மன நோய் - Mental Illness in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 29, 2018

September 10, 2020

மன நோய்
மன நோய்

சுருக்கம்

நாம் எல்லோருக்கும் சில நொடிகள்  சிந்தனை, நடத்தை மற்றும் உணர்வுகள் பாதிக்கும்  போன்று அனுபவிப்போம். ஒரு  நிகழ்வினலோ அல்லது ஒரு நபரின் பிரதிபலிப்பாகவோ, எதிர்பார்க்காத அல்லது எதிர்நோக்காத செயலின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம். இதன் அறிகுறிகள் சில முன் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களை அடிப்படையாகக்-கொண்டிருக்கும். இந்த அறிகுறிகள் தீவிரமான அல்லது அதிகமாக நிலையில் காணப்படும் போது, ​​மனநோய் என அழைக்கபடும். மனநல கோளாறுகளின் காரணங்கள் அதிக அளவிலானவை. அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், குழந்தை பருவ துயரங்கள், புறக்கணிப்பு, விபத்து காரணமாக உடல் ஊனம், ஒரு அன்பின் இழப்பு, மரபணு ஒப்பனை, மூளை குறைபாடுகள் அல்லது காயங்கள், வளர்ச்சி குறைபாடுகள் உள்ள தொந்தரவுகள் ஆகியவை இதனுள் அடங்கும். ஒரு மன நோய்க்குரிய சிகிச்சையானது அதன் அடிப்படை காரணத்தை சார்ந்துள்ளது. ஆலோசனை, உளவியல், ஹிப்னோதெரபி, மருந்துகள், எலெக்ட்ரோக்வூல்சிவ் சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் பல்வகை சிகிச்சை இதற்க்கு அழிக்கப்படலாம். இந்த நோயை தவிர்க்க வாழ்வில் நேரான அணுகுமுறை, தியானம், குழந்தைகளின் கல்வி அதனுடன் பல்வேறு நிகழ்வுகள் தாங்க கூடிய  மன நிலைமை அவசியம். இவைகளுடன் ஆரோக்கியமான உணவுகள், உடல்நலம் மேலாண்மை  நடவடிக்கைகள், பொழுதுபோக்கு ஆகியவற்றினால் மனநோயை கையாளவும் வாழ்க்கை மற்றும் வேலைய சமநிலைப் படுத்தவும் முடியும்.

மன நோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Mental Disorder in Tamil

ஒவ்வொரு வகை மன நோய்களுக்கும் அறிகுறிகள் வேறுபடுகின்றன. அவை கீழ்வருபவை:

கவலையின் அறிகுறிகள் :

கவலையின் அறிகுறிகள் பலவகையானவை. அதில் சில பொதுவான அறிகுறிகள் உள்ளன.

 பதற்றத்தின் வகைகள் :

 • வாழ்க்கை, நிதி, சுகாதாரம் உட்பட நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள் பற்றி தொடர்ந்து கவலை
 • உலவுற்ற தூக்க முறை அல்லது தூக்கமின்மை
 • விவரிக்க முடியாத தலை, உடல் அல்லது தசை வலி
 • உணரக்கூடிய ஒழுங்கற்ற, சத்தமாக மற்றும் விரைவான இதய துடிப்புகள்
 • குமட்டல் மற்றும் மயக்கம்

மனநோயின் அறிகுறிகள்

மனச்சோர்வு அடைந்த மனதிற்குள் நிறைய நிகழ்கிறது. அதில் சில அடக்கப்பட்ட எண்ணங்கள் கண்ணால் கண்டறிய முடியாது. இருப்பினும் சில குறிப்பிட்ட அறிகுறிகள் எச்சரிக்கை ஒலியாக உதவுகின்றன 

 • சோகம் அல்லது வெறுமை போன்ற உணர்வு
 • அதிகமாக சாப்பிடுவது அல்லது பட்டினி கிடப்பது –இதனால் எடை அதிகரிக்கும் அல்லது எடை இழக்கலாம்.
 • அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை
 • விடாது சோர்வு  
 • உடல் வலிகள்
 • செரிமான கோளாறு
 • நம்பிக்கை இழப்பு
 • பயனற்றது போன்ற எண்ணம்.
 • பதற்றம் மற்றும் குற்ற உணர்வு.
 • தற்கொலை எண்ணங்கள்.

