சிறுநீர்ப்பை தொற்று - Bladder Infection in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

November 28, 2018

July 31, 2020

சிறுநீர்ப்பை தொற்று
சிறுநீர்ப்பை தொற்று

சிறுநீர்ப்பை தொற்று என்றால் என்ன?

சிறுநீர்ப்பை தொற்று (சிஸ்டிடிஸ்) என்பது சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் மிகவும் பொதுவான தொற்றாகும், இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கிறது. சிறுநீர்ப் பாதையில் தொற்று நோய்களால் பாதிக்கப்படும் மற்ற பாகங்கள் சிறுநீரகங்கள் (சிறுநீரக நுண்குழல் அழற்சி) மற்றும் சிறுநீர்ப்பைக்குழாய் (சிறுநீர்ப் புறவழி அழற்சி) ஆகியவையாகும். ஆண்களைவிட பெண்கள் சிறுநீர்ப்பை தொற்றுக்கு அதிகமாக உள்ளாகின்றனர். சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் உணர்வு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை சிறுநீர்ப்பை தொற்றின் பொதுவான அறிகுறிகள். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்று சிறுநீரகங்கள் மற்றும் / அல்லது சிறுநீர்க்குழாய்க்கு பரவுகிறது. நோய்த்தொற்றை அகற்றுவதற்கு மற்றும் அசௌகரியமான அறிகுறிகளை விடுவிக்க ஆண்டிபயாடிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

சிறுநீரக நோய்த்தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க வலி வேதனையை ஏற்படுத்தும். அவை பின்வருமாறு:

 • சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் / அல்லது எரிச்சல் உணர்வு.(மேலும் படிக்க : வலிமிக்க சிறுநீர் கழித்தலின்  காரணங்கள்).
 • அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற உணர்வு, ஒருமுறை சிறுநீர் கழித்த பிறகு உடனடியாக சிறுநீர் கழிப்பதற்கான ஒரு உந்துதல், பகல் மற்றும் இரவு முழுவதும் இது உணரப்படலாம்.
 • சிறுநீரை அடக்கமுடியாத உணர்வு.
 • சிறுநீர் நிறத்தில் மாற்றம் - மேகமூட்டமாக மற்றும் இருண்ட வண்ணத்தில் இருக்கலாம்.
 • கடுமையான தொற்று ஏற்பட்டால் சிறுநீருடன் இரத்தம் வெளியேறலாம்.
 • வலுவான சிறுநீர் நாற்றம்.
 • பொதுவான பலவீனம் அத்துடன் அடிவயிற்றில் வலி.
 • அளவுக்கு அதிகமான  நோய்த்தொற்று ஏற்பட்டால், குளிருடன்  காய்ச்சல் இருக்கும்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

சிறுநீர்ப்பாதை தொற்றுகள் அல்லது சிறுநீர்ப்பை தொற்று நோய்களில் பெரும்பாலானவை ஈ கோலி   என்று அழைக்கப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகின்றன.

தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள்:

 • சிறுநீர்ப்பையில் நீண்ட காலமாக வடிகுழாய் வைத்திருப்பது.
 • பாலியல் உடலுறவு, மாதவிடாய்,  கருத்தடைக்கான தடுப்பு முறைகள் (உதரவிதானம்), கர்ப்பம், மற்றும் பலவற்றால் பொதுவாக பெண்களுக்கு சிறுநீர்ப்பை தொற்று ஏற்படுகிறது. சிறுநீர்ப்பைக்குழாயின் குறுகிய நீளம் மற்றும் சிறுநீர்ப்பைக்குழாய் மலத்துளைக்கு அருகில் இருக்கும் காரணத்தினால் சிறுநீர்ப்பை தொற்று பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
 • நீரிழிவு.
 • விரிவடைந்த புரோஸ்டேட் சுரப்பி.
 • அதிக வயது மற்றும் நீண்ட கால இயக்கமுடக்கல் (அசைவின்மை).
 • சிறுநீர்ப்பை தொடர்பான அறுவைசிகிச்சை அல்லது பிற பரிசோதனைகள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

