணைப்புகளாக உச்சந்தலை பகுதியில் முழுக்க பரவுவது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
அது மரபணு மூலமாகவோ அல்லது தானாக ஈட்டியதாகவோ கூட இருக்கலாம். ஆண்ட்ரோஜெனிக் அலோபியாவே (95% க்கும் அதிகமானவர்கள்) ஆண்களின் முடி இழப்புக்கு மிக பொதுவான காரணமாகும்.
- மரபுவழி:
இது குடும்பவழியாகவும், வயதானவுடனும் ஏற்படுகிறது மற்றும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.
- ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மருத்துவ நிலைகளின் காரணங்கள்:
கர்ப்பம், மாதவிடாய், தைராய்டு குறைபாடுகள், மற்றும் உச்சந்தலை தொற்றுநோய்கள் ஆகியவைக்கூட முடி இழப்புக்கு காரணமாக இருக்கலாம்.
- மருந்து தொடர்பான முடி உதிர்தல்:
புற்றுநோய், ஆர்த்ரிடிஸ் (கீல்வாதம்), மனச்சோர்வு, முடக்குவாதம் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் மருந்துகளே வழுக்கைக்குக் காரணியாக அமைந்துவிடுகிறது.
- ரேடியேஷன் தெரபி:
தீமைதரும் கதிர்வீச்சுகளின் வெளிப்பாடு நிரந்தர முடி உதிர்தலுக்கு வித்திடுகிறது.
- மன அழுத்தம்
மன அழுத்தம் மற்றும் மன அல்லது உடல் அதிர்ச்சியின் விளைவாகக்கூட முடியிழப்பு ஏற்படலாம்.
- முடி சிகிச்சைகள்:
இறுக்கமான போனிடைல் அல்லது கார்ன்ரோஸ் போன்ற சிகை அலங்காரங்கள் ட்ராக்ஷன் அலோபேசியாவை ஏற்படுத்தும்.
- ஊட்டச்சத்து குறைபாடு:
லைசின் போன்ற அத்தியாவசியமான அமினோ ஆசிடுகளின் பற்றாக்குறையும் வழுக்கைக்கு வழிவகுக்கிறது.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஆண்-வகை வழுக்கை தோற்றம் மற்றும் முடியிழப்பின் அமைப்பு மற்றும் மருத்துவ வரலாறு மூலமாக கண்டறியப்படுகிறது. இது ஹாமில்டன்-நார்வுட் வகைப்படுத்துதல் முறையைப் பயன்படுத்தி வகைப்படுத்தப்பட்டிருக்கிறது, மேலும் லுட்விக் முறையைப் பயன்படுத்தி பெண் வகை முடியிழப்பு வகைப்படுத்தப்படுகிறது. உச்சந்தலையில் வடுக்கள் இருந்தால், நீங்கள் ஒரு தோல் மருத்துவரை சந்திக்க குறிப்பிடபடுவீர்கள். வடு-அல்லாத அலோபேசியாவாக இருந்தால், சிதைவிலிருக்கும் சிறிய அளவிலான தோலை எடுத்து பூஞ்சை தொற்றுநோய்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகும் தெளிவான காரணத்தை கண்டறிய முடியாவிட்டால், உச்சந்தலை திசுசோதனையை மேற்கொள்ளலாம். பரவலான முடியுதிர்தலாக இருந்தால், சீரம் ஃபெர்ரிட்டின் மற்றும் தைராய்டு சோதனைகளை செய்ய பரிந்துரைக்கப்படுவீர்கள்.
சிகிச்சை:
- முக்கியமாக, 5-ஆல்பா ரிடக்டேஸ் தடுப்பான்கள் முடி மறுசீரமைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மையான பொருட்கள் ஆன்டி-பிரிஸ் பண்புகளின் காரணமாக பாம்பு எண்ணையை கொண்டிருக்கிறது.
- மன அழுத்தத்தை நீக்குவதென்பது முடியின் மறுவளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
- லேசர் சிகிச்சையின் மூலமாக முடி வளர்ச்சியை தூண்டிவிடுவதனால் சிறந்த முடிவுகளை காணமுடிகிறது.
- அறுவை சிகிச்சை மூலம் முடியிழப்பை குறைத்து பழையநிலைக்கு மாற்றமுடியும்.
- முடி பெருக்கல், அதாவது சுயமாக-நிரம்பக் கூடிய ஃபோலிக் ஸ்டெம் செல்களை ஆய்வுகூடத்தில் பெருக்கி, உச்சந்தலையில் மைக்ரோஇஞ்செக்ட் செய்யப்படுவதினால், இது முடியின் மறுவளர்ச்சிக்கு வித்திடுகிறது.
- அத்தியாவசிய அமினோ ஆசிட்ஸ் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துகள் முறையான முடி வளர்ச்சிக்கு மிக அவசியம் என்பதால் ஊட்டச்சத்துக்களை கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- ஒரு ட்ரிகோலஜிஸ்ட்டை கலந்தாலோசித்து உங்கள் முடிக்கென பயன்படுத்தும் பொருட்களை மாற்றலாம்.
- கொதிக்கும் தண்ணீரைக்கொண்டு தலைக்கு குளிப்பதை தவிர்க்கவும் ஏனெனில் இது தலையில் இருக்கும் முக்கிய எண்ணெய்களை அகற்றிவிடுவதால் உச்சந்தலை வறண்டுவிடும்.
- உச்சந்தலையில், நல்ல முடிக்கான எண்ணைகளை கொண்டு மசாஜ் செய்யவும்.
- ட்ரான்ஸ்பிளான்ட் செய்துகொள்ளலாம்.
- புகைப்பிடித்தலை அடியோடு நிறுவதும் மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதும் மற்றோருவழி.
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உடல் பயிற்சிகளில் ஈடுபடலாம்.
- இரத்தச் சுழற்சியை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பரந்த பற்களை உடைய சீப்புகளை கொண்டு முடியை சீவிக்கொள்வதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும்.
மருந்துகள் மட்டுமின்றி, வாழ்க்கை முறை மாற்றங்களும் சிறந்த முடிவுகளுக்கு வித்திடுகிறது மற்றும் ஏற்கனவே இருக்கும் முடிகளை மேலும் எந்த வித பாதிப்பிலிருந்தும் அல்லது இழப்புகளிலிருந்தும் பாதுகாக்கலாம்.