மஞ்சள்காமாலை - Jaundice in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

March 10, 2017

March 06, 2020

மஞ்சள்காமாலை
மஞ்சள்காமாலை

சுருக்கம்

மஞ்சள்காமாலை, மொத்த பித்த நிணநீரின் (டீஎஸ்பி) அளவு 3 மி.கி/டிஎல்-க்கு மேல் உயரும் ஒரு நோய். இந்த அறிகுறிகள், உங்கள் தோல், கண்களின் வெள்ளைப்பகுதி, சளி சவ்வுகள் (வாய் போன்ற உள்புற மென்மையான உறுப்புகளின் உட்பகுதிகள்) போன்றவை மஞ்சள் நிறமடைதலை உள்ளடக்கியவையாகும். வழக்கமாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை இருக்கிறது, ஆனால் வயது வந்தவர்களும் கூட இதனால்  பாதிக்கப்படக் கூடும். வயது வந்தவர்களுக்கு, வயிற்று வலி, பசியின்மை, எடைக் குறைவு, இன்ன பிற., மற்ற அறிகுறிகளும் காணப்படலாம். குழந்தைகளுக்கு ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் இரத்தம் ஏற்றுதல், வயது வந்தவர்களுக்கு ஏற்படும் பொழுது இது, நோய்க்காரணியை நீக்குதல், மருந்து கொடுத்தல் மற்றும் சிலநேரங்களில், ஒரு அறுவை சிகிச்சை. சிகிச்சை அளிக்காமல் விட்டால், அது, குழந்தையின் மூளையை பாதிக்கக் கூடும், மேலும் இரத்தத்தில் சீழ் பிடித்தல், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் அல்லது செயலிழப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

பிலிருபினுடைய வளர்சிதை மாற்றம்

நமது உடல் தொடர்ந்து புதிய இரத்த சிகப்பு அணுக்களை (ஆர்பிசீக்கள்) உற்பத்தி செய்கிறது மற்றும் பழையனவற்றை வெளியேற்றுகிறது. இந்த நடைமுறையின் போது, பழைய ஆர்பிசீக்களின் உள்ளேயுள்ள ஹீமோகுளோபின், குளோபின், இரும்புச்சத்து மற்றும் பிலிவெர்டின் ஆக உடைக்கப்படுகிறது. குளோபின் மற்றும் இரும்புச்சத்து நமது எலும்பு மஜ்ஜைகளால், புதிய ஹீமோகுளோபின்களை உருவாக்க மறு-பயன்படுத்தப்படும் நேரத்தில், பிலிவெர்டின், பிலிருபின் எனப்படும் துணைப் பொருளாக மறுபடி உடைக்கப்படுகிறது. நமது கல்லீரல் அதன் அடுத்தகட்ட வளர்சிதை மாற்றத்துக்காக இந்த பிலிருபினை எடுத்துக் கொள்கிறது. இந்த செயல்முறைக்கு உள்ளான பிலிருபின் பித்தப்பையின் வழியாகப் பாய்ந்து குடற்பகுதிக்குள் நுழைகிறது. குடற்பகுதியும் இதனை, யூரோபிலினோஜென், ஸ்டெர்கோபிலினோஜென் என இரண்டாகப் பிரிக்கிறது. யூரோபிலினோஜென் இரத்த சுழற்சியில் வெளியிடப்படுவதற்காக மீண்டும் திரும்ப உறிஞ்சப்பட்டு, சிறிதளவு நமது கல்லீரலுக்குள் மறுபடி நுழையும் பொழுது, அதன் மீதி  நமது சிறுநீரகங்களால் நீக்கப்படுகிறது. ஸ்டெர்கோபிலினோஜென் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது.

