விரல் எலும்புமுறிவு என்றால் என்ன?
விரல் எலும்புமுறிவு என்பது விரல்களின் எலும்பில்(பாலான்ஜெஸ்) ஏற்படும் காயம் ஆகும்.விளையாட்டில் ஏற்படும் காயங்களில் இது மிகவும் பொதுவான ஒன்று மற்றும் ஒருவரின் தினசரி செயல்பாடு மற்றும் வழக்கத்திற்கு இடையூறாக இது இருக்கும்.சரியான சமயத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் குறிப்பிடத்தக்க விளைவுகளை இந்த எலும்பு முறிவு ஏற்படுத்தும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
விரல் எலும்புமுறிவின் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- காயத்தை சுற்றி ஏற்படும் சிவத்தல், வீக்கம் மற்றும் அழற்சி.
- வலி.
- நெஞ்சு படபடப்பினால் ஏற்படும் நோய்வு.
- உருக்குலைவு.
- விரலை நகர்த்த இயலாமை.
- எலும்பு முறிவு தளத்தில் சிராய்ப்பு.
இதன் முக்கியமான காரணங்கள் என்ன?
எலும்பு முறிவின் முக்கியமான காரணங்கள் பின்வருமாறு:
- விளையாட்டின் போது ஏற்படும் காயம் தான் எலும்பு முறிவுக்கு ஒரு பொதுவான காரணம் ஆகும்.
- கதவை வேகமாக மூடுதல் மற்றும் கை விரல்களை சுவற்றில் இடித்துக் கொள்ளுதல் போன்ற தினசரி வேலைகளால் கூட விரல் எலும்புமுறிவு ஏற்படலாம்.
- கனரக இயந்திரங்கள், ஆற்றல் கொண்ட ரம்பம் அல்லது துளையிடும் இயந்திரம் போன்ற இயந்திரங்களுடன் வேலை செய்யும் பொழுது விரல் எலும்புமுறிவு ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
விரல் எலும்புமுறிவைக் கண்டறிய கீழ்காணும் முறைகளை பயன்படுத்தலாம்:
- காயத்தின் வகை மற்றும் காரணம், காயம் உண்டான நேரம், அறிகுறிகள் மற்றும் இதற்க்கு முன் ஏற்பட்ட காயத்தின் வரலாறு என்று ஒரு கவனமான மருத்துவ வரலாற்றை உங்கள் மருத்துவர் மேற்கொள்வார்.
- முறிவின் தளத்தை மதிப்பீடு செய்தல், உடைந்த எலும்பின் எண்ணிக்கை மற்றும் விரல்களின் அசைவை மதிப்பீடு செய்ய உடல் பரிசோதனை செய்யபடும்.
- மூட்டுகளின் நிலைப்புத்தன்மை மற்றும் இடப்பெயர்வு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
- உள்ளங்கை மற்றும் விரல்களின் முன்-பின், பக்கவாட்டு மற்றும் சாய்வுக்கோணம் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய எக்ஸ்-ரே எடுக்கப்படும்.
இதன் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- இந்த சிகிச்சையில் உடைந்த துண்டுகளை வரிசைப்படுத்தி, சிம்பு வைக்கப்படுகிறது.விரலில் அழுத்தம் மற்றும் வலியைக் குறைக்க உடைந்த விரலை பக்கத்துக்கு விரலோடு சேர்த்து கட்டு கட்டிவிடப்படும்.எவ்வளவு நீளம் விரலில் சிம்பு வைக்கவேண்டும் என்று மருத்துவர் முறிவை ஆய்வு செய்தபிறகு தீர்மானிப்பார்.
- விரல் இயக்கங்களின் கட்டுப்பாடு அறிவுறுத்தப்படுகிறது.
- வலி நிவாரணி மற்றும் பனிக்கட்டி ஒத்தடம் போன்ற சிகிச்சைகள் பொதுவாக மூன்று வாரத்திற்கு அளிக்கப்படும்.
- அபாயமான நிலையில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.உடைந்த துண்டுகளை சரியாக பிடித்துக்கொள்ள சில சாதனங்கள் தேவைப்படலாம்.அதாவது உயிர் இணக்கமான பின்கள் அல்லது திருகுகள் தேவைப்படலாம்.