நுரையீரல் உயர் இரத்த அழுத்தம்(பல்மனரி ஹைபர்டென்ஷன்) என்றால் என்ன??
நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் எனப்படுவது, நுரையீரலின் தமனிகள் தடிமனாகி மற்றும் அதன் பாதை குறுகுவதால், இரத்தக் குழாயில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுகிற ஒரு நோய் நிலை ஆகும். இதனால், நுரையீரல்களுக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் போதுமான இரத்தத்தை இதயம் பம்ப் செய்து வெளியேற்றுவதற்கு கடினமாகிறது. இதயம் தொடர்ந்து கடினமாக இயங்கும் நிலையில் இறுதியில் அது முற்றிலும் பலவீனமடைந்து துடித்தலை நிறுத்துகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுளோர், பொதுவாக சோர்வுற்றும், தொடர் பணிகள் அல்லது உடற்பயிற்சிகள் செய்வதில் கடினமாக உணர்வர். உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய இந்நோய் நிலையின் மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- தொடர் குறைந்த இரத்த அழுத்தம்.
- மார்பக பகுதியில் அழுத்தம் உணர்வது.
- நீண்டகாலம் இருக்கும் இருமல்.
- மூச்சுத்திணறல் மற்றும் இதயத் துடிப்பு வீதம் வேறுபடுதல்.
- கால்கள், முழங்கால், பாதம் மற்றும் வயிறு வீக்கம்.
இதன் முக்கியக் காரணங்கள் என்ன?
நுரையீரல் உயர் இரத்த அழுத்தம்(பல்மனரி ஹைபர்டென்ஷன்) வருவதற்கு முக்கிய காரணம், நுரையீரலின் தமனிகள் தடிமனாகி அதன் பாதை சிறியதாவதால், இரத்தம் இரத்தக்குழாய்களில் பாய்வது கடினமாகி, நுரையீரல் இரத்தக் குழாயில் இரத்த அழுத்தம் கூடுகிறது. நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில் பின்வருவதும் அடங்கும்:
- வால்வு குறைபாடுகள் போன்ற இடது பக்க இதய நோய்கள், பெருந்தமனிக் குறுக்கம் போன்ற நோய்கள்.
- நாட்பட்ட நுரையீரல் அடைப்பு போன்ற நுரையீரல் நோய்கள் மற்றும் குருதி நாளங்கள் சார்ந்த அடைப்பு உண்டாக்கும் நோய்கள்.
- எச்ஐவி நோய்த்தொற்று.
- தவறான மருந்து பயன்பாடு.
- தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்யாமை.
- தோல் தடிப்பு(ஒரு வகை தன்னுடல் தாக்கு நோய்).
- நுரையீரல் தமனிகளை அடைக்கும் கட்டிகள்.
இதனை எவ்வாறு கண்டறிவது மற்றும் சிகிச்சையளிப்பது?
மருத்துவர் உடலை முக்கியமாக இதயம் மற்றும் நுரையீரலை பரிசோதனையை செய்வார். குடும்பம் மற்றும் மருத்துவ பின்புலத்தை கேட்டு தெரிந்து கொள்வார். நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோய் இருப்பது சந்தேகிக்கப்படும் பொருட்டு, மருத்துவர் இன்னும் கீழ்க்கண்ட உறுதியான சோதனைகளை பரிந்துரைக்கலாம்:
- மார்பக எக்ஸ்ரே.
- 2டி எக்கோகார்டியோகிராம்.
- நுரையீரல் தமனிகளில் சரியான இரத்த அழுத்தத்தை அளவிட இதய வடிகுழாய் சோதனை.
- இதயத்தின் தாளத்தையும் செயல்பாட்டையும் சரிபார்க்க ஒரு மின்-கார்டியோகிராம் (ஈசிஜி) பரிந்துரைக்கப்படுகிறது.
- வேறு நோய்நிலையை கண்டறிவதற்காக இரத்த பரிசோதனை.
இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நுரையீரல் தமனிகள் குறுகுவதை தடுக்கவும், அடைப்புகளை நீக்கவும் மருந்துகள் இருக்கின்றன. இந்நிலையில் உபயோகிக்கப்படும் மருந்துகள் பின்வருமாறு:
- வார்ஃபரின் பரிந்துரைக்கப்படுகிறது, இது இரத்தம் இரத்தகுழாய்களில் மெலிதாவதை தடுக்க உதவுகிறது மற்றும் உறைவதை தடுக்கிறது.
- உடலின் அதிகப்படியான திரவம் சுரப்பதை தடுக்க சிறுநீர்ப்போக்கிகள் கொடுக்கப்படலாம்.
- சுண்ணாம்பு பாதை அடைப்பான்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.
- இதய செயல்பாட்டை அதிகப்படுத்த டைகோக்ஸின் மருந்து.
நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் தீவிரமான நிலையில் ஸ்டெம் செல் சிகிச்சை அல்லது நுரையீரல் மாற்று சிகிச்சை மருத்துவரால் செய்யப்படலாம்.