மஞ்சள்காமாலை அறிகுறிகள் என்ன - Symptoms of Jaundice in Tamil

குழந்தைகளுக்கு

 • பிறந்த குழந்தைக்கு அல்லது உடலியல் மஞ்சள்காமாலை
  பெரும்பாலும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் லேசாக தோன்றுவதிலிருந்து தோன்றாத நிலை வரை உண்டு. ஆனால், உங்கள் பிறந்த குழந்தை எடை குறைவாக இருந்தால் அல்லது குறைப்பிரசவம் ஆகியிருந்தால், உங்கள் குழந்தை மஞ்சள்காமாலையின் தனித்துவமான அம்சங்களைக் கண்டிப்பாக காட்டும். இந்த அறிகுறிகள் உங்கள் குழந்தையின் உடலில் தோன்றுவதற்கு ஒரு வாரம் வரை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் மூன்று வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும். உங்கள் குழந்தையின் தோல்; வாயின் உட்புற மென்மையான பகுதி, கண்களின் வெள்ளை நிறப் பகுதி, உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மஞ்சளாக மாறும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் மலம் வெளிறிய நிறமாகும். சில நாட்களில் தோலின் மஞ்சள் படலம், உங்கள் குழந்தையின் தலை மற்றும் முகத்தில் இருந்து தொடங்கி உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுகிறது. உங்கள் குழந்தை பால் அருந்துவதில் சிரமம், பலவீனமான மற்றும் தூக்க உணர்வு போன்ற பிரச்சினைகளையும் சந்திக்கலாம், மேலும் அதிகமான சத்தத்தில் அழுகையும் இருக்கக் கூடும்.
 • ஹீமோலிடிக் மஞ்சள்காமாலை
  ஒரு ஆர்எச்- பாசிட்டிவ் (ஆர்பிசீக்களில் இருக்கும் ரெசுஸ் என்ற ஒரு புரதத்தைக் குறிக்கிறது. ஒரு நபருக்கு இந்தப் புரதம் இருந்தால் அவர்/அவளுக்கு ஆர்எச்- பாசிட்டிவ்) குழந்தை, ஒரு ஆர்எச்-நெகடிவ் (ஆர்பிசீக்களில் ஆர்எச் புரதம் இல்லாதவர்) தாய்க்குப் பிறந்தால், அதிகப்படியான ஆர்பிசீக்களின் அழிவு இடம்பெறும். ஆர்எச்- பாசிட்டிவ் இரத்தம் , தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பில் ஒரு அந்நியமான பொருள் போல் செயல்படுகிற டி-ஆன்டிஜென்- ஐ கொண்டிருக்கிறது. தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த ஆன்டிஜென்னை உணர்ந்து, ஆன்ட்டி-டி ஆன்டிபாடிகளை (டி-ஆன்டிஜென்களை கண்டறிந்து அது போன்ற ஆர்பிசீக்களை கொல்லும் புரதங்கள்) உற்பத்தி செய்கிறது. இந்த ஆன்டிபாடிகள் அவளது நஞ்சுக்கொடியை (அல்லது தொப்புள்கொடி) கடந்து டி-ஆன்டிஜென்களோடு இணைந்திருக்கும் கருவின் ஆர்பிசீக்களை அழிக்கத் துவங்குகிறது. ஹீமோலிசிஸ் நிணநீரில் உள்ள டீஎஸ்பி அளவை அதிகரிக்கிற காரணத்தால் மஞ்சள்காமாலை ஏற்படுகிறது. இந்த நிலை, பிறந்த குழந்தைக்கு ஏற்படும் ஹீமோலிடிக் வியாதி அல்லது எரித்ரோபிளாஸ்ட்டோசிஸ் ஃபெட்டாலிஸ் எனவும் அறியப்படுகிறது. இதன் அறிகுறிகள், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள்காமாலையின் அறிகுறிகளை ஒத்ததாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு ஏற்படக் கூடிய மற்ற அறிகுறிகள்:
  • வயிற்று வலி.
  • இரத்த சோகையை உண்டாக்கக் கூடிய வகையில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைதல்.
  • இரத்த சேர்க்கை இதய பாதிப்பு (இதய செயலிழப்பு).

வயது வந்தவர்களுக்கு

வயது வந்தவர்களுக்கும் தோல், கண்களின் வெள்ளைப் பகுதி, சளி சவ்வுகள் ஆகியவை மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற வழக்கமான அறிகுறிகள் தோன்றும். இவை தவிர, மேல்புற வலது பக்க வயிற்றில் வலி ஏற்பட்டு முதுகின் வலது பக்கம், வலது தோள்பட்டை, வலது அடிவயிறுப் பகுதி,இன்ன பிற பகுதிகளுக்குப் பரவுதல், அரிப்பு, வெளிறிய உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள், எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல், அடர் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வெளிறிய மலம் ஆகியன வயது வந்தவர்களுக்கு வரும் மஞ்சள்காமாலையின் மற்ற அறிகுறிகள் ஆகும்.

