சுருக்கம்
சின்னம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இது உடலில் காய்ச்சல் மற்றும் புள்ளிகளுடன் கூடிய தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளை கொண்டது. தட்டம்மை தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பின் சின்னம்மையின் பாதிப்பானது மிகவும் அரிதாகிவிட்டது. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்' எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது. உடலில் வைரஸ் நுழைந்தவுடன், அதன் அறிகுறிகள் 10லிருந்து 21 நாட்களுக்குள் தென்பட ஆரப்பித்து பின் 5 முதல் 10 நாட்கள் வரை சின்னம்மை தொற்றானது நீடிக்கும். தோல் அரிப்பு தோன்றுவதற்கு முன்பாக, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். தோல் அரிப்பு தோற்றமானது மூன்று கட்டங்களாக மாறுகிறது: முதலாவதாக, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு புடைப்புகளாக தோற்றமளிக்கும், பின்னர் அவை சிறிய திரவம் நிரப்பப்பட்ட கொப்புளங்களாக மாறும், இறுதியாக அவை பட்டையாகவும் மற்றும் கடுந்தழும்பாக மாறுகிறது. பொதுவாக, சின்னம்மையானது ஒரு லேசான நோயாகும், ஆனால் சின்னம்மை காலங்களில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்பவர்களுக்கு தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்தும், அதாவது நிமோனியா, மூளையில் வீக்கங்கள், ரேயிஸ் அறிகுறிகள் மற்றும் நீர்ப்போக்குகள் ஏற்படும்.சில சமயங்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், அது மரணத்திற்கும் வழிவகுக்கும்.
ஆரோக்கியமான குழந்தைகளுக்கு சின்னம்மைகான மருத்துவ சிகிச்சைகள் தேவையில்லை.ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் மூலம் (அண்டிஹிஸ்டமின்கள்) அரிப்பிலிருந்து விடுப்படலாம். அதிக சிக்களான ஆபத்தில் உள்ளவர்களுக்கு, நோயின் தீவிரத்தை குறைக்க மருத்துவர்கள் வைரஸ் எதிர்ப்பிகள் மற்றும் சின்னம்மை தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கலாம். மக்கள் தடுப்பூசி போடுவதினால் சின்னம்மை தாக்கத்திலிருந்து விடுப்படலாம் மற்றும் அதன் பாதிப்பானது லேசானதாக இருக்கக்கூடும். சின்னம்மை தடுப்பூசி என்பது பாதுகாப்பானது மற்றும் நோய் தடுக்க பயனுள்ள சிறந்த வழியாகும். மேலும், இது கடுமையான சின்னம்மையின் நிலைகளை தடுக்கிறது.