ஸ்கிசோஃப்ரினியாவின் அறிகுறிகள்

ஸ்கிசோஃப்ரினியாவின் அறிகுறிகள் நபருக்கு நபர்  வேறுபடுகின்றன, குறிப்பாக இளைஞர்களுக்கும் பெரியவர்களு-க்கும் வேறுபடும்

 • பதின்ம வயதினர்
  •  பிரம்மை (நடக்காதது நடந்தது போன்று தோன்றும்)
  • தூக்கமின்மை
  • ஊடாட்டத்திலிருந்து விலகுதல்
  • ஊகத்தின் பற்றாக்குறை
  • மோசமான கல்வி செயல்திறன்.
 • முதிர்ந்தோர்
  • மாயை (போலியான நம்பிக்கை) மற்றும் பிரம்மை
  • தெளிவற்ற, பொருத்தமற்ற, முழுமையற்ற உரையாடல்கள்.
  • வெறித்தனமான நடத்தை, கோபம் அல்லது தாக்குதல் வெடிப்பு, உணர்ச்சிவசப்படுதல்
  • பராமரிப்பு மற்றும் சுகாதாரம் இல்லாதது
  • சமூக தொடர்புகளை கண்டு கூச்சபடுத்தல்

ஆடிசம் அறிகுறிகள்

ஆட்டிஸ்டிக் வரையெல்லை ஒரு பரந்த அளவிலாக உள்ளது. இந்த வரம்பில் காணக் கூடிய அறிகுறிகள் எண்ணிக்கை ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது. இதனால் பாதிக்கப்படும் பொதுவான மற்றும் முக்கியமான அம்சங்கள் இவையாகும்:

 • தொடர்பாடல்
  இது சில நேரங்களில் இரண்டு வருடங்கள் வரை  தாமதமாகவும் முன்னேராமலும் இருக்கலாம். மேலும் குழந்தைகள் பேசுவதிலிருந்து உளறுவது போல்  பின்வாங்கலாம். கூடுதலாக, பிள்ளைகள் உணர்ச்சியையும் வெளிப்பாட்டையும் தங்கள் தொடர்புக்கு சேர்க்க முடியாமல் போகலாம், பழி சொல்லாக எண்ணவேண்டாம், அழைக்கும்போது பதிலளிக்காமல் இருக்கலாம், தொடர்பு கொள்ளும்போது உணர்ச்சிகளை காட்டமல் இருக்கலாம்.
 • நடத்தை
  குறிப்பிடத்தக்கதாக தொடர்ந்துமீளும்  நடத்தை, தட்டையாக அல்லது அசைந்தாடுதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். விசித்திரமான பொருட்களின் மீது பிணைப்பு பொதுவானது. தொடர்ந்து பல அறிவுறுரைகளை ஒன்றாக கூறினால் புரிந்து கொள்ளமாட்டார்கள் மற்றும் குறுகிய நேரத்திற்கே கவனம் இருக்கும். அவர்கள் திறமை குறைவாக இருக்கும், அவர்கள் பிடியில் இறுக்கம் இருக்காது மற்றும் இயக்கத்தில் தெளிவு இருக்காது. அவர்கள் ஒலிகள், ஒளி மற்றும் தொடுதலுக்கும் எளிதில் பாதிப்படைவார்கள் .
 • சமூக தொடர்பு
  தனியாக இருப்பதும் சமூக தொடர்பை துண்டிப்பதும் இதற்க்கு ஒரு பொதுவான மனபோக்காகும். தனிமையிலே இன்பம் காணுவார்கள், ஒரே செயலை திரும்ப திரும்ப செய்வார்கள். உணர்சிகளை வெளிக்காட்டும்போது கண் தொடர்பு இருக்காது, மேலும் அவசியம் என்றால் ஒரே வார்த்தையில் பதிலளிப்பார்கள்
 •  பின்னடைவு
  முன்னேற்றத்தின் அறிகுறிகளில் காட்டிய பின்னரும் கூட குழந்தை போன்ற நிலைக்குள் நுழைவது என்பதை  பின்னடைவு என்றழைக்கப்படும்

