கவாசாகி நோய் - Kawasaki Disease in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

April 24, 2019

March 06, 2020

கவாசாகி நோய்
கவாசாகி நோய்

கவாசாகி நோய் என்றால் என்ன?

கவாசாகி நோய் என்பது உலகளவில் இதய நோய்க்கு முக்கிய காரணியாக உள்ள ஒரு தன்னுடல் தாக்குநோய் ஆகும். இது பெரும்பாலும் 5 வயதிற்கு உட்பட்ட இளம் குழந்தைகளை பாதிக்கிறது. இவற்றுள், 70 சதவீதம் 3 வயது அல்லது அதற்கு கீழ் உள்ள குழந்தைகளிடத்தில் காணப்படுகிறது. நோய் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டால், இது குழந்தையின் வளர்ச்சியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது ஒரு அச்சுறுத்தும் நோயாகவே இருந்தாலும் கூட, இது மிக அரிதாகவே காணப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இது பின்வரும் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது:

  • 5 நாட்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கும் காய்ச்சல்.
  • தடிப்பு.
  • கைகள் மற்றும் கால்களில் வீக்கம்.
  • கண்களில் உள்ள வெண் பகுதி சிவந்திருத்தல் மற்றும் எரிச்சல் (மேலும் வாசிக்க: சிவந்த கண்களுக்கான சிகிச்சை).
  • கழுத்தின் நிணநீர்க்கணு வீக்கம்.
  • வாய், உதடுகள் மற்றும் தொண்டையில் உள்ள எரிச்சல் மற்றும் வீக்கம்.

கண்ணில் ஏற்படும் நோய்த் தொற்று சீழ் அல்லாததாக இருக்கும். இது இரண்டு கண்களிலும் தோன்றும். கீழ் மற்றும் மேல் மூட்டுகளில் வீக்கம் மற்றும் தடிப்புகள் எப்போதுமே இருக்கும். உடல் முழுவதும் உள்ள தமனிகள் வீக்கமடைந்து காணப்படுகின்றன.

இதய இரத்தத் தமனியின் அழற்சி ஆபத்தான தாக்கங்களைக் கொண்டுள்ளது. மென்மையானதாக இருக்கும் தமனிகளின் உட்புற தசைகள், பலவீனமடைந்து, இரத்த நாளங்களின் வீக்கமான குருதி நாள அழற்சிக்கு வழிவகுக்கிறது. வீக்கம் நீடித்தால் குருதிநாள அழற்சி முறிவடையும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கவாசாகி நோய் ஏற்படுவதற்கான தெளிவான காரணம் எதுவும் இல்லை. ஆராய்ச்சியாளர்கள் இது வைரஸ் காரணமாக ஏற்படும் நோயாக இருக்கலாம் என்று சில ஆதாரங்களை வழங்குகின்றனர். மேலும், சில குழந்தைகளிடத்தில் மரபியல் முற்காப்பு ரீதியாக இருக்கக்கூடும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கவாசாகி நோயைக் கண்டறிய ஒரு குறிப்பிட்ட சோதனை இல்லை. இவ்வாறு, நோய் கண்டறிதல் பெரும்பாலும் மருத்துவ ரீதியாகவே உள்ளது, அதாவது, மற்ற எந்த நோய்களும் இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும். மருத்துவர் கவாசாகி நோய் இரத்தக் குழாய்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கண்காணிப்பார், மேலும் இதற்காக எலக்ட்ரோகார்டியோகிராஃபி (ஈசிஜி), இரத்த குழாய் வரவி போன்றவற்றை மேற்கொள்வார். இதய இரத்தத் தமனிகளில் எந்த பாதிப்பும் காணப்படவில்லை என்றால், குழந்தை முழுமையாக குணமடைய அதிக வாய்ப்பு இருக்கும். இதுவே 95% நோயாளிகளிடத்தில் தோன்றும் நிலைமையாகும்.

சிகிச்சையானது வலி, காய்ச்சல் மற்றும் வீக்கம் ஆகியவற்றைக் குறைகக்கூடிய மருந்துகளுடன் தொடங்குகிறது. இது இரத்த உறைவை தடுக்கக் கூடிய ஆஸ்பிரின் போன்ற வலி நீக்க மருந்துகளுடன் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்புப் புரதம் ஏ 12 மணி நேரத்திற்கு நரம்பு வழியாக செலுத்தப்படுகிறது. இதற்கு சரியான பலன் இல்லையென்றால், இதற்கு பதிலாக குழந்தைகளுக்கு ஸ்டீராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Overview - Kawasaki disease
  2. American Heart Association. Kawasaki Disease. [Internet]
  3. Nathan Jamieson, Davinder Singh-Grewal et al. Kawasaki Disease: A Clinician's Update. Int J Pediatr. 2013; 2013: 645391. PMID: 24282419
  4. D Eleftheriou et al. Management of Kawasaki disease. Arch Dis Child. 2014 Jan; 99(1): 74–83. PMID: 24162006
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Kawasaki Disease

கவாசாகி நோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for கவாசாகி நோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.