மென்தசை கூர் அணுப்புற்று (கபோசி'ஸ் சர்கோமா) என்றால் என்ன?
கபோசி'ஸ் சர்கோமா என்பது 1872-ம் ஆண்டில் இந்த நிலைமையை விவரித்த ஹங்கேரிய தோல் மருத்துவரான டாக்டர் மோரிட்ஸ் காபோசியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது சருமத்தின் இரத்தநாளம் சார்ந்த சருமத்தில் திட்டுகளாகவோ அல்லது காயங்களாகவோ தோன்றும் ஒரு கொடிய புற்றுநோயாயாகும். இது எச்.ஐ.வி வைரஸ் நோய்த்தொற்று உள்ளவர்களிடத்தில் தோன்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இது எயிட்ஸ் நோயால் வரையறுக்கப்பட்ட உடல் நலமின்மையாக கருதப்படுகிறது. இந்த நோயானது ஓரினச்சேர்க்கை ஆண்களில் அதிக பாதிப்பை ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இது சருமம் அல்லது உட்சவ்வு அல்லது சீதச்சவ்வை பாதிக்கும் நிலைமையாகும். திட்டுகள் உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக்கூடும். காயங்கள் தட்டையான நிறமிழந்த நிறப்புள்ளிகளாகவோ முடிச்சுரு கொப்புளங்களாகவோ தோன்றக்கூடும். இது இரத்தக் குழாய்களால் நிறைந்திருப்பதால், அவை சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு ஊதா நிறத்தில் உள்ளன. அவற்றால் வலி இல்லாத போதிலும், எதிர்மறையான உளவியல் தாக்கம் ஏற்படுக்கூடும். காலப்போக்கில், இந்த காயங்கள் வலிமிகுந்ததாய் இருக்கக்கூடும், கால்களில் வீக்கமும் ஏற்படலாம்.
இந்த காயங்கள் உள் உறுப்புகளில் ஏற்படும் போது, உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும். இது சிறுநீர்க்குழாய் அல்லது குத கால்வாயைத் தடுக்கக்கூடும். நுரையீரலில், அவை பிராங்கஇசிவு, மூச்சுத்திணறல் மற்றும் தீவிரமாகும் நுரையீரல் செயலிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். சருமத்தில் உள்ள திட்டுகள் காலப்போக்கில் கட்டிகளாக உருவாகக்கூடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இது மனித ஹெர்பெஸ் வைரஸ் 8 என்று ஒரு வைரஸால் ஏற்படும் நோய்த் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது, இது கபோசி சர்கோமா-தொடர்புடைய ஹெர்பெஸ் வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. எச்.ஐ.வி நோய்த் தொற்று உள்ளவர்கள், இந்த வைரஸால் மிக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுவிட்டால், உயிரணுப் பிரதிபலிப்பின் சாதாரண சுழற்சியில் இடையூறு ஏற்படுவதால், நாளங்களின் உட்சவ்வு உயிரணுக்கள் (இரத்த நாளங்களின் உட்பூச்சாக உள்ள செல்கள்) அசாதாரண பெருக்கம் அடைகின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஒருவர் கபோசி'ஸ் சர்கோமாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிகுறிகள் குறிப்பிட்டால், காயத்தின் திசு பரிசோதனை மூலம் நோய் கண்டறிதல் உறுதி செய்யப்படுகிறது. மயக்கநிலையில், வழியின்றி கட்டியிலிருந்து சிறிய அளவில் திசு சேகரிக்கப்படுகிறது. இது இரத்த நாளங்கள் சார்ந்த காயங்கள் என்பதால், லேசாக இரத்தக்கசிவு மற்றும் ஓரிரண்டு நாட்களுக்கு லேசான அசௌகரியம் இருக்கக்கூடும். நோய் கண்டறிதலை உறுதிப்படுத்த திசு மாதிரி உயர் சக்தி நுண்ணோக்கி கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி உடலமைப்பு மற்றும் இயல்பற்ற உயிரணுக்களாலான இரத்த நாளங்கள் நோய் கண்டறிதலை உறுதிப்படுத்துகிறது.
இதற்கான சிகிச்சை எச்.ஐ.வி நோய்த் தொற்று தாக்கத்தின் நிலை மற்றும் இந்த நோய் நோயெதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பொறுத்தது. ரெட்ரோவைரல் எதிர்ப்புமருந்து சிகிச்சை (ஏஆர்டி) என்பது இதற்காக கிடைக்கக்கூடிய சிகிச்சை ஆகும். வேதி சிகிச்சை (கீமோதெரபி) மற்றும் ஏஆர்டி ஒன்றாக பயன்படுத்தப்படலாம். காயங்கள் உறைதல் அல்லது அறுவைசிகிச்சைச் சிதைவு செய்யப்படலாம். உறைபனி சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் காயங்கள் அகற்றப்படலாம்.