மன ஒடுக்கத்தின் அறிகுறிகள்

ஐ.டி யின் அறிகுறிகள் பொதுப்படையாக கூறுவதில் சிரமமுண்டு, அதன் வகையை பொருத்தது. சில அறிகுறிகள் எல்லாவற்றிலும் காணப்படும். அவை 

 • உட்கார்வது, ஊர்ந்து நிற்பது, நிற்பது, நடை போன்ற செயல்களில் தாமதமான வளர்ச்சி
 • தாமதம் அல்லது தெளிவற்ற பேச்சு
 • வயதுக்கு பொருந்தாத நடத்தை
 • 70 க்கும் குறைவான IQ அளவு.
 • வழக்கமான தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் தன்னையே பார்த்துக் கொள்ளுவதில் இயலாமை
 • நினைவக பற்றாக்குறைகள்
 • நியாயமற்ற தர்க்க ரீதி அல்லது செயல்களின் விளைவை யுகம் செய்ய முடியாத நிலை
 • உணர்ச்சிவசப்படுவது மற்றும் ஆர்வமின்மையின்மை.
 • சார்புநிலை மற்றும் குறைந்த சுய மரியாதை.
 • கவன பற்றாக்குறை, விறைப்பு, மற்றும் விரக்தி
 • சமூக நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்குதல் மற்றும் விலகுதல்

கவனம் பற்றாக்குறை மீச்செயற்பாடு சீர்குலைவின் அறிகுறிகள்

எ.டி.எச்.டி இன் சில மாறுபட்ட அறிகுறிகள் பின்வருபவை :

 • கவன குறைவு
 • செரிவிழப்பு
 • அதிக அளவு திசைதிருப்பல்
 • மறதி
 • பணிகளை நிறைவு செய்ய இயலாமை.
 • வழி முறைகளை பின்பற்ற இயலாமை.
 • நிதானமாக அல்லது அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்-பதில் சிரமம்
 • அமைதியின்மை மற்றும் நெகிழ்வு போக்குகள்
 • மற்றவர்கள் பேசும் போது குறுக்கீடு.

மன நோய் சிகிச்சை - Treatment of Mental Disorder in Tamil

பதற்றத்தின் சிகிச்சை

பதற்றத்தின் சிகிச்சையில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சிகிச்சை முறைகளுக்கு; வெவ்வேறு வழிகளில் எதிர்செயல் நடக்கும். இதன் காரணத்தால் பதட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை பரிந்துரைக்கமுடியாது. இருந்தாலும் பல வகை சிகிச்சை கூடு இணைத்து உபயோகிக்கலாம் 

 • உடல் ரீதியாக ஏதோ ஒரு காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டது அல்ல என்பதை உறுதிப்படுத்த ஒரு முழுமையான மருத்துவ ஆலோசனை அவசியம்
 • அறிகுறிகள் நிவாரணத்திற்கு மருந்துகள் பரிந்துரைக்க-ப்படுகின்றன. தீவிர நிகழ்வுகளில் பதட்டத்தை குறைக்கும்  மருந்துகள் அவசியமாக இருக்கலாம்
 • புலனுணர்வு நடத்தை சிகிச்சை நோயாளிக்கு, அவர்/அவள் அனுபவிக்கும் தன்மையை புரிந்து கொண்டு அதைச் சமாளிக்கவும் மற்றும் சிறந்த வழிகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது

மன சோர்வின் சிகிச்சை

மனசொர்வின் சிகிச்சையில் மூணு பக்க அனுமுகுறை அடங்கும் சிகிச்சையின் முக்கிய கோவை இவை:

 • இதன் சிகிச்சைக்காக மனஅழுத்த-நீக்கிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை பெரும்பாலும் தீவிரம் அடைந்த நிலைமையில் பரிந்துரைக்கப் படுகின்றன, குறிப்பாக குழைந்தகளுக்கு இவை தவிர்க்கபடுகின்றன.
 • தனிப்பட்ட பிரச்சினைகளை சமாளிபதர்க்கும் கையாள்வதர்க்கும் உளவியல் சிகிச்சை கவனம் செலுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில், குழு சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.
 • சகாக்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகிய  ஆதரவு அமைப்புகள், மனச்சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கு நடைமுறை வழிகளைக் கூறுவதில் சிறந்தவை
 • மனநோயின் சில தீவிர சந்தர்ப்பங்களில், எலெக்ட்ரோகான்-விளைவ் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.

