கருப்பை வாய் அழற்சி என்றால் என்ன?
கருப்பை வாய் என்பது கர்ப்பப்பைக்கு கீழே யோனியை தொடர்பு கொள்ளும் பகுதியாகும். கருப்பை வாயில் வீக்கம் ஏற்படும்போது, அது கருப்பை வாய் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பல வகைப்பட்ட காரணங்கள் உள்ளன. அறிகுறிகள் பெண்களுக்கு பெண்கள் மாறுபட்டு காணப்படுகிறது.
கருப்பை வாய் அழற்சி தொத்திப் பரவக்கூடிய அல்லது தொத்திப் பரவாத வகையில் இருக்கலாம். இதன் சிகிச்சை காரணத்தைப் பொறுத்தே அமைகின்றது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கருப்பை வாய் அழற்சியின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சிறுநீர் வடிகுழாயில் பாதிப்பு ஏற்பட்டால், சிறுநீர் கழிக்கும் போது ஒரு பெண்ணிற்கு வலி அல்லது எரிச்சல் இருக்கலாம்.
- யோனியில் இரத்தப்போக்கு அல்லது யோனி அரிப்பு, குறிப்பாக பாலியல் உடலுறவின் போது அல்லது மாதவிடாய் சுழற்சிகளின் இடையே இருக்கலாம். (மேலும் வாசிக்க: பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள்).
- சில நேரங்களில், காய்ச்சல் உடன் சேர்ந்து வயிற்று வலி இருக்கும்.
- சில பெண்களில் கருப்பை வாய் அழற்சி எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- கருப்பை வாய் பொதுவாக பால்வினை நோய் தொற்றுகள் காரணமாக வீக்கமடைகின்றது. இத்தகைய பால்வினை நோய்கள் பின்வருமாறு-
- மரப்பால் ஒவ்வாமை மற்றும் பொழிச்சல் போன்றவை தொற்று அல்லாத காரணங்கள் ஆகும். இவை இரண்டுமே வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
- யோனியழற்சி/நுண்ணுயிரியால் ஏற்படும் அல்குல் நோய் என்பது யோனியில் ஏற்படும் பாக்டீரியா தொற்றாகும். இது கருப்பை வாய் அழற்சி ஏற்படுத்தக்கூடும்.
- புற்றுநோய்க்கான ஊடுகதிர்ச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு சில சமயங்களில் கருப்பை வாயில் வீக்கம் ஏற்படலாம்.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
இதனை கண்டறிவதற்கான முறைகள் பின்வருமாறு:
- மருத்துவர் கருப்பை வாய் அழற்சி இருப்பதாக சந்தேகித்தால், ஒரு இடுப்பு பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் பாலியல் சார்ந்த வரலாறும் நோய் கண்டறிதலுக்கு முக்கியமானதாக அமைகின்றது.
- கருப்பை வாயில் இருக்கும் திரவத்தை பண்படுத்தி, அதில் நுண்ணோக்கியின் உதவியோடு நோய்த்தொற்றுகள் இருக்கின்றதா என்று பரிசோதிக்கப்படுகிறது.
- இரத்த பரிசோதனைகள் நோய்த்தொற்றை கண்டறிய உதவுகிறது. நோய்த்தொற்று இருப்பின், இரத்த பரிசோதனைகள் பொதுவாக வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை (WBC) அதிகமாக இருப்பதை வெளிப்படுத்துடுகின்றன.
கருப்பை வாய் அழற்சிக்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- நோய்த்தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தால், பிறபொருளெதிரிகள் பரிந்துரைக்கப்டுகின்றன.
- பாலியல் தொடர்பை தவிர்த்தல் மற்றும் தங்கள் வாழ்க்கைத்துணைக்கு பால்வினை நோய் தொற்றுகள் இருக்கின்றதா என்று சோதித்து பார்த்தால் அவசியமாகும்.
- கருப்பை வாய் அழற்சி ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டால், அதற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளை அகற்றுவதை தவிர, வேறு பெரிய சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இல்லை.
- கருப்பை வாயில் ஏற்படும் வீக்கத்தை தடுக்க, யோனி பகுதியில் வலுவான இரசாயனங்களை பயன்படுத்துவத்தை தவிர்க்க வேண்டும், தண்ணீர் கொண்டு யோனியை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் பாதுகாப்பற்ற பாலியலுறவில் அல்லது பலருடனான பாலியலுறவில் ஈடுபடக் கூடாது.