தோல் புற்றுநோய் (மெலனோமா) என்றால் என்ன?
தோல் புற்றுநோயானது மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும். இந்த நிலையானது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சி மற்றும் பெருக்கத்தால் ஏற்படுகிறது. மேலும் இது உடலின் அனைத்துப்பகுதிகளிக்கும் இந்நோயினை பரப்ப கூடிய சக்தி வாய்ந்தது ஆகும். சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், தோல் புற்றுநோயானது மிகவும் திறம்பட சிகிச்சை அளிக்கக்கூடிய வகையாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தோல் புற்றுநோயானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம், ஒவ்வொன்றும் சற்று மாறுபட்ட அறிகுறிகளையும் தாக்கங்களையும் கொண்டிருக்கும். மூன்று வகையான தோல் புற்றுநோய்களும், அவற்றின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- அடிக்கலப் புற்றுநோய் - இது தோல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகை ஆகும். மேலும் இது வழக்கமாக முத்து போன்ற தோற்றத்துடன் சிறிய பளபளப்பான அல்லது வெள்ளை நிறமான கட்டிகள் போல் தென்படும்.
- செதிட்கலப் புற்றுநோய் - பொதுவாக கடினமான தசை மேற்பரப்புடன் சிவப்பு நிறத்தில், செதிள் திட்டுகளாகத் தோலில் புடைத்துக் காணப்படும்.
- மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய் - தோலின் மேற்பரப்பில் கருப்பு புள்ளிகள் அல்லது கட்டிகள் போல தோன்றும்.
உடலின் மேற்பரப்பு முழுவதும் இந்த கட்டிகள் மற்றும் தடிப்புகள் காலப்போக்கில் தொடர்ந்து வளர்கிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்களுக்கு அளவுக்கு அதிகமாக வெளிப்படுதலே தோல் புற்றுநோய்க்கு முதன்மையான காரணமாகும்.
வெளிறிய நிறதோல் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உள்ள மக்களிடத்தில் தோல் புற்றுநோயானது பொதுவாக காணப்படுகிறது. இது சரும உயிரணுக்களில் மெலனின் (கருநிறமி) உருவாக்க குறைவால் ஏற்படுகிறது.
தோல் புற்று நோய் வளர்ச்சிக்கான மற்ற காரணிகள் கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
- அதிக எண்ணிக்கையிலான மச்சங்கள் காணப்படுதல்.
- இதற்கு முன்பு தோல் புற்றுநோய் கண்டறியப்பட்டிருத்தல்.
- சருமத்தில் தோன்றும் மஞ்சள் மண்ணிறப் புள்ளி.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
தோல் புற்றுநோய் வழக்கமாக ஒரு பொது மருத்துவர் அல்லது ஒரு தோல் மருத்துவர் மூலம் கண்டறியப்படுகிறது.
நோயாளிக்கு தோல் நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், நோயறிதலை உறுதி செய்ய பொதுவாக திசு பரிசோதனை செய்யப்படுகிறது. அடிக்கலப் புற்றுநோய் இருப்பதாக கணடறியப்பட்டால், அவை வேறு இடங்களுக்குப் பரவுதல் அரிது என்பதால் அதற்கு வேறு எந்த பரிசோதனையும் தேவைப்படாது. ஆனால் மற்ற இரண்டு புற்று நோய்களும் பரவக்கூடியது என்பதால் கூடுதலான பரிசோதனைகள் தேவைப்படுகிறது. புற்று நோய் எந்த அளவிற்கு பரவி இருக்கிறது என்பதை அறிய நுண் ஊசி உறிஞ்சல் (எஃப்.என்.ஏ) சோதனைகள் நிணநீர் முனையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையானது மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை அல்லாத முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. அவை குறைவெப்ப மருத்துவம், புற்றுநோய் எதிர்ப்பு கிரீம்கள், ஒளிக்கதிர் (போட்டோடைனமிக்) சிகிச்சை, அல்லது கதிரியக்க சிகிச்சை முறைகள் ஆகும்.
மெலனோமா புற்று நோய் இருப்பின், இவற்றுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகளும் மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்களுக்கு ஆரம்ப கால கட்டத்தில் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு ஒத்ததாகும். எனினும் மெலனோமா புற்று நோய் முற்றிய நிலையில், பாதிக்கப்பட்ட திசுவை நீக்கி புதியதை பொருத்த அறுவை சிகிச்சை முறை அவசியமாகிறது.