சுருக்கம்
கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிற ஒரு நோய். இவை இரண்டு வகைப்படும், அளவுக்கு அதிகமாக மதுஅருந்துவதன் மூலம் ஏற்படும் அல்ககாலிக் பேட்டீ லிவர் நோய் மற்றும் கல்லிரலில் கொழுப்பு படிவம் மேலும் படிவதனால் ஏற்படும் “நான் அல்ககாலிக் பேட்டீ லிவர்” (மது அருந்தாவகை கொழுப்பு கல்லீரல்) நோய் (NAFLD). NAFLD இன் சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், இது இன்சுலின் எதிர்ப்பு தன்மை மற்றும் வளர்சிதை மாற்ற குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. பொதுவாக உலகின் மேலை நாடுகளில் மக்கள் NAFLD- யால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்க்கு கல்லீரல் அளவில் பெரிதாவதை தவிர மற்ற எந்த அறிகுறியும் இல்லாமலே நீண்ட காலமாக இருக்கலாம் அல்லது திடீரென உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படக்கூடிய மற்றும் முழுமையாக கல்லீரல் செயலிழப்பு ஏற்படம் அளவு தீவிர அறிகுறிகளுடனும் வெளிப்படலாம். தற்போது, இந்நோய்க்கான சிகிச்சை எடை குறைப்பு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் கல்லீரல் சுகாதார பராமரிப்பை நோக்கமாக கொண்டுள்ளது. இந்நோய்க்குபல நம்பிக்கைக்குரிய மருந்துகள் இருப்பினும் எந்த மருந்துகளும் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. மிகவும் தீவிரமான நிலைமைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.