அறிகுறிகள் மற்றும் உடல் பரிசோதனை மூலம் மருத்துவர்கள் சிறுநீர்ப்பை தொற்று நோயை கண்டறிகிறார்கள். நோயை உறுதிப்படுத்துவதில் கீழ்கண்ட சோதனைகள் உதவும்:

சிறுநீர் பகுப்பாய்வு

 • நோய்த்தொற்றின் போது சிறுநீரின் அதிகரித்த அமிலத்தன்மையை கண்டறிய டிப்-ஸ்டிக் சோதனை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரில் தொற்றுநோயை கண்டறிவதற்கான மிகச்சிறந்த சிக்கனமான சோதனை இது.
 • நைட்ரைட்ஸ் மற்றும் லியூகோசிட் எஸ்டெரெஸ் சோதனைகள் மூலம் தொற்றின் போது சிறுநீரில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை கண்டறியலாம்.
 • யூரின் கல்ச்சர் மூலம் ஆய்வகத்தின் செயற்கை மீடியாவில் சிறுநீர் மாதிரியை கொண்டு, தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சி மதிப்பீடு செய்யப்படுகிறது.

உருவமாக்கல் ஆய்வுகள்:

உயர்தர மற்றும் தொடர்ச்சியான நோய்த்தாக்கங்கள் அல்லது நிலையான சிகிச்சைக்கு பதிலளிக்காத நோய்த்தாக்கங்களில் பல்வேறு பிற ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அவை பின்வருமாறு:

 • சிஸ்டோஸ்கோபி.
 • அல்ட்ராசவுண்ட்.
 • எக்ஸ்- கதிர்கள் உருவமாக்கம்.
 • சிரைவழி பைலோகிராம் (ஐ.வி.பி).
 • கணிப்பொறி பருவரைவு அலகீடு (சி.டி ஸ்கேன்).
 • காந்த ஒத்ததிர்வுத் தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ).
 • யூரோடினாமிக் ஆய்வுகள்.

சிறுநீரக நோய்த்தொற்றின் சிகிச்சை, நோய்த்தொற்றை அழிப்பது மற்றும் அசௌகரிய அறிகுறிகளிலிருந்து நிவாரணம் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள்

 • பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொண்ட 5 நாட்களில் பெரியவர்களுக்கும், 2 முதல் 3 நாட்களில் குழந்தைகளுக்கும் சிறுநீர்ப்பை தொற்று சரியாகிறது.
 • நீண்டகாலத்திற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக்கொண்டால் தொற்று மீண்டும் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
 • கடுமையான தொற்றுநோய்களில், நரம்புகள் வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்படுகின்றன.

பிற மருந்துகள்:

 • சிறுநீர் அல்கலைசர், சிறுநீரின் அமிலத்தன்மையைக் குறைத்து, எரிச்சல் உணர்வைக் குறைக்கும் மருந்துகளாகும்.

சுய பாதுகாப்பு

 • அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் தொற்றை நீக்குவதற்கு திரவங்களை நிறைய அருந்தவும்.
 • சிறுநீர்ப் பாதை  நோய்த்தொற்று - இன்  போது இபுப்ரோஃபேன் அல்லது ஆஸ்பிரின் போன்ற என்எஸ்ஏஐடி  (ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும், இது சிக்கல்களை ஏற்படுத்தும்.
 • கிரேன்பெரி சாறு சிறுநீரக நோய்த்தொற்றுகளை மீண்டும் வராமல் தடுக்க உதவுகிறது.
 • சுடுதண்ணீர் ஒத்தடம் வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.மேற்கோள்கள்

 1. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Definition & Facts
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cystitis - acute
 3. National Kidney Foundation. Urinary Tract Infections. [internet]
 4. American Academy of Family Physicians. Diagnosis and Treatment of Acute Uncomplicated Cystitis. Am Fam Physician. 2011 Oct 1;84(7):771-776. University of Maryland School of Medicine, Baltimore, Maryland
 5. National Health Service [Internet]. UK; Urinary tract infections (UTIs)
 6. National Health Service [Internet]. UK; Urinary tract infections (UTIs)

சிறுநீர்ப்பை தொற்று க்கான மருந்துகள்

Medicines listed below are available for சிறுநீர்ப்பை தொற்று. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.