செரிப்ரல் மலேரியா என்றால் என்ன?
செரிப்ரல் மலேரியா (சிஎம்), அதாவது தீவிரமான சிக்கல்களை கொண்ட மலேரியா என்பது வலிப்பு மற்றும் உணர்விழந்த முழு மயக்க நிலை போன்ற குணாதிசயங்களை கொண்ட ஒரு நரம்பியல் நோயாகும். இது பெரும்பாலும் மலேரியா-பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் இளங்குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் காணப்படுகிறது.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன?
கொசுக்கடித்த இரண்டு வாரங்களுக்குள் சிஎம் உருவாகும் மற்றும் 2 முதல் 7 நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் இருக்கும்.இது அசாதாரண நடத்தை, பலவீனமான உணர்வு,வலிப்பு நோய்கள், உணர்விழந்த முழு மயக்க நிலை மற்றும் பிற நரம்பியல் அறிகுறிகளை குணாதிசயங்களாக கொண்டுள்ளது.14 ல் 6 குழந்தைகள் அதிகரிக்கப்பட்ட பெருமூளை அளவுடன் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.குழந்தைகளிடம் இயக்கங்களில் குறைபாடு,பேச்சு சிரமங்கள்,காது கேளாமை மற்றும் பார்வையிழப்பு போன்ற குறைபாடுகளும் இந்த நோயால் ஏற்படுகிறது. இதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- வலிப்பு நோய்கள்.
- விழித்திரை நோய்.
- தெளிவான சுயநினைவில்லாமல் இருப்பது.
- அதிகரித்த மண்டையோடு அழுத்தம் மற்றும் வீக்கம்.
- தலைவலி.
- முதுகுவலி.
- குமட்டல்.
- வாந்தி.
நரம்பியல் அம்சங்கள் பெரும்பாலும் தீவிரமான வளர்சிதைமாற்ற இரத்த அமிலமிகை (உடல் திரவங்களில் கூடுதல் அமிலம்), குறைவான சிவப்பணுப்புரதம் மற்றும் குறைந்த சர்க்கரை அளவு போன்றவற்றுடன் தொடர்புடையது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இது பெண் அனோபிலஸ் கொசுக்கடி மூலமாக பரவுகிறது.பிளாஸ்மோடியத்தின் நான்கு இனங்கள் இந்த தொற்றுக்கு பொறுப்பாகிறது, அதில் பி.பால்சிபாரம் தான் மிகத்தீவிரமாக தோற்று ஆகும். பாதிக்கப்பட்ட ரத்த அணுக்களினால் மூளையின் நுண்குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக சிஎம் ஏற்படுகிறது, இதன் விளைவாக மூளையில் வீக்கம் ஏற்பட்டு மூளை சேதத்தில் முடிகிறது.மூளையை அந்நிய பொருட்களிடமிருந்து பாதுகாக்கும் இரத்தம்-மூளை-தடையரண் (பிபிபி) கிழிந்து விடுகிறது மற்றும் குருதிப்புரத இழையாக்கி/ஃபிப்ரினோஜென் கசிவு காணப்படுகிறது. இதன் விளைவாக உணர்விழந்த முழு மயக்க நிலை ஏற்படலாம். நரம்பியல் சிக்கல்களுக்கான மற்ற காரணங்கள் பின்வருமாறு:
- மிக அதிகமான காய்ச்சல்.
- மலேரியா எதிர்ப்பு மருந்துகள்.
- குறைவான சர்க்கரை அளவுகள்.
- குறைவான சோடியம் அளவுகள்.
- மிகவும் குறைவான சிவப்பணுப்புரத அளவுகள்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மலேரியா-பாதித்த பகுதிகளுக்கு சமீபத்தில் சென்ற ஏதேனும் பயண வரலாற்றை உள்ளடக்கிய மருத்துவ வரலாறு மற்றும் ஒரு உடல் பரிசோதனை ஆகியவற்றை மருத்துவர்கள் மேற்கொள்வர். ரத்த ஓட்டத்தடை உள்ள பகுதிகளை அறிவதற்காக தோற்றமாக்கல் சோதனைகள் செய்யப்படலாம்.
- கணிப்பொறி பருவரைவு/கம்ப்யூடட் டோமோகிராபி (சிடி ஸ்கேன்): இது பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியலாம் ஆனால் இதில் சில அம்சங்கள் தெரியவரும். அவை:
- பெருமூளை நீர்க்கட்டு.
- ரத்தக் குறைவினால் அழியும் திசு காரணமாக ஏற்படும் தலாமிக் ஹைபோஅட்டேனுயேஷன்.
- மூளையின் வெண்பொருள் ஹைபோஅட்டேனுயேஷன்.
- காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்ஆர்ஐ): நோய் முன்னேற்றத்துடன் தொடர்புடைய முக்கிய விளக்கங்களை அறிவதற்கு உதவுகிறது.
- முதுகுத் துளையிடுதல்: தெளிவான சுயநினைவில்லாமல் இருக்கும் குணத்தை கொண்ட மற்ற காய்ச்சல் அறிகுறிகளை ஒதுக்க இந்த சோதனை செய்யப்படுகிறது.
சிஎம் ஒரு அபாயகரமான சிக்க்கள் ஆகும் மற்றும் இதற்க்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படும். இதை முக்கிய சிகிச்சைகள் பின்வருமாறு:
- மலேரியா எதிர்ப்பு மருந்துகள் - நோயின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக ஒற்றை மருந்து சிகிச்சை அல்லது மருந்துக்கலவை சிகிச்சை.
- மின்னழுத்த ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் இயற்றிகள்.
- அறிகுறிகளின் படி பயன்படுத்தப்படும் வலிப்பை தவிர்க்கும் மருந்துகள்.
- ஸ்டீராய்டு வகையீடுகள்.
- மற்ற நரம்பியல் சிக்கல்களை சரிசெய்வது.
- சுவாச பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் ஆக்சிஜென்தெரபி உதவக்கூடும்.
சுய-பராமரிப்பு குறிப்புகள் பின்வருமாறு:
- ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகள் கண்டறியப்பட்டு விட்டால் இந்த தொற்றின் சுழற்சியை உடைப்பதற்கு உதவும்.
- நீண்டகால காய்ச்சலை குறைப்பதற்கு காய்ச்சல் மருந்துகள் உதவவில்லையெனில் அவற்றை எடுத்துக்கொள்வதை தவிருங்கள்.
- உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதோடு கொசு வளர்வதற்கு காரணமான அனைத்து வழிகளையும் அழித்துவிடுங்கள்.
முறையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு மூளையின் சேதத்தையும் மலேரியாவின் சிக்கல்களையும் குறைப்பதற்கு உதவும்.