கார்சினோயிட் நோய்க்குறி(புற்றனையம் நோய்க்குறி) என்றால் என்ன?
கார்சினோயிட் புற்றுநோய்க் கட்டிகள் என்பது நரம்பு மற்றும் நாளமில்லா-உறுப்பு போன்ற இரண்டின் பண்புகளை உடைய உயிரணுக்களில், அதாவது நாளமில்லா நரம்பு உயிரணுக்களில் தோன்றும் அசாதாரண உயிரணுக்களே ஆகும்.இவை பொதுவாக செரிமான மண்டலத்தில் காணப்படுகின்றன.சில நேரங்களில், கார்சினோயிட் புற்றுநோய் கட்டிகள் உள்ளவர்கள் அந்த நோய்க்கு ஒத்திசைகாத்த கடினமான நிலைமைகள் மற்றும் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.
இதுவே பெரும்பாலும் கார்சினோயிட் நோய்க்குறி என விவரிக்கப்படலாம் - கார்சினோயிட் புற்றுநோய்க் கட்டிகளில் சுரக்கும் வேதிப்பொருட்களின் விளைவாக ஏற்படும் ஒரு நிலை.இதன் அறிகுறிகள் உடலின் பல பாகங்களிலும், பலவிதமான வெளிப்பாடுகளிலும் ஏற்படலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அறிகுறிகள் கட்டியின் இடத்தை பொறுத்தும் அதிலிருந்து சுரக்கும் இரசாயனங்களின் வகையை பொறுத்தும் வேறுபடும்.அதன் பொதுவான அறிகுறிகள் கீழ்கண்டவாறு
- காயம் அல்லது சிராய்ப்புக் காயம், ஊதாநிற தோல் கூச்சத்தினால் ஏற்படும் முக்கியமான இரத்தநாளம் போன்ற ஒரு தோற்றம்.
- வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு
- முகத்தில் சிவந்திருப்பதால் சூடு வெளியேறுதல் மற்றும் மார்பில் உள்ள வெப்ப உணர்வு ஒரு சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரத்திற்கு நீடிக்கும்.
- வேகமான இதயத் துடிப்பு.
- சுவாசத்தில் சிரமம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கார்சினோயிட் புற்றுநோய் கட்டியே அனைத்து அறிகுறிகளுக்கும் நோய்க்குறிக்கும் காரணமாக உள்ளது.புற்றுநோய் மிகவும் மேம்பட்ட கட்டத்தில் இருக்கும்போது இது பொதுவாக நிகழ்கிறது, இருப்பினும் முந்தைய கட்டங்களில் சில நோயாளிகளுக்கு கார்சினோயிட் நோய்க்குறி இருந்திருக்கின்றன.
கார்சினோயிட் கட்டிகள் வழக்கமாக மலக்குடல், பெருங்குடல், குடல், வயிறு அல்லது செரிமானப் பகுதியில் காணப்படுகின்றன.அதிலிருந்து சுரக்கும் இரசாயனங்களே இந்த அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.எல்லா கார்சினோயிட் புற்றுநோய்க்கட்டிகளும் இந்த நோய்க்குறியை ஏற்படுத்துவதில்லை, ஏனென்றால் அவை அனைத்துமே இரசாயனங்கள் சுரப்பதில்லை.
பெரும்பாலும், இரத்தத்தை வந்தடைவதற்கு முன்னர், இரசாயனங்கள் கல்லீரலால் நடுநிலை ஆக்கப்படுகிறது, இதனால் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. சில சந்தர்ப்பங்களில், இரசாயனங்கள் நடுநிலையாக்கப்பட கல்லீரலில் இருந்து வெகு தூரமாக கட்டிகள் இருக்கலாம் அல்லது கட்டி கல்லீரலில் இருக்கலாம் அல்லது கல்லீரலுக்கு பரவி இருக்கலாம், இதனால் ரசாயனங்கள் இரத்த ஓட்டத்தை அடைந்து கார்சினோயிட் நோய்க்குறியாக வெளிப்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
இந்த புற்றுநோயைக் கையாளும் பெரும்பாலான நிபுணர்களும் நோயாளியின் வரலாற்றை நன்கு அறிந்திருப்பவரும் சிரமமின்றி இந்த நோய்க்குறியீட்டை கண்டறிய முடியும். இருப்பினும், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சில சோதனைகள் நடத்தப்படலாம்.கண்டறிதல் சோதனைகள் பின்வருமாறு:
- கார்சினோய்ட் புற்றுநோய்க் கட்டியிலிருந்து சுரக்கும் செரோடோனின் இருப்பை கண்டறிய சிறுநீர் பரிசோதனை.
- கிரோமோகிரானின் ஏ என்னும் கார்சினோய்ட் இரசாயனத்தை கண்டறிய இரத்த பரிசோதனை.
- புற்றுநோய்க் கட்டி மற்றும் அதன் பரவலை கண்டறிய சிடி ஸ்கேன் மற்றும் இயல்நிலை வரைவு சோதனை.
இந்த நோய்க்குறிக்கு என்று சிகிச்சை எதுவும் இல்லை, அதற்கு பதிலாக புற்றுநோய்க்கே சிகிச்சை செய்யப்படுகிறது.இதற்கான முறைமை பின்வருமாறு:
- அறுவை சிகிச்சை நீக்கம்.
- தோல் சிவந்துபோதல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை குறைக்க மற்றும் கட்டியின் வளர்ச்சியை கட்டுப்படுத்த ஆக்ட்ரெயோடைடு மற்றும் லேன்ரியோடைடு போன்ற மருந்துகளை ஊசி மூலம் உட்செலுத்துதல்.
- கல்லீரல்சார்ந்த இரத்தக்குழாய் இடைச்செருகல் மூலம் கல்லீரலுக்கு செல்லும் இரத்தத்தை கைதுசெய்து புற்றுநோய் அணுக்களுக்கு செல்லும் இரத்தத்தை தடுத்தல்.
- கல்லீரலில் உள்ள புற்றுநோய் அணுக்களை கதிர்வீச்சு அதிர்வெண் மூலம் வெப்பமூட்டி நீக்குதல் அல்லது குளிர் மருத்துவம் (கிர்யோதெரபி) மூலம் புற்றுநோய் அணுக்களை உறைய வைத்து அழித்தல்.
- இண்டெர்ஃபெரான் அல்ஃபா பயன்படுத்தி நோயெதிர்ப்பு தன்மையை அதிகரித்து, கட்டிகளின் வளர்ச்சியை குறைத்தல் மற்றும் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளித்தல்.
- புற்றுநோய்க்கான கீமோதெரபி (வேதிச்சிகிச்சை).