பொட்டாசியம் குறைபாடு என்றால் என்ன?
பொட்டாசியம் குறைபாடு என்பது மருத்துவ ரீதியாக ஹைபோகலேமியா என்று அறியப்படும் ஒரு அறிய நிலையாகும். இந்நிலையில், உடலில் பொட்டாசியம் கனிம சத்து குறைவாகக் காணப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சில அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் தோன்றுகின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொட்டாசியம் குறைபாட்டின் முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறியானது அதிகமாக வேலை அல்லது உடற்பயிற்சி செய்யாத போதிலும், உடல் முழுவதும் பலவீனமாகவும் மிகுந்த சோர்வாகவும் காணப்படுவது தான். இதன் பிற குறிப்பிட்டதகுந்த அறிகுறிகள் பின்வருமாறு:
- உணவு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுதல் (மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புச பிரச்சனைகள்.
- தசை பிடிப்புகள் மற்றும் விறைப்பு.
- படபடப்பு (குறிப்பிடத்தக்க வேகமான, சீரற்ற மற்றும் சத்தமான இதயத்துடிப்பு).
- சுவாசிப்பதில் சிரமம்.
- மூட்டுகளில் உணர்வின்மை அல்லது கூரிய கூச்ச உணர்வு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பல மருத்துவ நிலைகள் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் பொட்டாசியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கக்கூடும். இக்குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் சில பின்வருமாறு:
- கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி.
- அதிக அளவிலான இரத்த இழப்பு.
- சிறுநீரக கோளாறு அல்லது சிறுநீரக செயலிழப்பு.
- லுகேமியா (ஒரு வகையான இரத்தப்புற்றுநோய்).
- ஆஸ்துமா மற்றும் காற்றேற்ற விரிவின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து மாத்திரைகளும் பொட்டாசியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கக்கூடும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருப்பின், மருத்துவர் இரத்ததில் உள்ள பொட்டாசியம், கால்சியம் மற்றும் பிற கனிமங்களின் அளவைக் காட்டக்கூடிய இரத்த பரிசோதனை போன்ற சில பரிசோதனைகளை செய்ய பரிந்துரைப்பார்.
சீரற்ற இதயத் துடிப்பு இருப்பின், எலக்ட்ரோகார்டியோகிராம் (ஈசிஜி) பரிந்துரைக்கப்படலாம், ஏனெனில், பொட்டாசியம் குறைபாடு இதய துடிப்பை பாதிக்கிறது.
இந்நிலைக்கான சிகிச்சை மிகவும் எளிமையானதாகும் மற்றும் இதனால் அறிகுறிகளில் விரைவான முன்னேற்றம் காணப்படுகிறது. நோயாளியின் நிலை மற்றும் அவருக்கு தோன்றும் அறிகுறிகளின் அடிப்படியில், மருத்துவர் பல மருந்துகளை பரிந்துரை செய்யவார். இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவு அபாயம் விளைவிக்கும் வகையில் மிகவும் குறைவாக இல்லாத போது, பொட்டாசியத்தின் சமநிலையை மீட்பதற்கு பொட்டாசியம் உப்புகளுடன் கூடிய சில மாத்திரைகள் அல்லது திரவ (சிரப்) மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
நிலைமை மோசமாக மற்றும் நோயாளிக்கு படபடப்பு இருக்கும் பட்சத்தில், பொட்டாசியம் நரம்பு வழியாக உட்செலுத்தப்படுகிறது.
மது அருந்துதலை முற்றிலுமாக தவிர்த்தல் அல்லது அதனை குறைத்துக்கொள்ளுதல் பொட்டாசியம் குறைபாடு ஏற்படுவதற்கான அபாயத்தை தவிர்க்க உதவுகிறது. அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த சமச்சீரான உணவு திட்டத்தை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.