பித்தப்பையழற்சி என்றால் என்ன?
பித்தப்பையழற்சி என்பது பித்தப்பையில் ஏற்படும் ஒரு வீக்கமாகும். இது வழக்கமாக பித்தப்பையின் பின்வரும் குழாய்கள் எவையேனிலும் தோன்றும் பித்தப்பைக் கற்கள் காரணமாக ஏற்படுகிறது - சிஸ்டிக் குழாய், பொதுவான பித்த நீர் குழாய் அல்லது பித்தப்பை. இது பெரும்பாலும் ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது 40 வயதுக்கு முன்னால் பித்தப்பையில் கற்களென்பது பெண்களுக்கு மிக அதிகமாக ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியில் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் மக்களிடம் பித்தப்பைக் கற்கள் கண்டறியப்படுகின்றன மற்றும் பருவமடைந்தவர்களில் 10-15 சதவீதம் பேருக்கு இது ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சில நபர்களுக்கு வயிற்று பகுதியில் ஏற்படும் லேசான மென்மைத்தன்மையை தவிர வேறெந்த அறிகுறிகளும் தென்படாமல் போகலாம்.
இதன் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- வயிற்றின் வலது மேற்புறத்தில் திடீர் அல்லது தீவிரமான வலி.
- குமட்டல்.
- வாந்தி எடுத்தல்.
- லேசான காய்ச்சல்.
- கண்கள் மஞ்சள்நிறமாக மாறுதல்.
- தேநீரின் நிறத்திலிருக்கும் சிறுநீர்.
- லேசான நிறமுடைய மலம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதன் காரணத்தை கால்குலஸ் மற்றும் அகால்குலஸ் பித்தப்பையழற்சி என இரு வகைகளாக பிரிக்கலாம்.
- கால்குலேஸ் பித்தப்பையழற்சி:
- இது மிகப் பொதுவான மற்றும் மிதமான வகையைச் சார்ந்த பித்தப்பையழற்சி ஆகும்.
- 95% நோயாளிகளிடம் இது காணப்படுகிறது.
- முக்கியமான சிஸ்டிக் குழாயில் (பித்தப்பைக்கானில்) அடைப்பு ஏற்படுவது இதன் காரணமாகும்.
- பித்தப்பைக் கற்களால் அல்லது பிலியரி கழிவுத்திரட்டு/பித்தநீர் சார்ந்த கசடுகளால் தடுக்கப்படுகிறது.
- அகால்குலஸ் பித்தப்பையழற்சி:
- இது அரிதான மற்றும் கடுமையான பித்தப்பையழற்சியின் மிக தீவிரமான வடிவம் ஆகும்.
- பித்தப்பையை சேதப்படுத்தும் சில நாள்பட்ட நோய்கள், நோய்த்தொற்று அல்லது காயத்தால் ஏற்படுவது.
- அறுவை சிகிச்சை, காயங்கள், தீப்புண், குருதி நச்சூட்டம், குருதியில் நுண்ணுயிர் நச்சேற்றம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற எதிர்பாராவிதமாக ஏற்படும் சேதத்துடனும் தொடர்புடையது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடல் பரிசோதனையின் போது நோயாளிகள் சாதாரணமாக தெரியலாம். சில சமயங்களில் பித்தப்பையில் மென்மைத்தன்மை உணரப்படலாம், இது ஒரு கடுமையான நிலையை குறிக்கிறது. சோதனையின் போது மர்பியின் அறிகுறி/மர்ஃபிஸ் சைனும் நேர்மறையாக தோன்றலாம்.
- இரத்த பரிசோதனைகள்: ஏதேனும் தொற்றுகளோ அல்லது சிக்கல்களோ உள்ளதா என்று சோதிப்பதற்கு செய்யப்படுகிறது.
- கதிரியக்க சோதனைகள்:
- வயிற்றின் அல்ட்ராசோனோகிராபி/புறவொலி வரைவியல்.
- வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (சிடி) ஸ்கேன்.
- மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் க்லோஞ்சியோபான்க்ரியாட்டோகிராபி (எம்.ஆர்.சி.பி).
- எண்டோஸ்கோபிக் ரெட்ரோகிரேடு க்லோஞ்சியோபான்க்ரியாட்டோகிராபி (ஈ.ஆர்.சி.பி).
இதற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- ஆரம்ப நிலை சிகிச்சை: பித்தப்பையை சுத்தம் செய்வதற்காக உண்ணாமலிருப்பது மற்றும் நீரேற்ற நிலையை பராமரிப்பதற்காக நரம்பு வழியாக திரவங்களை செலுத்துவது.
- மருத்துவ சிகிச்சை: இது வழக்கமாக நோய்க் குறி சார்ந்த பித்தப்பைக் கற்களுக்காக தரப்படுவது. இந்த முகவர்கள் பித்தநீர்க் குழாயிலுள்ள அடைப்புகளை கரைத்து மேலும் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
- அறுவை சிகிச்சை: இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக கற்களுடன் பித்தப்பையை சேர்த்து அகற்றுவதற்கு பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது (பிரித்தேற்ற அதிரலைச் சிகிச்சை).
அறுவை சிகிச்சையில்லாத முறைகள் பின்வருமாறு:
- கற்களை உடைப்பதற்காக அதிக ஆற்றலுள்ள ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- தோல் வழி சிகிச்சை.
- உள்நோக்கியியல் மூலம் பித்தப்பையில் உள்ள அடைத்திருக்கும் இரத்தக்குழாய் முதலியவற்றைத் சிறு, விரிதன்மையுடைய குழல் உதவியுடன் திறந்திருக்க வைப்பது.
வாழ்க்கை முறை மாற்றங்கள் பின்வருமாறு:
- அறிகுறிகளை குறைப்பதற்காக கீழ்காணும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்:
- கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகள்.
- சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.
- அவரைகள்/பீன்ஸ்.
- வெங்காயங்கள் அல்லது குடை மிளகாய்கள்.
- கஃபீன்/காப்பி.
- நார்ச்சத்து அதிகமுள்ள கொட்டைகள் (பருப்பு வகைகள்), பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றையும் ஆரோக்கியமான கொழுப்புகளான மீன் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதால் பித்தப்பையழற்சி ஏற்படுவதின் அபாயம் குறையும்.