ஸ்கிசோஃப்ரினியா சிகிச்சை

ஸ்கிசோஃப்ரினியாவின் சிகிச்சை எதிர்கொள்வதற்கும், முன்னேற்றத்தை உறுதி செய்யவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கபடுகின்றன அதன் சிகிச்சை :

 • மருந்து
  அண்டிசைகொடிக் மருந்துகள் மிகவும் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இது பொதுவான அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது. சிகிச்சையில் மிகக் குறைந்த அளவில் ஆண்டிசைகோடிக்ஸ் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
 • ஏலேக்ட்ரோகன்வோளுசிவ் மற்றும் காந்த சிகிச்சை
  இது பிரமை தோற்றங்களை அனுபவிக்கும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு  பரிந்துரைக்கப்படுகிறது.
 • உளவியல் சிகிச்சை
  இது ஒரு சிக்கலான சிகிச்சை. நடத்தை சிகிச்சை, குழு சிகிச்சை, மறுவாழ்வுக்கான திறன் அடிப்படையிலான பயிற்சி, மது மற்றும் பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடுவது என இந்த சிகிச்சையில் உள்ளது

ஆடிசம் சிகிச்சை

ஆடிசம் சிகிச்சை கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அனைத்து செயல்முறைகளும் தனிப்பட்ட மற்றும் குடும்பத்தை; நிலைமையை சமாளிக்க தயார் செய்யும்  நோக்கத்திர்க்காகவே உள்ளது.

 • நடத்தை மேலாண்மை; விரும்பிய நடத்தை ஊக்குவிக்கவும் , விரும்பாததை குறைக்கவும் உதவுகிறது
 • ஒருவர் அவரது எண்ணங்கள், உணர்வுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஒப்புக்கொள்ள புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை கவனம் செலுத்திகிறது
 • அக்குபெஷனால் சிகிச்சை அடுத்தவர்கள் மீது சார்புநிலை குறைத்து சுதந்திர நிலையை அடைவதற்கு உதவும்
 • பொது உடல் இயக்கங்கள் மற்றும் நுணுக்கமான அசைவு திறன்களுடன் உதவுவதற்கான உடல் சிகிச்சை
 • பேச்சு சிகிச்சையளித்தல் மூலம்  எண்ணங்கள் ,உணர்வுகளின் தெளிவு மற்றும் வெளிப்பாடுகளை மேம்படுத்துதல்
 • சமுதாய திறமை சிகிச்சையில் ஒருவரை சூழலில் ஒருங்கிணைத்து ஊக்குவிப்பதோடு, அர்த்தமுள்ள இணைப்புக்கள் அமைக்கவும் உதவும்
 • ஊட்டச்சத்து சிகிச்சை.,சுகாதாரத்தை மேம்படுத்தவும் குறைபாடு சீர்குலைவை  தடுக்கவும் உதவுகிறது
 • மயக்கங்கள் அல்லது மன சோர்வின் பொது மருந்துகள் பரிந்துரைக்கப் படலாம் •

மன ஒடுக்கத்தின்  சிகிச்சை

ஐ.டி யின் சிகிச்சை,தொடர்ச்சியான ஆலோசனை அமர்வுடன் ஒரு நீண்டகால செயல்முறையாகும். ஐ.டி உள்ள குழந்தைகளுக்கு சிறப்பாக தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் பள்ளிக்கூடத்தின் மூலம் பரிந்துரைக்கப்படுகின்றன. சிறப்பு கல்வியாளர், தன்  தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குழைந்தைக வாழ்க்கை திறன்களை மேம்படுத்துவதற்கு உதவுவார்கள்

