தலைப் பொடுகு (டான்ட்ரஃப்) என்றால் என்ன?
தலைப் பொடுகு என்பது ஒரு தோலின் நிலை இது உச்சந்தலையில் இருக்கும் வெள்ளை சாம்பல் நிற உலர்த்தோல் செதில்களாக வளர காரணமாயிருக்கிறது. இது உச்சந்தலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சமமாக ஏற்படும் ஒரு பொதுவான நிலையே. இது தனிநபர்களின் சகஜமான வாழ்க்கையில் பாதிப்பேற்படுத்தும் சந்தோஷமற்ற நிலையாக இருக்கிறது. தலைப் பொடுகின் ஆக்கிரமிப்பு பெண்களை விட ஆண்களிடமே அதிகளவில் இருக்கிறது. உலகளவில், சுமார் 50% மக்களுக்கு தலைப் பொடுகு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுப்படையாக நிலவுகின்ற இந்த நோய்த்தாக்கமானது இந்தியாவில் 195,785,036 பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- உச்சந்தலையில் இறந்த தோலானது வெள்ளையான, பிசுக்குள்ள செதில்களாக இருத்தல்.
- உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு அல்லது செதில்.
- லேசான அழற்சி.
- புருவங்கள், கண் இமைகள் மற்றும் காதுகளின் பின்புறம் செதில்களாக இருத்தல்.
தலைப் பொடுகு உச்சந்தலையிலேயே ஏற்படுகிறது, எனவே, அதிகளவு பொடுகு இருக்கும் பட்சத்தில், அதன் செதில்கள் அடிக்கடி தோல்களில் விழுகின்றது. சருமமெழுகு சுரப்பிகள் (செபஸஸ் சுரப்பி) சுரப்பதினால் அதிக மெழுகு உற்பத்தியோ அல்லது குவிதலோ உச்சந்தலையை எண்ணையாக மாற்றிவிடுகிறது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
தலைப் பொடுகு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- அழற்சியுற்ற அல்லது எரிச்சலுடைய பிசுக்குள்ள தோல்.
- குறைவான ஷாம்பூ பயன்பாடு.
- மலசீஸியா பூஞ்சை தொற்று உச்சந்தலையில் உள்ள ஆயில்களை உறிஞ்சி மேலும் அதிகமான தலைப் பொடுகு ஏற்பட காரணமாக இருக்கிறது.
- வறண்ட சருமம்.
- சிகை பொருட்களினால் ஏற்படும் ஒவ்வாமை.
ஆபத்து விளைவிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- வயது: வயதுவந்த இளம் பருவத்திலோ அல்லது பருவமடைந்த வயதிலிருந்தோ நடுத்தர வயது வரை இருக்கலாம்.
- ஆண் பாலினம்: ஆண் ஹார்மோன் செல்வாக்கினால் ஏற்படலாம்.
- அதிகப்படியான எண்ணெய்ச் சுரப்பி மெழுகு: மலசீஸியா பூஞ்சை தொற்றுநோய் உச்சந்தலையிலிருந்து அதிக எண்ணெயை உறிஞ்சி மேலும் அதிகமான தலைப் பொடுகு ஏற்பட காரணமாக இருக்கிறது.
- சில நோய்கள்: பார்கின்சன்'ஸ் நோய் (ஒரு நரம்பு கோளாறு) மற்றும் ஹெச்.ஐ.வி தொற்று.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகைச்சையளிக்கும் முறைகள் யாவை?
தலைப் பொடுகு என்பது செதில்களாக தோன்றுகிறது, மேலும் பொடுகு தோலழற்சி, மீன்செதில் நோய், அட்டோபிக் தோல் அழற்சி, தலைப்படை போன்ற நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்த தோல் நிலையிலிருந்து இயல்பான தலைப் பொடுகு நிலையை வேறுபடுத்துவதும் மற்றும் இதை கண்டறிவதும் கடினமானது. நோய் கண்டறிதல் என்பது முக்கியமாக நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனையின் மூலம் அறிந்துக் கொள்ளப்படுகிறது. சில நேரங்களில், தோல் திசுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படலாம்.
மிகவும் பயனுள்ள சிகிச்சை என்பது பொடுகு எதிர்ப்பு (ஆன்டி டான்ட்ரஃப்) ஷாம்பு மற்றும் உச்சந்தலை சிகிச்சைகளை உபயோப்படுத்துவது. துரதிருஷ்டவசமாக, இந்த சிகிச்சை முறைகள் அனைத்து நோயாளிகளிடத்திலும் வேலை செய்வதில்லை. தலைப் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு மற்றும் உச்சந்தலையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மூலமும் குணமடையவில்லை எனில், மருத்துவ நிலையின் அடிப்படை காரணத்தை கொண்டு சரியான பாக்டீரியல் எதிர்ப்பு மற்றும் புஞ்சை எதிர்ப்பு சிகிச்சைகள் கொடுக்கப்படலாம். மருந்து விநியோக அமைப்புகளான லிபோசோம்கள், நியோசோம்ஸ் மற்றும் திடக் கொழுப்பு சத்துகள் உள்ள நானோ துகள்கள் போன்றவைப் படிப்படியாக தலைப் பொடுகு சிகிச்சையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகின்றன.
சுய பாதுகாப்பு:
- உச்சந்தலை பராமரிப்பு செய்து கொள்ளப்பட வேண்டும்.
- ஹெர்பல் எண்ணெய்களை தேய்த்து தலைக்கு குளித்து வருவது போன்ற நல்ல சிகை பராமரிப்பை பழக்கப்படுத்திக் கொள்வதால் மேலும் ஏற்படக்கூடிய பொடுகு செயல்பாட்டை தவிர்க்கலாம்.
- உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக ஷாம்பூ பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், ஏனேனில் அதிகப்படியான எண்ணெயை இது உறிஞ்சிவிடுவதால் பொடுகு ஏற்படலாம்.
- உங்கள் முடியை கடினமாக சீவுதல் கூடாது.
- தலைப் பொடுகு பிரச்சனை தீரும்வரை சிகை அலங்கார சிகிச்சைகளைத் தவிர்க்கவும்.
தலைப் பொடுகை சிறந்த வகையில் மேலாண்மைபடுத்த, சரியான கூந்தல் பராமரிப்பு முறையைப் பின்பற்றவும், மேலும் உங்கள் தலைப் பொடுகு பிரச்சனை குறையவில்லையெனில், இந்த சிக்கலை எதிர் கொள்ள ஒரு ட்ரைக்கோலஜிஸ்டிடம் கலந்தாலோசிக்கவும்.