உயர் ட்ரைகிளிசரைடுகள் என்றால் என்ன?
ட்ரைகிளிசரைடுகள் என்பது உங்கள் இரத்த ஓட்டத்தில் காணப்படும் ஒரு வகையான கொழுப்பு ஆகும். ட்ரைகிளிசரைடுகளின் அளவு, ஒரு நிலையான கொழுப்பு பரிசோதனையில் நீங்கள் பார்க்கும் நான்கு எண்களில் ஒன்றாகும், பெரும்பாலான கொழுப்பு உணவுகள் ட்ரைகிளிசரைடுகளால் ஆனது, இது ஆரம்ப நிலையில் கொழுப்பு அணுக்களில் சேமிக்கப்படுகிறது மற்றும் பின்னர் இரத்த ஓட்டத்தில் பரவுவதற்கு அனுப்பப்படுகிறது. இரத்த ஓட்டத்தில் இருக்கும் அதிக அளவிலான ட்ரைகிளிசரைடுகள் உயர் ட்ரைகிளிசரைடுகள் (ஹைப்பர்ட்ரைகிளிசரைடீமியா) என்று அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவாக, உயர் நிலையில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் எந்தவிதமான குறிப்பிட்ட அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.
எனினும், அதிக ஆபத்துடைய சில குறிப்பிட்ட நோய்கள் உருவாக காரணமாகிறது. அவை:
- தனிமக் கடினமாதல் (ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்) - இரத்த குழாய்கள் குருகுதல் மற்றும் கடினமாதல்.
- கரோனரி இதய நோய் - இதயத்தின் இரத்த குழாய்கள் கடினமாகவும் குறுகியும் இருத்தல்.
- பக்கவாதம் (ஸ்ட்ரோக்)- மூளைக்கு அனுப்பப்படும் இரத்தம் தடுக்கப்படுதல்.
- கணைய அழற்சி, அடிவயிற்றில் அதிகமான வலியை ஏற்படுத்துதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உயர் ட்ரைகிளிசரைடுகள் பல காரணிகள் அல்லது அடிப்படை நிலைகளால் ஏற்படலாம்:
- உடல் பருமன்.
- கட்டுப்பாடற்ற நீரிழிவு.
- கட்டுப்படாத தைராய்டு.
- கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்.
- மரபணு தாக்கம்.
- நீங்கள் கரைக்கும் கலோரிகளை விட அதிக கலோரிகளை உட்கொள்ளுதல்.
- சரீர உழைப்பில்லாத வாழ்கை முறை.
- அதிகமாக மது அருந்துதல்.
- புகைபிடித்தல்.
- சிறுநீர்ப்போக்குத் தூண்டிகள் (உடலில் உள்ள அதிகப்படியான நீரை நீக்குகிறது), ஸ்டீராய்டுகள், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் (நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்துகள்) போன்ற மருந்துகளை உட்கொள்ளுதல்.
- ஹார்மோன் சிகிச்சையில் உள்ள பெண்கள் அல்லது பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறியின் பாதிப்பு உள்ளவர்கள் அதிகமாக ட்ரைகிளிசரைடுகளின் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
- மருத்துவ வரலாறு மற்றும் பிற பரிசோதனைகளின் அடிப்படையில் உயர் ட்ரைகிளிசரைடுகளின் நிலை கண்டறியப்படுகிறது.
- உங்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள உயிர் ட்ரைகிளிசரைடுகளை பரிசோதிக்கவும் கண்டறியவும் லிபிட் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.150 மில்லிகிராம்/டெசிலிட்டர்க்கு குறைவான ட்ரைமணிநேரத்துக்கு கிளிசரைடு அளவு சாதாரண நிலையாக கருதப்படுகிறது.
- உங்கள் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுவதற்கு 12 மணிநேரதிற்கு முன்னால் வரை எதுவும் உண்ணாமல் இருக்க உங்கள் மருத்துவர் அறிவுறுத்துவார்.
- உயர் ட்ரைகிளிசரைடு நிலைக்கான சிகிச்சை முறை அதன் அடிப்படை நோயைக் கண்டறிவதையும் அவற்றை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஒருவரின் ஹார்மோன் அளவுகளை சமநிலையில் வைக்கவும் மற்றும் ஏதேனும் அடிப்படை சிறுநீரக அல்லது கல்லீரல் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
- ஸ்டாடின்ஸ், நியாசின் அல்லது ஒமேகா -3 கொழுப்பு அமில பிற்சேர்வுகள் போன்ற சில மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
சுய பாதுகாப்பு முறைகள்:
- புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்த்தல்.
- ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல்.
- தினசரி நடைப்பயிற்சி மற்றும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்தல்.