ஐடி நிகழ்வுகளில் சரிசெய்வதற்கான முக்கிய நிபந்தனைகள், குழந்தைகளுக்கு சாத்தியமான அளவிற்கு கற்றல் அனுபவத்தை நடைமுறைப்படுத்தவது, சமூக திறன்கள் மற்றும் வாழ்க்கை திறன்களை மேம்படுத்தவது. அதை அடைவதற்கு பின்வரும் சிகிச்சைகள் சில சேர்க்கப்படலாம்:

 • கலந்தாய்வு
 • தொழில் சிகிச்சை
 • நடத்தை சிகிச்சை
 • மருந்துகள் (மிகவும் அரிதாக)

எ.டி.எச்.டி யின் சிகிச்சை

இதற்க்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. உதரணமாக இயற்கை வைத்தியம் மாற்று சிகிச்சைகள் உட்பட. கிளர்ச்சியுட்டி மற்றும் கிளர்சியுட்டி இல்லாத மருந்துகள் மூளையில் உள்ள டோபமைன் அளவுகளை அல்லது நோரிபயின்ஃபைரன் அளவுகளை அதிகரிக்க பரிந்துரைக்கப் படுகிறது. நன்மைகள் இருந்தாலும்கூட, ​​சில பக்க விளைவுகள் இருக்கலாம்.

ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சியில் ஈடுபாடு, மற்றும் முறையான தூக்கம் ஆகியவை இயற்க்கை வயித்தியத்தில் அடங்கும். யோகா மற்றும் தியானம் போன்ற நடவடிக்கைகள் கவனக்குறைவு சரிசெய்யும் மற்றும் மன தளர்ச்சியில் இருந்து மீட்டு எடுக்க முடியும் மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Mental Disorders
 2. American Psychological Association [internet] St. NE, Washington, DC. Anxiety.
 3. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Anxiety Disorders. National Institutes of Health; Bethesda, Maryland, United States
 4. National Institutes of Health; [Internet]. U.S. Department of Health & Human Services; Understanding Anxiety Disorders.
 5. American Psychiatric Association [Internet] Washington, DC; What Are Anxiety Disorders?
 6. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Depression. National Institutes of Health; Bethesda, Maryland, United States
 7. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Depression
 8. Markowitz, J.C., Weissman, M. (2004, October). Interpersonal psychotherapy: principles and applications. World Psychiatry. 3(3): 136–139. Retrieved from http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1414693/. PMID: 16633477
 9. Fischer BA, et al. Robert W Buchanan. Schizophrenia in adults: Clinical manifestations, course, assessment, and diagnosis; [Internet]
 10. Health Harvard Publishing, Published: June, 2010. Harvard Medical School [Internet]. Schizophrenia treatment recommendations updated. Harvard University, Cambridge, Massachusetts.
 11. Stone WL, Basit H, Los E. Fragile X Syndrome. [Updated 2019 Apr 25]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-
 12. Am Fam Physician. 2008 Dec 1;78(11):1301-1305. [Internet] American Academy of Family Physicians; AAP Releases Guidelines on Identification of Children with Autism Spectrum Disorders.
 13. Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human; National Health Service [Internet]. UK; What are the treatments for autism?
 14. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Facts About Intellectual Disability
 15. National Institutes of Health; [Internet]. U.S. Department of Health & Human Services; Intellectual and Developmental Disabilities.
 16. Bonath B, et al. (2016). Regional gray matter volume differences between adolescents with ADHD and typically developing controls: Further evidence for anterior cingulate involvement. DOI: J Atten Disord. 2018 May;22(7):627-638. PMID: 26748338
 17. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Attention-Deficit/Hyperactivity Disorder. National Institutes of Health; Bethesda, Maryland, United States
 18. Zylowska L, et al. (2007). Mindfulness meditation training in adults and adolescents with ADHD: A feasibility study. DOI: J Atten Disord. 2008 May;11(6):737-46. Epub 2007 Nov 19. PMID: 18025249

மன நோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for மன நோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.