மூளை புற்றுநோய் - Brain Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 28, 2018

July 31, 2020

மூளை புற்றுநோய்
மூளை புற்றுநோய்

மூளை புற்று நோய் என்றால் என்ன?

மூளை புற்று நோய் என்பது கட்டுப்பாடற்ற அணுக்களின் பிரிவின் விளைவாக மூளையில் அசாதாரணமான உண்டாகும் வளர்ச்சி ஆகும்.அனைத்து மூளை கட்டிகளும் புற்றுநோயாக மாறுவது கிடையாது. மூளை புற்றுநோய் இரண்டு வகைப்படும்:

  • தீங்கற்ற (புற்று நோய் அல்லாத) - இவை தாழ்ந்த நிலையை சார்ந்த கட்டிகள் (1 அல்லது 2), மெதுவாக வளரும் தன்மை கொண்டவை மற்றும் இவை சிகிச்சைக்கு பிறகு அரிதாக திரும்பி வரும்.
  • தீங்கானது (புற்று நோய் உண்டாக்குபவை) - இவை உயர்த்தர கட்டிகள் (3 அல்லது 4), இவை மூளையில் உண்டாகி பிற பகுதிகளை தாக்கும் (முதன்மையாக) அல்லது வேறு எங்காவது தொடங்கி மூளையை தாக்கும் (இரண்டாந்தரமான).

மூளைப்புற்று நோய் உண்டாகும் இடமும் அதன் வளர்ச்சி தன்மையும் நரம்பு மண்டலத்தின் பாதிப்பை நிர்ணயிக்கும்.

இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் யாவை?

அறிகுறிகள் மூளையில் பாதிக்கப்பட்ட இடத்தை பொறுத்து இருக்கும். பின்வருபவை மூளை புற்றுநோயின் சில அறிகுறிகள்:

  • தலைவலி தான் முளைக்கட்டியின் முதன்மை அடையாளமாகும், அவை லேசானதாக,கடுமையானதாக, தொடர்ந்து அல்லது விட்டு விட்டு நிகழலாம்.
  • பேசுவதில் சிரமம்.
  • திடீர் நோய்ப்பிடிப்பு.
  • குமட்டல், அயர்வு மற்றும் வாந்தி.
  • அதிகரித்த பலவீனம் மற்றும் உடம்பின் ஒரு பகுதியில் பக்கவாதம்.
  • வார்த்தைகள் ஞாபகவைப்பதில் சிரமம் போன்ற மனநிலை பிரச்சனைகள்.
  • சமநிலை இழப்பு.
  • பலவீனமான கண் பார்வை, கேட்கும் திறன், வாசனை மற்றும் சுவை.

மூளைப்புற்றுநோயின் முக்கிய கரணங்கள் யாவை?

மூளைப்புற்றுநோயின் காரணம் தெரியவில்லை மற்றும் குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. எனினும் முளைப்புற்றுநோயுடன் தொடர்புடைய சில அபாய காரணிகள் பின்வருமாறு:

  • வயது - மூளைப்புற்றுநோயின் அபாயம் வயதுடன் அதிகரிக்கின்றது.
  • அதிக அளவுகளில் கதிர்வீச்சின் வெளிப்பாடு மூளைப்புற்று நோய் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கின்றது.
  • சிறு வயதில் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பெரியவர்கள் லூக்கிமியா அல்லது ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம்.
  • நேர்மறையான குடும்ப வரலாறும் சில மரபணு நிலைமைகளும் மூளைப்புற்றுநோய் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

மருத்துவர் நோயாளியின் இயக்க மறிவினைச் செயல், தசை வலிமை மற்றும் உணர்ச்சி பதில்கள் மூலியமாக கண்டறிவார். மூளைக்கட்டியின் அதிகரித்த அழுத்தத்தால் பார்வை நரம்பு வீக்கத்துடன் காணப்படலாம்.

முழுமையான கண் பரிசோதனை செய்யும் எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன்கள் மற்றும் பிளவு-விளக்குக் போன்ற கண் பரிசோதனை போன்றவை மூளைப்புற்றுநோயை கண்டறியும் முக்கிய சோதனைகள் ஆகும்.

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மற்ற சோதனைகள்:

  • காந்த அதிர்வு ஸ்பெக்ட்ரோஸ்கோபி
  • பி.ஈ.டி ஸ்கேன்
  • ஒற்றை ஃபோட்டான் உமிழ்வு  சி.டி (எஸ்.பி.இ.சி.டி) ஸ்கேன்
  • இடுப்புப்பகுதியில் பொத்தல்

கட்டியின் தரத்தை தீர்மானிப்பது அதன் வளர்ச்சியே. இது கட்டியின் அளவையும் அதன் பரவலையும் குறிக்கிறது.

  • 1 மற்றும் 2 ஆம் தரநிலை மெதுவான வளர்ச்சியை குறிப்பிடும்.
  • 3 மற்றும் 4 ஆம் தரநிலை வேகமான வளர்ச்சியை குறிப்பிடும்.

கட்டியின் தரத்தைப் பொருத்து, அதற்க்கு கீழ்கொடுக்கப்பட்டுள்ள சிகிச்சை அளிக்கப்படுகிறது:

  • ஸ்ட்டீராய்டுகள் - கட்டியை சுற்றி உள்ள வீக்கத்தைக் குறைக்க.
  • அறுவை சிகிச்சை - கட்டியை நீக்க
  • ரேடியோதெரபி - மேலும் எதாவது அசாதாரண அணுக்கள் இருந்தால் அவற்றை அழிக்க.
  • கீமோதெரபி- அசாதாரண அணுக்களை அழிக்கும் மருந்துகள்.

புற்று நோய் இல்லாத கட்டிகள் ஒரு நல்ல மீட்சி விகிதத்தில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பொதுவாக இளவயது நோயாளிகளுக்கு நோயின் முன்கணிப்பு மூலம் வெற்றியுடன் சிகிச்சை அளிக்க முடியும்.

மூளைப்புற்றுநோய் அரிது என்பதால் அதன் பிழைப்பு விகிதத்தை கணிப்பது கடினம். மூளைப்புற்றுநோய் தாக்கப்பட்ட மக்களில் ஏறத்தாழ 15 சதவீதம் நோயாளிகள் 5 வருடங்கள் அல்லது அதற்க்கு மேல் வாழ்ந்துள்ளனர்.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Brain tumours
  2. American Academy of Family Physicians [Internet]. Leawood (KS); Primary Brain Tumors in Adults: Diagnosis and Treatment
  3. American Association of Neurological Surgeons. Brain Tumors. Illinois, United States. [internet].
  4. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Brain Tumors: Patient Version
  5. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Brain Tumors: Health Professional Version