மஞ்சள்காமாலை சிகிச்சை - Treatment of Jaundice in Tamil

மஞ்சள்காமாலையின் வகையைப் பொறுத்து, அதற்கு சிகிச்சையளிக்க பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில சிகிச்சை முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன;

குழந்தைகளுக்கு

 • பிறந்த குழந்தைக்கு வரும் மஞ்சள்காமாலை
  உங்கள் குழந்தையின் அறிகுறிகள் 2-4 வாரங்களில், கல்லீரல் முழுமையாக வளர்ந்து, அதிகப்படியான பிலிருபினை எடுத்துக் கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த இயலும் போது குறையக் கூடும். ஆயினும், உங்கள் குழந்தைக்கு கடுமையான மஞ்சள்காமாலை இருந்து, குழந்தையின் நிணநீரில் டீஎஸ்பியின் அளவு அதிகமாக இருந்தால், சிகிச்சை தேவைப்படலாம். சிகிச்சை, ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் இரத்தம் ஏற்றுதல், இன்ன பிறவற்றை உள்ளடக்கியது.
 • ஒளிக்கதிர்
  ஒளிக்கதிர் சிகிச்சையில், உங்கள் குழந்தை முடிந்த வரை அதிகப்படியான ஒளியின் நேரே காட்டப்படுகிறது. ஒளியும் ஆக்ஸிஜனும் இணைந்து பிலிருபின் உடன் சேர்ந்து போட்டோ-ஆக்ஸிடேசனுக்கு காரணமாகிறது. ஆகவே அது நீரில் கரைந்து, உங்கள் குழந்தையின் கல்லீரல் அதை உடைப்பதற்கும், உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும் எளிமையாக இருக்கிறது. தாய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக, சிகிச்சை ஒவ்வொரு 3-4 மணி நேரங்களுக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. உங்கள் குழந்தையின் டீஎஸ்பி அளவு 1-2 நாட்களுக்குள் குறையா விட்டால், ஒளிக்கதிர் சிகிச்சை எந்த இடைவெளியும் இன்றி தொடரப்பட வேண்டும்.
 • இரத்தம் ஏற்றுதல்
  ஒளிக்கதிர் சிகிச்சை பயனற்றதாக, உங்கள் குழந்தையின் பிலிருபின் அளவு மிகவும் அதிகமாக இருந்தால், இரத்தம் ஏற்றுதல் பரிந்துரைக்கப்படலாம். ஒரு பொருத்தமான தானமளிப்பவரிடம் (அதே ரத்தப் பிரிவுடனும் எந்த வித இரத்தக் கோளாறுகள் அல்லது தொற்றுகள் இல்லாமலும்) இருந்து இரத்தம் எடுக்கப்பட்டு, குழந்தையின் இரத்தத்திற்கு பதிலாக ஏற்றப்படும். புதிய இரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகமாக இல்லாமலிருப்பதால், குழந்தையின் நிணநீர் பிலிருபின் அளவு வேகமாகக் குறைகிறது. இந்த நடைமுறை முழுவதும் குழந்தை கண்காணிக்கப்படுகிறது. மேலும் இரத்தம் ஏற்றப்பட்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு பிலிருபின் அளவும் பரிசோதிக்கப்படுகிறது.
 • பிறந்த குழந்தைக்கு ஏற்படும் ஹீமோலிடிக் நோய் (எரித்ரோபிளாஸ்ட்டோசிஸ் ஃபெட்டாலிஸ்)
  வழக்கமாக லேசான நிலைகளில் எந்த சிகிச்சையும் தேவைப்படாது. கடுமையான நிலைகளில், ஒளிக்கதிர் சிகிச்சையோடு,இரத்தம் ஏற்றுவதும் பரிந்துரைக்கப்படலாம், அல்லது இம்முனோக்ளோபுலின்ஸ் (அந்நியமான பொருட்களை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு உற்பத்தி செய்யும் புரதங்கள்) ஊசி செலுத்துவதன் மூலம் குழந்தையின் நிலைமை கண்டிப்பாக முன்னேற்றமடைகிறது. அது குழந்தையின் ஆர்பிசீக்கள் மேலும் உடைவதைத் தடுத்து டீஸ்பி அளவுகளைக் குறைக்க உதவுகிறது.

