சுருக்கம்
தலைச்சுற்றல் என்பது நீங்கள் நின்று கொண்டு இருக்கும் பொழுது சமநிலையை இழக்கும் ஒரு உணர்வு அல்லது நீங்கள் நின்று கொண்டு இருக்கும் பொழுது நகர்வது போன்று உணர்வதாகும். இது பெரும்பாலும் குறைந்த இரத்த சர்க்கரை, நீர் வற்றிப்போதல், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பயண சுகவீனத்தின் காரணமாக ஏற்படுகிறது. சிலநேரங்களில், தலைச்சுற்றலுக்கான காரணம் தெரியாமல் இருக்கிறது. தலைச்சுற்றல் என்பது, சமநிலை உணர்தலைப் பாதிக்கக் கூடிய ஒற்றைத்தலைவலி, பயண சுகவீனம் அல்லது சில காது நோய்கள் போன்ற மறைந்திருக்கும் ஒரு பிரச்சினையின் அறிகுறியாக இருக்கக் கூடும். ஒரு விரிவான மருத்துவ சரித்திரத்தோடு, இந்தப் பிரச்சினைக்கு வழிவகுக்கக் கூடிய சாத்தியமுள்ள காரணங்கள் தொடர்பான சில சோதனைகள் மூலம், அதை உங்கள் மருத்துவரால் கண்டறிய இயலும். தலைச்சுற்றலுக்கான சிகிச்சையானது, மறைந்திருக்கும் பிரச்சினைக்கு சிகிச்சையளிப்பது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளோடு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாகும். சிகிச்சையளிக்காமல் விட்டால், திரும்பத் திரும்ப வரும் தலைச்சுற்றல், விழுவது மற்றும் மயங்குவதால் காயங்களை ஏற்படுத்தக் கூடும். [பெரும்பாலான நேரங்களில், தலைச்சுற்றலுக்கான மறைந்திருக்கும் காரணம் குணப்படுத்தக் கூடியதாக இருப்பதால், வழக்கமாக தலைச்சுற்றல் சிகிச்சையின் பலன்கள் நன்றாக இருக்கின்றன.