கண் வலி - Eye Pain in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 30, 2018

March 06, 2020

கண் வலி
கண் வலி

கண் வலி என்றால் என்ன?

கண் வலி என்பது கண்ணில் ஏற்படும் உபாதையாகும் மேலும் இது ஆப்தமாலஜி எனவும் அழைக்கப்படுகிறது.  இந்த உபாதை அல்லது வலியானது விழியில் (அதாவது கண்ணின் மேற்பரப்பில்) அல்லது சுற்றுப்பாதையில் (கண்ணின் உள்ளே) ஏற்படலாம். காயம் அல்லது ஒவ்வாமையின் எதிர்வினை அல்லது நாள்பட்ட கண் தொற்று அல்லது தீவிரமான நோய்கள் காரணமாக வலி தீவிரமாக இருக்கும்.கண்களில் ஏற்படும் கோளாறினால் பார்வை இழப்பிற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், அனைத்து வித கண் வலிகளையும் உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கண் வலி என்பதே ஒரு அறிகுறியாகும், பெரும்பாலும் அது மற்ற பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளுடன் இணைந்தே காணப்படுகின்றன:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பெரும்பாலான நேரங்களில், தொற்று அல்லது காயத்தின் காரணமாக கண்ணில் வலி உண்டாகிறது. கண் வலிக்கு மற்ற பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால், உடனடியாக ஒரு கண் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

 • நோயை பற்றி கண்டறிய மருத்துவர் உங்கள் கண்களை பரிசோதித்து கண் வலிக்கான காரணங்களை அறிந்து கொள்வார்.
 • அவர் மெல்லிய விளக்கை வைத்து உங்கள் கண்களை பரிசோதிப்பார், இது கண்ணின் உள்ளே இருக்கும் காட்சியை உயர் உருப்பெருக்கியின் மூலம் காட்டுகிறது.

நோய்தொற்று அல்லது வலியின் தீவிரத்தை பொறுத்து வலியை குறைக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். அவற்றில் சில:

 • தொடர் பலவீனத்தை ஏற்படுத்தும் வலியிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய மருந்துகளை எடுத்துக்கொள்வது.
 • கண் இமை சார்ந்த தசைகளில், இறுக்கம் ஏற்படுவதை தவிர்க்க கண் சொட்டு மருந்துகள் பயன்படுத்துவது. இது வலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
 • நோய் தொற்றிற்கு சிகிச்சை அளிக்க ஆண்டிமைக்ரோபயல் கண் சொட்டு மருந்துகள் பயன்படுத்துவது.
 • ஸ்டீராய்டு கண் சொட்டு மருந்து வீக்கத்தை குறைக்க பயன்படுகிறது.மேற்கோள்கள்

 1. MSD mannual consumer version [internet].Eye Pain. Merck Sharp & Dohme Corp. Merck & Co., Inc., Kenilworth, NJ, USA
 2. American academy of ophthalmology. Eye Pain. California, United States. [internet].
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Eye pain
 4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Pink Eye: Usually Mild and Easy to Treat
 5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Eye injuries: foreign body in the eye

கண் வலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for கண் வலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.