ஹெபடைடிஸ் ஏ என்றால் என்ன?
ஹெபடைடிஸ் ஏ என்பது கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரல் நோய்த்தொற்று ஆகும். இந்நோய் பொதுவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படுவதோடு எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. எனினும், வயதுடன் சேர்ந்து இந்நோயின் தீவிரமும் அதிகரிக்கின்றது. பொதுவாக, இந்த நோய்த்தொற்று குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்திருக்கின்றது அதோடு மிக அரிதாக, மரணத்தை விளைவிக்கின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
வைரஸால் பாதிக்கப்பட்ட 2லிருந்து - 4 வாரங்களுக்குள் நோய்த்தொற்றின் அறிகுறிகள் வெளிப்பட தொடங்கும். பொதுவாக காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர்.
- வெள்ளை மஞ்சள் நிறமாக மாறுதல்.
- காய்ச்சல்.
- பலவீனம்.
- வயிற்றுப்போக்கு.
- குமட்டல்.
- பசி குறைதல் (மேலும் படிக்க: பசியின்மை ஏற்பட செய்யும் காரணிகள்).
- மூட்டு வலிகள்
அரிதாக, இது கல்லீரலை தீவிரமாக தாக்குவதோடு அதன் செயலிழப்பிற்கும் காரணமாகிறது. (மேலும் படிக்க: கல்லீரல் செயலிழப்புக்கான காரணங்கள்).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஹெபடைடிஸ் நோய்த்தொற்று எனும் நிலை ஹெபடைடிஸ் ஏ என்ற வைரஸினாலேயே (ஹெஞ்ச் ஏ வி) ஏற்படுகின்றது. இது முக்கியமாக மலத்திலிருக்கும் வைரஸால் பாதிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்வதாலேயே பரவுகின்றது.
இந்த நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றோருவருக்கு கீழ்வருவனவற்றால் பரவுகின்றது:
- இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர் சமைத்த உணவை உட்கொள்தல்.
- சுத்தப்படுத்தப்படாத தண்ணீரை பருகுதல்
- பாதிக்கப்பட்டவர்களுடன் தனிப்பட்ட தொடர்பு வைத்தல் அதாவது பாலியல் தொடர்பு அல்லது அவரின் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை உபயோகித்தல் மூலமாகவும் இது மற்றவருக்கு பரவுகிறது.
இருமல், தொடுதல், கட்டிப்பிடித்தல் அல்லது தாய்ப்பால் கொடுத்தல் போன்ற செயல்களால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர்கள்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
ஹெபடைடிஸ் ஏ தொற்றினால் நீங்கள் எதிர்கொள்ளும் அறிகுறிகளின் அடைப்படையில் உடலியல் பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனை போன்ற சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் மருத்துவர் இந்நிலையை கண்டறிவார். ஹெபடைடிஸ் ஏ வைரஸிற்கு எதிராக போராட உடலில் தானாகவே உற்பத்தி ஆகும் ஆண்டிபாடிகளை அடையாளம் காண இரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ தொற்றுக்கு நிலையான சிகிச்சை முறைகள் இல்லை, அதன் தீவிரத்தை பொறுத்து அதனால் ஏற்படும் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்ய முறையான ஓய்வெடுத்தல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நிறைய தண்ணீரை பருகுதல் ஆகியவை பொதுவான சிகிச்சை முறைக்குள் அடங்குகின்றன. நோய்த்தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்குள்ளேயே அதிலிருந்து நிவாரணம் பெறுதலை காணமுடியும். பொதுவாக, கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும்.
இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும்:
- சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பருகுதல்.
- சுத்தமான மற்றும் சமைக்கப்பட்ட உணவு வகைகளையே சாப்பிட வேண்டும்.
- தோல் உரிக்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்தலை தவிர்க்க வேண்டும்.
- ஊசியை பகிர்ந்து உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். (மேலும் படிக்க: பாதுகாப்பான உடலுறவு பழக்கங்கள்).
- குழந்தை பருவத்திலிருந்தே ஹெபடைடிஸ் ஏ வைரஸ்க்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்தல்.