வயது வந்தவர்களுக்கு
வயது வந்தவர்களுக்கு, மஞ்சள்காமாலையின் சிகிச்சை பின்னால் இருக்கும் காரணத்தையும், அதை நீக்குவதையும் பொறுத்து இருக்கிறது. பின்வருவன மஞ்சள் காமாலையின் பின்னால் இருக்கும் காரணங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய சிகிச்சைக்கான உதாரணங்கள்: 

 • இரத்தசோகை
  உங்கள் மருத்துவர் ஆர்பிசீக்கள் உடைவதைத் தடுக்க இரும்பு சத்து மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்
 • நோய்த்தொற்று (.கா., கல்லீரல் அழற்சி)
  வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.
 • நாள்பட்ட கல்லீரல் நோய் அல்லது குடியினால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு
  உங்கள் மருத்துவர் உங்களை, உங்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், மேலும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும்,மது அருந்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்துவார். மிக அதிக மோசமான நிலைகளில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகிறது.
 • பித்தப்பையில் அடைப்பு
  பித்தப்பையில் கட்டிகள், கணைய புற்றுநோய் பித்தப்பையை அழுத்துவது, கட்டிகள், இன்ன பிறவற்றால் அடைப்பு ஏற்படக் கூடும். சிகிச்சை, அடைப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதோடு தொடர்புடையது.
 • மரபுவழி நோய்களால் ஏற்படும் மஞ்சள்காமாலை
  சிகிச்சை, மஞ்சள்காமாலைக்கு காரணமான குறைபாடுள்ள காரணிகளை உள்ளே செலுத்துவதை உள்ளடக்கியது.

சுய பாதுகாப்பு

சிகிச்சையைப்  போன்றே சுய பாதுகாப்பும் முக்கியமானது. மிதமான, சரிவிகித, குறைந்த கொழுப்புள்ள உணவு, அதிகமான தண்ணீர், சுத்தமான பழச்சாறுகள், மருந்துகள், போதுமான ஓய்வு ஆகியவற்றை எடுத்துக் கொள்வது முக்கியமானது. அளவுக்கு அதிகமான, காரமான மற்றும் தெருவோர உணவுகளை சாப்பிட வேண்டாமென நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். தெரியாத நீர்நிலைகளில் தண்ணீர் அருந்தக் கூடாது மற்றும் சுய சுத்தத்தைப் பராமரிக்க வேண்டும்.     மேற்கோள்கள்

 1. Stillman AE. Jaundice. In: Walker HK, Hall WD, Hurst JW, editors. Clinical Methods: The History, Physical, and Laboratory Examinations. 3rd edition. Boston: Butterworths; 1990. Chapter 87.
 2. National Health Service [internet]. UK; Treatment Newborn jaundice
 3. p S, Glicken S, Kulig J, et al. Management of Neonatal Hyperbilirubinemia: Summary. 2002 Nov. In: AHRQ Evidence Report Summaries. Rockville (MD): Agency for Healthcare Research and Quality (US); 1998-2005. 65.
 4. Wan A, Mat Daud S, Teh SH, Choo YM, Kutty FM. Management of neonatal jaundice in primary care. Malays Fam Physician. 2016 Aug 31;11(2-3):16-19. PubMed PMID: 28461853; PubMed Central PMCID: PMC5408871.
 5. National Health Service [internet]. UK; Kernicterus
 6. National Health Service [Internet]. UK; Jaundice

மஞ்சள்காமாலை க்கான மருந்துகள்

Medicines listed below are available for மஞ்சள்காமாலை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for மஞ்சள்காமாலை

Number of tests are available for மஞ்சள்காமாலை. We have listed commonly prescribed tests below: