ஃபுட் பாய்சனிங் என்றால் என்ன?
ஃபுட் பாய்சனிங் என்பது மாசுபட்ட உணவை உண்பதாலோ அல்லது மாசுபட்ட குடிநீரை குடிப்பதாலோ ஏற்படுக்கூடிய நிலை ஆகும். உணவு நுண்ணுயிரிகள், சிறு பூச்சிகள், அல்லது இத்தகைய நோய்க் கிருமிகளாலே மாசுபாடுகின்றது.
இது உடலின் பல்வேறு அமைப்புக்களை பாதிக்கின்றது, ஆனால் இதனால் இரைப்பை மண்டலமே பெரும்பான்மையாக பாதிப்படைகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
ஃபுட் பாய்சனிங்கால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு-
- குமட்டல்.
- வாந்தி.
- காய்ச்சல்.
- வயிற்றுப்போக்கு.
- வயிற்றுவலி.
- பசியின்மை.
- கூடுதலாக, ஒருவர் குளிர், மயக்க உணர்வு, மற்றும் அதீத வியர்வை போன்றவைகளையும் உணரலாம்.
- இந்நிலை ஏற்படுவதற்கான காரணிகளை பொறுத்து, அறிகுறிகள் மாசுபட்ட உணவு அல்லது திரவத்தை உட்கொண்ட உடனேயோ அல்லது சில நாட்கள் கழித்தோ ஏற்படலாம்.
இதன் காரணங்கள் யாவை?
- பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி போன்றவைகள் உணவு அல்லது திரவத்தை மாசுபடச் செய்வதோடு, இத்தகைய உணவு அல்லது திரவத்தை உட்கொள்வதன் காரணத்தாலேயே ஃபுட் பாய்சனிங் ஏற்படுகிறது.
- ஆரோக்கியமில்லாத சூழ்நிலையில் வளரும் உணவு பொருட்கள், அவற்றை தவறாக சமைத்தல், பதப்படுத்துதல் அல்லது பேக்கேஜிங் செய்தல் போன்ற காரணங்களாலேயே உணவு மாசுபடுகின்றது.
- ஃபுட் பாய்சனிங் மற்றும் இரைப்பை அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொதுவான பாக்டீரியாக்களுள் சால்மோனெல்லா டைபி, விபிரியோ காலரா, க்ளாஸ்டிரியா டிஃபிசில், ஸ்டீஃபிலோகோகஸ் ஆரியஸ், காம்பைலோபேக்டர் ஆகியவைகள் அடங்கும்.
- ரோட்டா வைரஸ் மற்றும் ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரஸ்கள் கூட உணவை மாசுபடுத்தக்கூடும்.
- மாசுபட்ட தண்ணீர் ஃபுட் பாய்சனிங்கிற்கான மிகப்பெரிய காரணங்களுள் ஒன்றாகும். இது கழிவு நீர் சுத்தமான தண்ணீரில் கலப்பதாலும், தண்ணீரை முறையின்றி சுத்திகரிப்பதாலும், தவறான போக்குவரத்தாலும் விளையக்கூடியது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நிலை கண்டறிதளுக்கான முறைகள் பின்வருமாறு:
- அறிகுறிகள் மற்றும் சமீபத்தில் உண்ட பொருட்களின் விவரமான வரலாறு ஆகியவற்றை கொண்டு ஃபுட் பாய்சனிங் கண்டறியப்படுகிறது.
- ஃபுட் பாய்சனிங் ஏற்படுவதற்கான கிருமிகளை கண்டறிய மல பரிசோதனை போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இரத்த பரிசோதனை செய்வதன் மூலம் நோய்த்தொற்று அடையாளம் காண உதவும் அதாவது இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் மிகுதியாக இருந்தால் (WBCs) நோய்த்தொற்று இருக்கிறதென்று பொருள். ஹெப்பாடைட்டிஸ் வைரஸ்களை கண்டறிய குறிப்பிட்ட இரத்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.
ஃபுட் பாய்சனிங் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- ஃபுட் பாய்சனிங்கான சிகிச்சை முறை, அறிகுறிகளை குணப்படுத்துதல் மற்றும் காரணிகளை நீக்குதல் போன்றவைகளை உள்ளடக்கியிருக்கிறது.
- உடலிலிருந்து குறிபிட்ட கிருமிகளை அகற்ற ஆண்டிபையாட்டிக்ஸ் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். உயிரினத்தை பொறுத்து குறிப்பிட்ட ஆண்டிபையாட்டிக்ஸ் பரிந்துரைக்கப்படும். அறிவுறுத்தலின் படி ஆண்டிபையாட்டிக்ஸ்களின் முழு கோர்ஸையும் உட்கொள்தல் அவசியம், உடலிலிருக்கும் நுண்ணுயிரிகள் முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்துக்கொள்ளவே மேற்கூறியவாறு செய்தல் வேண்டும்.
- நீர்ச்சத்து மாற்ற சிகிச்சை மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் மூலம் நீர்ப்போக்கினை சரிசெய்யலாம். ஓரல் ரீஹைட்ரேஷன் என்பது அதீத முக்கியத்துவத்தை கொண்டது, அவை அதிக தண்ணீர், எலுமிச்சை சாறு, பழரசங்கள், இளநீர் அல்லது மோர் ஆகியவற்றை பருகுவதன் மூலம் மேம்படுகிறது.