பூச்சி கடி மற்றும் கொடுக்குகள் என்றால் என்ன?
பூச்சி கடி மற்றும் கொடுக்குகள் மிகவும் பொதுவானவை, இது வீட்டில் அல்லது வெளிப்புறங்களில் ஏற்படுகிறது.பல சந்தர்ப்பங்களில், பூச்சி கடி மற்றும் கொடுக்குகள் சில மணிநேரங்களுக்குள் அல்லது நாட்களுக்குள் குறைந்துவிடும் மற்றும் இது கடுமையான நிலைமைகளை உருவாக்காது.சில சந்தர்ப்பங்களில், நீங்கள் கடுமையான எதிர்வினைகளை அனுபவிக்கலாம் அல்லது இது மலேரியா அல்லது லைம் நோய் போன்ற நோய்களை ஏற்படுத்தலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒவ்வொரு பூச்சி கடியும் கொடுக்கும் தனித்தனியான குறிப்பிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றாலும், பூச்சிகளால் உண்டாகும் பெரும்பாலான பூச்சி கடி மற்றும் கொடுக்குகள் சில பொதுவான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.நீங்கள் வழக்கமாக சிவப்பு நிறத்தில் ஒரு சிறிய கட்டி அல்லது திரள்வை காணலாம்.பூச்சி கடி மற்றும் கொடுக்குகளால் ஏற்பட்ட காயத்தின் இடத்தில் எரிச்சல், அரிப்பு அல்லது மிகுந்த வலி ஏற்படுத்தலாம்.சில சந்தர்ப்பங்களில், காயம் ஏற்பட்ட தளத்தில் அதிக வெப்பம் தோன்றலாம், அல்லது உணர்வின்மை கூட ஏற்படலாம்.ஒரு சாதாரண பூச்சி கடியை வீட்டிலேயே பராமரிக்கலாம்.மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் சில மணிநேரங்களில் மறைந்துவிடும், மேலும் அனைத்து அடையாளங்களும் ஒரு நாளில் போய்விடும்.கடி மற்றும் கொடுக்குக்கு மிகுந்த உணர்திறன் கொண்டவர்கள், ஒவ்வாமை அதிர்ச்சியை அனுபவிக்கலாம், இதனால் தொண்டையில் நெரிசல் ஏற்பட்டு சுவாசம் கடினமாகிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
குளவி, உன்னி, தெள்ளுப்பூச்சி, மூட்டைப்போச்சி, கொசு, தேனீ மற்றும் மலைக்குளவி போன்றவற்றால் மிகவும் பொதுவாக ஏற்படும் பூச்சி கடி மற்றும் கொடுக்குகள் ஏற்படுகின்றன.இந்த பூச்சிகளில் ஒன்று கடித்தாலோ அல்லது கொட்டினாலோ, விஷம் உடலில் உட்செலுத்தப்படுகிறது மற்றும் இதனால் நாம் பொதுவாக பார்க்கும் அறிகுறிகளில் சில உடலில் ஏற்படுகிறது.உடலில் செலுத்தப்படும் விஷத்தில் ஏதேனும் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் இருந்தால், அந்த நபர் ஒரு நோயால் பாதிக்கப்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஒரு பூச்சி கடி அல்லது கொடுக்கை உடல் பரிசோதனையின் பொது கண்டறிவது ஒரு மருத்துவருக்கு மிகவும் எளிதானது, இருப்பினும் பாதிக்கப்பட்ட நபர் அவரைக் கடித்த பூச்சிகளை அடையாளம் காண முடிந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான பூச்சி கடி மற்றும் கொடுக்குகளுக்கு சாதாரண வீட்டு மருத்துவம் போதுமானது.பாதிக்கப்பட்ட இடத்தை நன்றாக சுத்தப்படுத்துதல், எரிச்சலைக் குறைக்க பனிக்கட்டி ஒத்தடம் கொடுத்தல் அல்லது உடனடி நிவாரணம் பெற ஒரு மென்மையான கிரீம் அல்லது சூடான ஒத்தடம் பயன்படுத்துவதல் ஆகியவை இந்த சிகிச்சைக்கு உதவும்.தொடர்ந்து அரிப்பு இருந்தால், அப்பச்சோடா மற்றும் தண்ணீரால் தயாரிக்கப்பட்ட ஒரு பசையைப் பயன்படுத்தலாம்.
நோயாளியின் அறிகுறிகள் மற்றும் நிலைமை மோசமாக இருந்தால், உடனடி மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட வேண்டும்.இதில் ஆடைகளை தளர்த்துவது, பாதிக்கப்பட்டவர்களை ஒரு பக்கமாகவோ திருப்புவது அல்லது சி.பி.ஆர் செய்வது ஆகியவை அடங்கும்.தேனீ கொடுக்குகளைப் பொறுத்தவரையில், கொடுக்கை நீக்குவதன் மூலம் உடலுக்குள் மேலும் விஷம் உறிஞ்சப்படுவதை தவிர்க்கலாம்.
ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் ஆகியவை வலி, வீக்கம் மற்றும் அரிப்புகளை குறைக்க உதவும்.