கண்ணிமை அழற்சி என்றால் என்ன?
கண்ணிமையில் ஏற்படும் அழற்சியானது முக்கியமாக பாக்டீரியா தொற்றின் காரணமாக கண்ணிமையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுகிறது. புருவங்களில் உள்ள மயிர்க்கால்கள், மெய்போமியன் சுரப்பி (கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க எண்ணெய்-சுரக்கும் சுரப்பிகள்), மற்றும் கண்ணீரகச் சுரப்பி (கண்ணீர் சுரக்கும் சுரப்பிகள்) ஆகியவை கண்ணிமைகளில் அழற்சி ஏற்படும் பொதுவான தளங்கள். கண்ணிமை அழற்சிக்கு மீண்டும் நிகழும் இயல்பு உண்டு.
கண்ணிமை அழற்சியின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கண்ணிமை அழற்சி உண்டாகும் தளத்தை பொறுத்து பலவிதமான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
- ப்ளேபாரிடிஸ் (கண்ணிமை அழற்சி) - கண்ணிமை விளிம்பில் உள்ள புருவத்தில் இருக்கும் மயிர்க்கால்களில் ஏற்படும் அழற்சியாகும். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சிவத்தல், வீக்கம், மற்றும் வலிமிகுந்த கண்ணிமை விளிம்புகள்.
- புருவத்தின் அடித்தளத்தில் இருக்கும் மேலோடு தடிமனாகவோ அல்லது செதில்களாகவோ காட்சியளிப்பது.
- எரிச்சல் மற்றும் எரியும் கண்கள்.
- அதிகரித்த உணர்திறன் அல்லது வெளிச்சத்தை எதிர்கொள்ளமுடியாத நிலை.
- இமைநீர்க்கட்டி– இது வேர்வை சுரப்பியில்(ஸிஸ் சுரப்பி)மேலோட்டமாக இருக்கும் அடைப்பின் காரணமாக கண்ணிமைகளில் உருவெடுக்கும் நீர்கட்டி ஆகும். தொற்று காரணமாக இந்த அடைப்பு ஏற்படாது. நீடித்திருக்கும் ப்ளேபாரிடிஸ் அல்லது நீடித்திருக்கும் கண்கட்டி பெரும்பாலும் இமைநீர்கட்டியை உருவாக்கும்.
- ஆரம்பக்கட்டத்தில்,கண்ணிமைகளின் பாதிக்கப்பட்ட பகுதியில் சிவத்தல் மற்றும் வலி இருக்கும்.
- இமைநீர்கட்டியின் இறுதி நிலையில் வலி இருக்காது.
- ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு கண்ணிமைகளிலும் கூட இமைநீர்கட்டி ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
- ஹார்டியோலம் அல்லது கண்கட்டி - இது கண்ணிமைகளின் உள்ளே ஆழ்ந்து அமைந்திருக்கும் மீபோமியன் சுரப்பியிலும் புருவத்தில் இருக்கும் மயிர்க்கால்களில் ஏற்படும் தொற்றினாலும் கண்ணிமைகளின் விளிம்புகளில் ஏற்படும் வலிமிகுந்த கட்டி ஆகும்.
- டாக்ரியோஅடினிடிஸ் மற்றும் டாக்ரியோசிஸ்டிடிஸ் - இது கண்ணீர் சுரக்கும் சுரப்பி மற்றும் அதன் பையில் ஏற்படும் அழற்சி, அதோடு இது பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றினால் ஏற்படுகிறது.
- கண்களின் நாசிப்பக்கத்தில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம்.
- கண்கள் சிவந்திருத்தல்.
கண் இமை அழற்சியின் முக்கிய காரணங்கள் யாவை?
பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படும் தொற்றே கண் இமை அழற்சியின் முக்கிய காரணமாகும். கண் இமை வீக்கத்துடன் பொதுவாக தொடர்புடைய மற்ற நிலைகள் பின்வருமாறு:
- செபோர்ஹிக் டெர்மடிடிஸ் என்பது உச்சந்தலை, புருவங்கள், கண் இமைகள் ஆகியவற்றின் தோலில் இடம்பெற்றிருக்கும் எண்ணெய் சுரப்பிகளுடன் ஈடுபடுவதன் மூலம் ஏற்படுவது.
- ரோஸாசியா (முகத்தில் இருக்கும் தோலின் மாற்றம் மற்றும் சிவத்தல்) இது பெரும்பாலும் ப்ளேபாரிடிஸுடன் காணப்படுகிறது.
- கண் இமைகளில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் மூலம் சுரக்கும் எண்ணெயின் அளவு குறைந்திருந்தால் அல்லது எண்ணெய் சுரப்பு அசாதாரணமாக இருத்தல்.
எவ்வாறு கண் இமை அழற்சி நோய் கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
முக்கியமாக கண்களின் தோற்ற பரிசோதனை மற்றும் அறிகுறிகளின் வரலாறுகளை அடிப்படையாக கொண்டு மருத்துவர்கள் பல வகையான கண்ணிமை அழற்சிகளை கண்டறிந்துள்ளனர்.
சிகிச்சையின் நோக்கமானது அடிப்படை காரணத்தை குணப்படுத்துதல், வீக்கத்தை குறைத்தல், வீக்கம் காரணமாக ஏற்படும் மற்ற அறிகுறிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கச்செய்தல் ஆகியவை.
- ஆண்டிபயாடிக் கண் சொட்டு மருந்துகள் முக்கியமாக தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
- வீக்கம் கடுமையாக இருக்கும்போது ஸ்டீராய்டு கண் சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
- ப்ளேபாரிடிஸ் பொடுகுடன் தொடர்புடையதாக இருந்தால் மருத்துவர்கள் பொதுவாக பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பரிந்துரை செய்கின்றனர்.
சுய-கவன நடவடிக்கைகள் பயனளிப்பதாக இருக்கலாம்:
- சூடான அழுத்தமோ அல்லது ஒத்தடம் கொடுப்பதோ வீக்கம் குறைய உதவுகிறது மற்றும் கண்ணிமைகளில் எண்ணெய் சுழற்சியை அதிகரிக்கவும் உதவுகிறது
- கண் இமைகள் மீது செய்யும் மென்மையான மசாஜ் எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் அடைப்புக்களை அகற்ற உதவுகிறது.
- மிதமான சுடுதண்ணீரில் கலந்த மிதமான சோப்பு அல்லது மென்மையான துடைத்தல் கண் இமைகளின் மீது இருக்கும் ஒட்டும் தன்மை கொண்ட மேலோடையோ அல்லது செதில்களையோ சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.
- முறையான சுகாதாரத்தை பராமரித்தால், நோய் தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுக்கலாம்.