நீரிழிவு கால் புண்கள் என்றால் என்ன?
நீரிழிவு கால் புண்கள் என்பது பொதுவாக இருந்தாலும் பெரும் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாகும். வழக்கமாக, புண்கள் குணமடைதல் என்பது செல்லுல்புற அணியை படிப்படியாக சரிசெய்யக்கூடிய செயல்முறையே. இருப்பினும், சில நோய்கள், புண்கள் குணமடைவதற்கான இயற்கை செயல்முறையில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இக்காரணங்கள் புண்கள் குணமடையும் காலம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது. ஆரோக்கியமான கிரானுலேஷன் (மீளுருவாக்கம்) திசுக்களின் உருவாக்கத்தில் இடையூறு ஏற்படுத்தி குணப்படுத்தும் செயல்முறையை தாமதப்படுத்துவதால் நீரிழிவு நோயும் இடையூறு ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது.
இதன் முக்கியமான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் யாவை?
நீரிழிவு கால் புண் நோய் எப்போதுமே வலி ஏற்படுத்தக்கூடியதல்ல. இதில் சம்மந்தப்பட்டிருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒருவரால் வலியை உணரமுடியும். இது மோசமான நிலையென்பதால் இதற்கான சிகிச்சையை உடனே ஆரம்பித்தல் அவசியம். நீரிழிவு புண் தடிமனான தோலில் எல்லையுடன் கூடிய சிகப்பு பள்ளம் போன்று காட்சியளிக்கும். மோசமான கேஸ்களில், இந்த சிவப்பு பள்ளம் அடிப்படை தசைநாண்கள் மற்றும் எலும்புகள் வரை மிகவும் ஆழமாக செல்லக்கூடியது. அழற்சியின் காரணமாக வீக்கம், வெப்பத்தன்மை மற்றும் வலி போன்றவைகள் ஏற்படலாம். இறுதி நிலைகளில், திரவ வெளியேற்றம், துர்நாற்றம், மற்றும் நிறம் மாறிய கிரானுலேஷன் திசு ஆகியவைகள் காணப்படலாம்.
இதன் முக்கியமான காரணங்கள் என்ன?
இன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகளின் மத்தியிலேயே நீரிழிவு கால் புண்கள் பெரும்பான்மையாக காணப்படும். அதிக எடைகொண்டிருத்தல், புகையிலை பயன்படுத்துதல், மது உட்கொள்தல் போன்ற ஆபத்து விளைவிக்கும் செயல்கள் நீரிழி நோயை மேலும் மோசமடைய செய்யும். சில சாமியங்களில் புண் ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்ட இடம் மறத்து போகும் காரணத்தால் அதை கவனிக்காமல் இருக்கலாம். இந்த இடங்களில் ஏற்படும் ரத்த ஓட்டமின்மை இந்நிலையை மேலும் மோசமடைய செய்கிறது.
ஆரம்பகட்டத்தில் சிறிய புண் போன்று தொடங்கக்கூடிய இந்நோய், பொதுவாக உணர்ச்சியின்மை காரணமாக கவனிக்காமல் விடுவதாலேயே ஆழமான நீரிழிவு நோயாக உருவெடுக்கிறது. அதிக காலத்திற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விடுவதன் விளைவால் மேலும் இந்த புண்களில் தொற்றுகள் உருவாகி சீழ் (கட்டி) உருவாகும். இந்த கட்டி ஒஸ்டியோமெலலிஸ் எனும் எலும்பு தொற்றுக்கு வழிவகுக்கூடியது. மேலும் ஏற்படும் சிகிச்சை தாமதம் பாதிக்கப்பட்ட பகுதி அழுகுவதற்கு காரணமாகிவிடும், அதாவது அந்த கால் பாகத்தை துண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
பொதுவாக, மருத்துவர்கள் நீரிழிவு கால் புண் கண்டறிதளுக்கு பரிசோதனை மேற்கொள்வர். உங்கள் மருத்துவர் உங்களின் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் உங்கள் பாதத்தின் அழுத்த புள்ளிகளை பரிசோதனை செய்ய நீங்கள் நடக்கும் பாங்கை கவனிக்கக்கூடும், கால்களின் அனிச்சை திறன் மற்றும் உணர்ச்சி திறன்களை பரிசோதிக்க நேரிடும்.
உங்கள் மருத்துவர் பின்வரும் சோதனைகளை அறிவுறுத்தலாம்:
- இரத்த சோதனைகள்.
- காயம் பரிசோதனை.
- எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன்.
- எக்ஸ் – கதிர்கள்.
சர்க்கரை அளவின் கடுமையான கட்டுப்படுத்துதலே நீரிழிவு கால் புண் நோய் நிவாரணத்திற்கான முதல் படியாகும். இதன் சிகிச்சைக்கான முக்கியமான நோக்கம் விரைவான நிவாரணத்தை வழங்குதல், ஏனெனில் இது காயத்தில் ஏற்படக்கூடும் தொற்றின் வாய்ப்புகளை குறைக்கும். பல்வேறு சிகிச்சை முறைகள், இந்த புண்கள் மீது ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை விடுவித்து இறந்த செல்களையும் நீக்க பயன்படுகிறது. இந்த புண்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நன்றாக துணியோ அல்லது பருத்தியினைக் கொண்டோ மூடியிருக்க வேண்டும்.
நீரழிவு கால் புண் நோயின் மற்ற சிகிச்சை முறைகள்:
- ஹைபர்பேரிக் ஆக்சிஜன் சிகிச்சை.
- எதிர்மறை அழுத்தம் காயம் சிகிச்சை.
- குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அழுகிய திசுக்களின் மறுசீரமைப்பு.
- ஓசோன் சிகிச்சை.
- அழுத்தத்தை நிறுத்துவது.
- நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்தல்.