இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு - Gastrointestinal Bleeding in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 23, 2018

July 31, 2020

இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு
இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு

இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு என்றால் என்ன?

இரைப்பைக் குடல் (ஜி.ஐ) இரத்தப்போக்கு என்ற இந்த நிலையில், செரிமான பாதை முழுவதும், அதாவது வாய் பகுதியிலிருந்து துவங்கி ஆசன வாய் வரை உள்ள எந்த பகுதியிலும் இரத்த இழப்பு ஏற்படலாம். இரத்தப்போக்கு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் கடுமையானதாக இருக்கலாம் அல்லது மிக குறைவாக ஆனால் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஒன்றாகவும் இருக்கலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இரைப்பை குடல் இரத்தப்போக்கு பரவலாக மேல் இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் கீழ் இரைப்பை குடல் இரத்தப்போக்கு என்று வகைப்படுத்தப்படுகிறது. மேல் இரைப்பை குடல் இரத்தப்போக்கில், அடர் சிவப்பு நிறத்தில் வாந்தியெடுத்தல், வாந்தியின் நிறம் அரைத்த காப்பி போன்று இருத்தல்,கருமையான மலக்கழிவு அல்லது இரத்தம் கலந்த மலக்கழிவு ஆகியவற்றை அறிகுறிகளாக கொண்டிருக்கும். கீழ் இரைப்பை குடல் இரத்தப்போக்கின் அறிகுறிகள்: அடர் சிவப்பு நிறத்தில் மலக்கழிவு அல்லது மலம் கழிக்கும் போது வலியுடன் கூடிய மூல நோய் (ஹேமிராய்ட்ஸ்) பாதிப்பிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுதல் போன்றவை ஆகும். நாள்பட்ட இரத்த இழப்புடன் தொடர்புடைய அறிகுறிகள் ஆவன சோர்வு, வெளிர் தோல், இரத்த சோகை, இதயத்தில் ஏற்படும் சிக்கல்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் தளர்வு ஆகியவையாகும். எந்த வித இரத்த இழப்பும் உயிருக்கு ஆபத்தானது என்பதால், இரைப்பை குடல் இரத்தப்போக்கு அதன் ஆரம்பகாலத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்க பட வேண்டும்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

மேல் இரைப்பை குடல் இரத்தப்போக்கிற்குரிய காரணங்கள்:

  • உணவுக்குழாய் சுருள் சிரை.
  • வயிற்று புண்கள்.
  • மல்லோரி-வெயிஸ் நோய்க்குறி என்றழைக்கப்படும் உணவுக்குழாயில் கண்ணீர்த்துளிகள் போன்று ஏற்படுதல்.
  • உணவுக்குழாய் புற்றுநோய்.

கீழ் இரைப்பை குடல் இரத்த போக்கு ஏற்பட காரணங்களாவன:

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

நபரின் தற்போதைய மற்றும் கடந்தகால மருத்துவ அறிக்கையின் விரிவான விவரங்களை பெறுவதன் மூலம் நோயறிதல் கண்டறியப்படுகிறது, இதனால் அறிகுறிகளின் சரியான இயல்பு மற்றும் அறிகுறிகளின் மாதிரியை புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து ஏற்படும் இரத்தப்போக்கின் அறிகுறிகளை அறிந்துகொள்ள ஒரு முழுமையான உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

இது முடிந்தவுடன், இரத்த போக்கினை பொறுத்து தொடர்ச்சியான சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேல் இரைப்பை குடல் இரத்தப்போக்கு   இருப்பின்  ஒரு எண்டோஸ்கோபி செய்யப்படுகிறது. இது மருத்துவர் மேல் இரைப்பைக் குழாயின் நிலையை அறிந்துகொள்ளவும்  மற்றும் வேறு ஏதெனும் புண் அல்லது  சிரைக்குழல் புடைப்பு உள்ளதா என பார்க்கவும் உதவுகிறது. இதேபோல், கீழ் இரைப்பை குடல் இரத்தக் கசிவுக்கான காரணங்களைக் கண்டறிய, ஒரு காலனோஸ்கோபி முறை செய்யப்படுகிறது. மற்ற சோதனைகளான ஒட்டுமொத்த இரத்த எண்ணிக்கை, ஒரு மலக்குடல் சோதனை மற்றும் ஒரு   இருப்பின் இசிஜி ஆகியவை நபரின் வயதை பொறுத்து தேவைப்பட்டால் செய்யப்படுகிறது.

சிகிச்சை, நோயின் காரணத்தை சார்ந்துள்ளது. இரத்தக் குழாய்களைக் சுருகுவதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குடற்புண்களுக்கு, வயிற்று அமிலத்தின் விளைவினை குறைக்க புரோட்டான் பம்ப் வினைத்தடுப்பிகள் வழங்கப்படுகின்றன. இரத்தக் குழாய்களைக் இறுக்கி கட்ட சில கிளிப்புகள் அல்லது பட்டைகள் பயன்படுத்துவதன் மூலம் எண்டோஸ்கோபி திறம்பட இரத்தப்போக்கினை நிறுத்துவதாக கருதுகிறது. தேவையான சிகிச்சகளாவன இரத்த மாற்று, குறிப்பாக அதிக இரத்த இழப்பு ஆகும் போது செய்யப்படுகிறது. மூல நோய் மற்றும் சிரைக்குழல் புடைப்பு ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படலாம்.



மேற்கோள்கள்

  1. McQuaid, Laine L. Systematic review and meta-analysis of adverse events of low-dose aspirin and clopidogrel in randomized controlled trials.. Am J Med. 2006 Aug;119(8):624-38. PMID: 16887404
  2. Das A, Wong. Prediction of outcome of acute GI hemorrhage: a review of risk scores and predictive models.. Gastrointest Endosc. 2004 Jul;60(1):85-93. PMID: 15229431
  3. Barkun et al. International consensus recommendations on the management of patients with nonvariceal upper gastrointestinal bleeding.. Ann Intern Med. 2010 Jan 19;152(2):101-13. PMID: 20083829
  4. Rockall, Logan, Devlin, Northfield. Risk assessment after acute upper gastrointestinal haemorrhage.. Gut. 1996 Mar;38(3):316-21. PMID: 8675081
  5. DiGregorio AM, Alvey H. Gastrointestinal Bleeding. Gastrointestinal Bleeding. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.