அஜீரணம் என்றால் என்ன?
அஜீரணம் என்பது வயிறு அல்லது இரைப்பையில் ஏற்படும் அசௌகரியம், ஏப்பம், நெஞ்செரிச்சல், வாயு மற்றும் வயிற்று உப்பல் போன்ற பல அறிகுறிகளை விவரிக்கப் பரவலாக பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும். வளர்ச்சி, மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் மற்றும் நகரமயமாக்குதல் ஆகியவற்றின் காரணமாக மன அழுத்தத்தின் அளவுகள் சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதால், இந்தியர்களிடையே அஜீரணம் என்பது மிக பொதுவான ஒரு நிலையாகிவிட்டது.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
அஜீரணம் என்பது நெஞ்செரிச்சல், வயிற்றில் ஏற்படும் அசௌகரியம், உப்புசம், குமட்டல், மாறுபட்ட சுவை உணர்ச்சி, நிலையான வலியுடன் ஏப்பம் விடுதல் போன்ற பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு பொதுச் சொல்லாகும். வழக்கமாக உணவருந்திய பின்னரே இந்த அறிகுறிகள் மோசமாகின்றன, குறிப்பாக மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும் வேளைகளில் இந்நிலை சற்று அதிகமாகவே ஏற்படுகின்றது. பல தனிநபர்களுக்கு மீட்டிங், பரீட்சை அல்லது ப்ரெசென்ட்டேஷன் கொடுப்பதற்கு முன்னர் அறிகுறிகள் மோசமடைவதாக தெரிவிக்கின்றனர்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
நாள்பட்ட காஸ்ட்ரோஈசோபேகியல் எதிர்வினை நோய் அல்லது வயிற்று புண் பொதுவாக அஜீரண அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது; இருப்பினும், மிகவும் பொதுவாக, முறையான உணவு பழக்கங்கள் இல்லாததாலும், நீண்ட இடைவேளைக்குப்பிறகு உண்ணுதல், அதிகம் மசாலாக்கள் சேர்த்த பொறிக்கப்பட்ட உணவுகளை உண்ணுதல் மற்றும் மதபழக்கத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றாலேயே அஜீரணம் ஏற்படுகிறது. வயிற்று உப்பசம் அல்லது விரிவடைந்த வயிறு போன்றவைகள் வழக்கமாக சாப்பிடும் போது நிறைய காற்றை விழுங்குவதன் விளைவாக ஏற்படுகின்றது. மனஉளைச்சலுடன் இருப்பது, அதிகமாக காபி பருகுதல் மற்றும் ஒரு ஒழுங்கற்ற தூக்க வரையறைகள் போன்றவை அஜீரணம் ஏற்பட பங்களிக்கின்றன. மற்ற காரணங்களில் அடங்குபவை குறிப்பிட்ட மருந்துகள் உட்கொள்ளும்போது இரைப்பை அக உறையினில் எரிச்சல் ஏற்படுவதாகும். இவை தவிர, உணர்ச்சிகரமான மன அழுத்தம் கூட அஜீரணத்துடன் தொடர்புடையதாகும்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர் நோயாளர் மருத்துவ வரலாற்றை வெளிப்படுத்துவதோடு அஜீரணத்திற்கான காரணத்தை கண்டறியவும் சிறந்த சிகிச்சைத் திட்டத்தை தீர்மானிக்கவும் முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொள்வார். கடுமையான அல்லது நாள்பட்ட அஜீரணத்திற்கு, இரைப்பை புண் அல்லது காஸ்ட்ரிக் ரிஃப்ளக்ஸ் இருக்கிறதா என்பதை அறிய எண்டோஸ்கோபி சோதனை மேற்கொள்ளபடலாம். கடுமையான சவழக்குகளுக்கு பயன்படுவதைத் தவிர இரத்தம் மற்றும் இமேஜிங் சோதனைகள் அஜீரண நோயறிதலுக்கு மிகவும் உதவியாக இருப்பதில்லை.
சிகிச்சையில் முக்கியமாக அடங்குபவை மக்னீசியம் சல்பேட் கொண்ட அமில நீக்கி அல்லது வாய்வழி மருந்துகளான புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள் மற்றும் ஹெச்2- ஏற்பு பிளாக்கர்கள் ஆகிவையாகும். அஜீரணமானது பெரும்பாலும் வாழ்க்கை முறையில் ஏற்படும் கோளாறு என்பதால் சுய-பராமரிப்பு நடவடிக்கைகளும் இவற்றை கையாளுவதில் ஒருங்கிணைந்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளில் மெதுவாக உணவருந்துதல், வழக்கமான உணவு உண்ணுதல், ஏராளமான திரவங்களை பருகுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தை நிர்வகிப்பது, அதிக பொரித்த அல்லது காரமான உணவுகளை தவிர்த்தல், இரவில் தாமதமாக உணவு உட்கொள்வதை தவிர்த்தல், காஃபின் மற்றும் மதுபழக்கத்தை குறைப்பது ஆகியவைகள் அடங்கும்."ஜீரா" மருந்துக்கலவை அல்லது சீரக நீர் பருகுதல் வாயு, வயிறு உப்பல் மற்றும் நெஞ்செரிச்சலை ஆகியவைகளை சமாளிக்க மிகவும் உதவியாக இருக்கும்.