ஹோர்மோன் சமநிலையின்மை என்றால் என்ன?
மனித உடலில் உள்ள சாதாரண அளவிலான ஹார்மோன்களின் ஏற்படும் தொந்தரவுகள், ஹார்மோன் சமநிலையின்மை என்று அழைக்கப்படுகிறது. ஹார்மோன்கள் என்பது நமது உடலின் உட்சுரப்பியல் சுரப்பிகள் மூலம் சுரக்கும் இரசாயனங்கள் ஆகும்.அவை இரத்த ஓட்டத்தின் வழியாக பயணம் செய்து அனைத்து உறுப்புகளுக்கும் செய்திகளை வழங்குவதன் மூலம், அவற்றின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் பயன்படுகிறது.ஹார்மோன்களில் உள்ள ஏற்றதாழ்வுகள் கர்ப்பம் அல்லது வயது அதிகரித்தல் போன்ற சில கட்டங்களில் இயல்பாகவே நிகழ்கின்றன.பாலினம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாகவும் ஹோர்மோன் சமநிலையின்மை வேறுபடுகிறது.ஹோர்மோன் மாற்றங்களை கவனிக்காமல் விடுதல், உடலியல் மற்றும் உளவியல் அசாதாரணங்களை விளைவிக்கலாம்.
அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
அடிப்படைக் காரணங்களைப் பொறுத்து மாறுபடும் ஹார்மோன் சமநிலையின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- களைப்பு.
- வியர்வை.
- கவலை உணர்வுகள்.
- எரிச்சலூட்டும் தன்மை.
- கருவுறாமை.
- முலைக்காம்பில் கசிவு.
- விரைவான எடை அதிகரிப்பு.
- வயதுவந்தவர்களிடம் காணப்படும் முகப்பரு.
- எடை இழப்பு.
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்.
- நினைவகச் சரிவுகள்.
- பலவீனமான தசைகள் மற்றும் எலும்புகள்.
- முடி கொட்டுதல்.
- இன்சோம்னியா (தூங்குவதில் சிக்கல்).
- வெப்ப வெளியேற்றம்.
- மனச்சோர்வு.
- குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள்.
- மனம் அலைபாய்தல்.
- மாற்று குடல் இயக்கங்கள்.
ஹோர்மோன் ஏற்றத்தாழ்வால் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
ஹார்மோன் சமநிலையின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- மன அழுத்தம்.
- நாள்பட்ட சோர்வு நோய்க்குறி.
- மரபணு மாற்றங்கள்.
- ஸ்டெராய்டுகள் போன்ற சில மருந்துகள்.
- மாதவிடாய்.
- கர்ப்பம்.
- பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள்.
- தன்னியக்க நிலைமைகள்.
- ஒழுங்கற்ற உணவு.
- தைராய்டு சுரப்பியின் சிக்கல்கள் - ஹைப்பர் அல்லது ஹைப்போதைராய்டிசம்.
- வயது முதிர்தல்.
- சில ஒவ்வாமைகள்.
- பாலிசிஸ்டிக் கருப்பை நோய், ப்ரோலாக்டினோமா, ஏதேனும் சுரப்பிகளின் (பிட்யூட்டரி, தைராய்டு, கருப்பைகள், விந்தகம், அண்ணீரகம், ஹைபோதலாமஸ், மற்றும் பாராதைராய்டு) அதிகமான அல்லது கம்மியான செயல்பாடு போன்ற மருத்துவ நிலைகள்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
விரிவான வரலாறு மற்றும் உடல் பரிசோதனை போன்றவற்றை தவிர, ஹார்மோன் அளவுகளில் ஏற்றத்தாழ்வு பொதுவாக உமிழ்நீர் மற்றும் சீரம் சோதனைகளின் முடிவுகளை மதிப்பிடுவதன் மூலம் கண்டறியப்படுகிறது.டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் போன்ற பாலியல் ஹார்மோன்களின் அளவுகளைக் கண்டறிவதற்கான சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.அல்ட்ராசவுண்ட் அல்லது எம்.ஆர்.ஐ போன்ற தோற்றமாக்கல் சோதனைகள் தேவைப்படலாம்.
ஹார்மோன் சமநிலையின்மையின் அடிப்படைக் காரணத்தை குணப்படுத்துவத்தைக் கருத்தில் கொண்டு சிகிச்சை நிர்வகிக்கப்படுகிறது, மேலும் பொதுவாக பின்வரும் முறைகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது:
- மாத்திரைகள், குழைமங்கள் மற்றும் ஓட்டுகள் வடிவில் செயற்கை ஹார்மோன்கள்.
- ஹார்மோன் மாற்று சிகிச்சை.
- ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளைத் தடுக்க உதவும் ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவும் பரிந்துரைக்கப்படுகின்றன.
- கவலை மற்றும் மன அழுத்தம் கொண்ட மக்களுக்கு முறையான மனச்சோர்வு எதிர்ப்பு மற்றும் மனஅழுத்தம் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படலாம்.
- ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரக்கும்போது ஹார்மோன் எதிரிகள் வழங்கலாம்.