லேதரஃய் (துக்க மயக்கம்) என்றால் என்ன?
லேதரஃய் (துக்க மயக்கம்) என்பது சோர்வு அல்லது மந்தமான உணர்வை விவரிக்கும் ஒரு நிலை. எப்பொழுதும் தூங்கவேண்டும் போல தோன்றுதல் மற்றும் இந்த அறிகுறிகளை அனுபவிப்பவர்கள் மந்தமானவர்கள் என்று கூறப்படுகின்றனர். மனச்சோர்வு மற்றும் மந்த உணர்வு, மனதளவில் அல்லது உடலில் இருக்கலாம் மற்றும் ஒரு நபரின் அடிப்படை உடல் அல்லது மன நிலை நோயைக் குறிக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மந்தமானவர்கள் வழக்கமாக சிறிது தன்நிலையற்று இருப்பர் மற்றும் மிகவும் மெதுவாக நகர்வர். மனநிலை மாற்றங்கள், சோர்வு, ஆற்றல் இல்லாமை மற்றும் குறைந்த சிந்திக்கும் திறன் ஆகிய மற்ற அறிகுறிகளும் இவர்களிடம் காணப்படலாம். மந்தமானவர்கள் குறைவான விழுப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
காய்ச்சல் அல்லது ஃப்ளுகாய்ச்சல் போன்ற உடல் ரீதியான வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, ஒருவர் சோர்வாகவும் மந்தமாகவும் உணர்வது பொதுவான ஒன்று. இருப்பினும், மந்த நிலையை ஏற்படுத்தும் பிற நிலைமைகளும் உள்ளன. அவை பின்வருமாறு:
- ஹைப்பர்தைராய்டிசம்.
- ஹைப்போதைராய்டிசம்.
- பக்கவாதம்.
- கர்ப்பம்.
- அதிகமாக மது அருந்துதல்.
- காய்ச்சல்.
- மூளைக்காய்ச்சல்.
- மூளை காயம்.
- சிறுநீரக கோளாறுகள்.
- லைம் நோய்.
- நீர்ப்போக்கு, தூக்கம் போதியளவு இல்லாமை அல்லது ஊட்டச்சத்து குறைபாடு.
- மனச்சோர்வு, கவலை, பிரசவத்திற்கு பின்னர் உண்டாகும் மன அழுத்தம் அல்லது மாதவிடாய்க்கு முன் ஏற்படும் நோய்க்குறி போன்ற மன நிலைமைகள்.
- மனஅழுத்த எதிர்ப்பு மருந்துகள் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை துக்க மயக்க நோயைக் கண்டறிய உதவும். இதயம் மற்றும் நுரையீரல் பரிசோதிக்கப்படலாம். மருத்துவர் உங்கள் மனநல விழிப்புணர்வு, குடல் ஒலி மற்றும் வலியைப் பரிசோதிப்பார். மந்த நிலைக்கான வலுமிக்க காரணியாக இருக்கும் மருத்துவ நிலைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய பல ஆய்வுகள் மற்றும் தோற்றமாக்கல் சோதனைகள் செய்யப்படலாம்.
துக்க மயக்கத்திற்கு சிகிச்சையளிக்க, அதன் அடிப்படை காரணத்தைக் கண்டறிவது முக்கியம். இந்த நிலைக்கான சிகிச்சை அந்த காரணத்தின் இயல்பைப் பொறுத்து தொடங்கப்படுகிறது. துக்க மயக்கம் ஏதேனும் மனநோய் உடன் சம்பந்தப்பட்டிருந்தால், மனஅழுத்த எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். போதுமான திரவம் உட்கொள்ளுதல், சரியான தூக்கம், சீரான உணவு மற்றும் மன அழுத்தம் மேலாண்மை போன்ற எளிமையான சிகிச்சைகள், துக்க மயக்கத்தைக் குறைக்க உதவும்.